Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 25 - வினோதா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

25. என்றென்றும் உன்னுடன்... - 01 - வினோதா

Endrendrum unnudan

மைத்ரேயி அறையில் மித்ரனை எதிர்பார்த்திராத சரண்யா ஒரு வினாடி திகைத்துப் போனாள்!

அது பற்றி தெரியாத மித்ரன் அவளை பார்த்து எப்போதும் போல புன்னகைக்கவும் அவளின் மனதில் மெல்லிய அமைதி தோன்றி பரவியது...

தானாக அவளின் உதடுகளில் அவனுக்கான பதில் புன்னகை ஒன்று உதயமானது!

ஆனால் முந்தைய இரவில் எடுத்திருந்த முடிவு நினைவில் வரவும் அவசரமாக மித்ரனை விட்டு பார்வையை திருப்பினாள்!

“வர சொன்னீங்க மேடம்!” என்றாள் மைத்ரேயியை பார்த்து...

“சரண்யா ஐஐடி போற வேலை வேணும்னு கேட்டீயாமே??? எதுக்கு??? நான் தான் உனக்கு அந்த மாதிரி வேலை எல்லாம் இனி கொடுக்க வேண்டாம்னு சொல்லி இருந்தேன்...”

“எனக்கு அந்த வேலை பிடிச்சிருக்கு மேடம்...”

“ஆனாலும் அலைச்சல் தானே???”

“பரவாயில்லை மேடம்... இருக்கட்டும்... நிறைய கத்துக்க முடியுது... புதுசா நிறைய தெரிஞ்சுக்க முடியுது....”

“சொன்னா கேளு சரண்யா.. அப்புறம் என் அண்ணன் என்னை கேவலமா திட்டுவான்... என் வருங்கால மனைவியை இப்படி அலைய விடுறீயேன்னு கோபப் படுவான்...”

சரண்யாவின் விழிகள் தடுமாற்றத்துடன் மித்ரனின் பக்கம் சென்று வந்தது...

ரண்யா அந்த அறைக்கு வந்தது முதலே அவளின் முக மாற்றங்களை கவனித்துக் கொண்டிருந்த மிதரனுக்கு அவளிடம் இருந்த தயக்கம் + பதற்றம் புரியாமல் இல்லை...

ஆனால் எதனால் இந்த தயக்கம் & பதற்றம் என்பது புரியவில்லை...

நேற்று அவளிடம் இரவு வணக்கம் சொன்ன போது கூட சாதாரணமாக தானே இருந்தாள்... அதன் பிறகு என்ன???

மித்ரன் யோசித்தபடி எழுந்து ப்ளைன்ட்ஸ் மூடி இருந்த ஜன்னலின் பக்கமாக போய் நின்றான்...

ப்ளீஸ் மேடம்... இந்த மாதிரி எல்லாம் எதுவும் சொல்லாதீங்க... நான் எல்.கே.ஜி போற பொண்ணுக்கு அம்மா... அதை ஞாபகம் வச்சுக்கோங்க...” என்றாள் சரண்யா தயக்கத்துடன்.

தயங்கி தயங்கி அவள் சொன்ன விஷயம் மைத்ரேயியை ஆச்சர்யப் படுத்தியது!

“என்ன சரண்யா, திரும்ப முதல்ல இருந்து ஸ்டார்ட் செய்ய போறீயா??? பாவம் மித்ரன்...”

“நான் ரொம்ப சீரியஸா பேசுறேன் மேடம்... இந்த பேச்சு வேண்டாம் ப்ளீஸ்...”

மைத்ரேயி மித்ரனை பார்த்தாள்.

அவனோ சுவரில் சாய்ந்து நின்றபடி சரண்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான்...

இவன் ஏன் எதுவும் கேட்காமல் அமைதியாக இருக்கிறான்???

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மித்ரனை போல அமைதியாக இருக்க மைத்ரேயிக்கு மனம் வரவில்லை...

“என்ன ஆச்சு சரண்யா? யாரவது ஏதாவது சொன்னாங்களா???”

“அதெல்லாம் இல்ல மேடம்... எனக்கு எப்போவும் கோபி மட்டும் தான்... என் மனசில அவருக்கு மட்டும் தான் இடம் இருக்கு... அவரோட இடத்துக்கு வேற யாரும் வர முடியாது... இந்த பேச்செல்லாம் வேண்டாமே மேடம்...”

ரண்யா சொன்ன ‘அவரோட இடத்துக்கு வேற யாரும் வர முடியாது...’ அவளின் மனதில் இருக்கும் போராட்டத்தை மிதரனுக்கு சொல்லாமல் சொன்னது!!!!!

மித்ரன் அதை பற்றி யோசிக்க, மைத்ரேயி சரண்யாவை விடாமல் கேள்வியால் துளைத்தாள்!

“கோபிக்கு மட்டும் தான் இடம் இருக்குன்னா, அப்போ நிஷா??”

“அது வேற, இது வேற”

“ஆமாம் அதே தான் நான் சொல்ல வரதும்... அது வேற இது வேற... இனிமேல் உன் எதிர்காலத்தை பத்தி யோசி...”

“மேடம் ப்ளீஸ்... இந்த பேச்சு இப்போ எதுக்கு???”

“சரண்யா, மித்ரனுக்கு உன்னை பிடிக்குங்குறது உனக்கே நல்லா தெரியும்... உனக்கு ஏதாவது கேள்வி, குழப்பம் இருந்தா என்னன்னு சொல்லு... அதை பத்தி பேசுவோம்... ஏன் திடீர்னு வேற மாதிரி பேசுற???”

மித்ரன் முன்னிலையில் இதை எல்லாம் பேச சரண்யாவிற்கு என்னவோ போல தான் இருந்தது... ஆனால் அவள் பேசி தான் ஆக வேண்டும்... வேறு வழி இல்லை...!!!!

மனதை திடப் படுத்தி,

“எனக்கு ஒரு குழப்பமும் இல்ல மேடம்! நான் தெளிவா தான் இருக்கேன். அவர் எங்க கூட இல்லைங்குறதை தவிர நானும் நிஷாவும் சந்தோஷமா தான் இருக்கோம்...” என்றாள்.

“சந்தோஷமா??? பொய் சொல்லாதே சரண்யா... கோபி மேல உனக்கிருக்க அன்பு எனக்கும் தெரியும். அதுக்காக நீ எப்போவும் அப்படியே இருக்கனும்னு சொல்றது சரியில்லை.. கோபியே அதை விரும்ப மாட்டார்... நீ இன்னொரு வாழ்க்கை அமைச்சுக்க நினைக்குறதை புரிஞ்சுப்பார்...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "என் வாழ்வே உன்னோடு தான்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“நீங்க சொல்றது ஒரு விதத்துல சரி தான் மேடம்... கோபி என் பக்கத்தில இல்லைனாலும் இவ்வளவு நாளா எனக்கு ஏதாவது ஒரு விதத்தில செய்தி கொடுத்திட்டே தான் இருக்கார்... நான் உங்களை தேடி வந்து வேலை கேட்டதே அதுக்கு உதாரணம்...”

“சரி, அப்போ???”

“நான் என் வாழ்க்கையில வேற மாதிரி முடிவு எடுக்கனும்னா அவரே எனக்கு சொல்வார்...”

“முட்டாள் மாதிரி பேசாதே சரண்யா...” என மைத்ரேயி சரண்யாவை கடிந்துக் கொண்டாள்...

னால், சரண்யா மைத்ரேயியிடம் சொன்னதைக் கேட்ட மித்ரனின் மனதினுள் பல விதமான எண்ணங்கள் அலைமோதின...

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 25 - வினோதாAnnie94 2019-02-10 03:23
A pleasant update that was worth the wait... Eagerly waiting to know wat happened next... Seekiram update kudungaaa bindu mam...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 25 - வினோதாThenmozhi 2019-02-06 23:55
Nice Binds.

Mithranoda questions-ku intha mathiri oru answer nan expect seiyalai.
antha part padichu ipadiyum nadakumanu yosikum pothe athukum ningale pathil solitinga :-)
Nice anticipation :-)

Gopi oda appavai Nalini tackle seivanganu ethirparthen. Mithrane seiya porara. Avaruku oru good luck :-)

Saranya Mithranai name solli koopidura idam, Mithran yen avanga in-laws kita pesi thitu vanganumnu feel seira idam etc speaks abt her affection for him. very sweet.

apadi name soli kupitu bye matum solrangale, pavam hero evalo yosichu evalo pesurar, inum 2-3 words pesa solunga :-)

And Maithreyi my kinda person (y)

hoping to read the next epi (final epi :Q: :Q: ) soon
Reply | Reply with quote | Quote
+1 # EEUO1Indhusri 2019-02-06 13:11
after a long time update aanalum such a pleasant update
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 25 - வினோதாsaaru 2019-02-04 17:26
Thanks for update bindu
Nice and cute
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 25 - வினோதாmadhumathi9 2019-02-04 15:55
wow nice epi.saranyaavin manathu maaruma :Q: wait & see. :thnkx: 4 this epi.waiting to read more. :GL: adutha epi seekkiram koduppeergala?
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 25 - வினோதாSAJU 2019-02-04 14:23
wow super ud sis
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 25 - வினோதாSrivi 2019-02-04 12:57
Wow.. Update after a very long time.. sikram indha storya mudichirunga sis..cool update..
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top