(Reading time: 9 - 17 minutes)

பவளப்பாறைகளை அழிக்கிற மீனுக்காக நாம ஒரு ஊசி மருந்து கொண்டு வந்தோமே ! அதை செலுத்தியதும் அந்த மீனை அழிக்கறதோ இல்லை கடலோட குறிப்பிட்ட பகுதியிலே வெப்ப மட்டத்தை உயர்த்தி யுரேனியத்தை உருக்கி அவங்க ரெடி பண்ண சுரங்கத்தில் சேமிச்சு வைக்கிறாங்க. இதை நான் அங்கே அந்த சுரங்கத்தில் தான் கண்டுபிடிச்சேன் அதுமட்டுமல்ல உத்ரா நாம முதல்நாள் சைட் சீயிங்போனோமே அப்போ நம்மளை ஒரு திமிங்கலம் துரத்தியதே நினைவிருக்கா அது உண்மையானது இல்லை அதுவும் இவங்களோட செட்டப்தான். 

பாலிதீன் பையோட முடிச்சு சுரங்கத்தில் ஏதோஒரு மூலையில் விரிசல் விட எனக்கு சுவாசிக்க கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. ஆனா அதுக்குள்ளே என்னைக் நோக்கி அந்த திமிங்கலம் வர ஆரம்பிச்சிட்டது. அவ்வளவோதான் திமிங்கலத்திற்கு இன்னைக்கு நான் ப்ரைதான்னு நினைச்சிட்டு இருந்தேன் வெகு அருகில் இருந்த என்னை அது கண்டுக்கவே இல்லை, ஏதோ மயக்கம் செலுத்தப்பட்டதைப் போல அது ஒரு உள்ளடுக்கு அறைக்குள் போச்சு அங்கே நல்ல அனல் ..... நம்ம கன்ட்ரோல் ரூம் போல அங்கேயும் சில கணிப்பொறிகள் அப்பறம்

உன்னோட டிடெக்டிவ் மூளை உயிர்பெற்று இருக்கும் நீ உடனே செட் வேகத்திலே போயிருக்குமே, தனியா போய் மூக்கை உடைச்சிகிட்டு ....

கரெக்ட்டா கழுகுக்கு மூக்குல வேர்த்தாமாதிரி உடனே உனக்கு வேர்த்துடுமே பரத் உத்ராவுக்கும் உனக்கும் கல்யாணம் ஆகிறவரைக்கும் அவ என்னோட சொத்துதான் என்ன உத்ரா

கரெக்ட்.....

நல்லாயிருந்தா பெபிகால் போட்டு ஒட்டிக்கிறது இல்லைன்னா, கத்திரிக்கோல் மாதிரி வெட்டிக்கிறது உங்க கூட்டத்திலே நானும் சேர்ந்து கொள்ளலாமா ? என்று சிரிப்புடன் உள்ளே நுழைந்தான் அலெக்ஸ் 

வாங்க அலெக்ஸ் இரண்டு பெண்களும் சேர்ந்துகிட்டு என்னை ஓட்டுறாங்க நீங்க வந்தது எனக்கு பெரிய ப்ளஸ்

ஆமாம் ஆமாம் அப்படியே ஓட்டிட்டாலும் என்ன மிஸ்டர் அலெக்ஸ் உங்க தோளில் ஒருத்தங்க ஒட்டிட்டே இருப்பாங்களே அவங்களை இறக்கி வைச்சிட்டு வந்திட்டீங்களா ?

அடக்கடவுளே பத்மினி அவ ஏஞ்சல் வேதாளம் இல்லை என் முதுகுகிலேயே தொங்கிகிட்டு இருக்க ..... கூட்டிட்டு வரும்போது தலைசாய்ந்து சோமாலியா பட்டினியில கிடந்தாமாதிரி இருந்த பொண்ணு கொஞ்சம் சாப்பாடும் ஓய்வும் வந்ததும் என்ன போடு போடுது...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இவ சாப்பிடறது இவளோட பேச்சுகே பத்தாது இப்போதான் காபி உள்ளே போயிருக்கு அடுத்து கொஞ்சம் ஏமாந்தா நம்ம இரண்டுபேரையும் கூட முழுங்கிடுவா

பரத் கிண்டலடிக்க கையிலிருந்த டம்ளரால் நொட்டென்று தலையிலேயே அடித்தாள் பத்மினி...!

சரி விளையாட்டு இருக்கட்டும் அலெக்ஸ் உங்க நண்பர் சத்யா என்னானார் ?

ம்...இந்த துப்பறியும் சிங்கம் தான் எல்லாத்தையும் பக்காவா கண்டுபிடிச்சி சொல்லிட்டதே இனிமே சட்டத்தின் பிடியில் இருந்து அவங்க தப்பிக்க முடியாதே

அப்போ சத்யாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா பரத்.....

ம்... உன்னோட வேலை உண்மையில் அபாரம் பத்மினி நான் அந்த இடத்தில் இருந்திருந்தா கூட இத்தனை கிளவரா வேலை பார்த்து இருப்பேனான்னு தெரியலை. அந்தளவுக்கு நீ எனக்கு ஹெல்ப் பண்ணியிருக்கே. உயிரைக் கையில் பிடிச்சிகிட்டு நம்ம நாட்டுக்கு நேர விருந்த பெரிய ஆபத்தில் இருந்தும் எனக்கு துரோகம் செய்தவங்களை அடையாளம் காட்டியும் நீ பண்ணது ரொம்ப பெரிய விஷயம். அதுக்கு நான் பர்சனலா ஒரு நன்றி சொல்லியே ஆகணும். 

சரிதான்.... முதல்ல காலை வாரும் படலம் இப்போ நன்றியுரைக்கும் படலமா, பத்மினி கண்ணடித்தாள்.

ப்ரியன் என்னானான் ?

அவனோட கெடுதலுக்கான செயலுக்கு நல்ல பலனை அனுபவிச்சிட்டான். அந்த சுரங்கத்திற்குள்ளே நான் போறதுக்கு முன்னாடி நடந்ததைப் பற்றி உன்கிட்டே சொன்னேன் இல்லையா உத்ரா அங்கே போய் நான் முதலில் ஆப்பண்ணது கம்யூனிகேஷனைத் தான் கேமிரா உட்பட என்னைப் பொறுத்தவரையில் அங்கே நடப்பதை யாரோ கண்காணிக்கிறாங்கன்னு ஒரு நினைப்பு அதுக்கேற்றாமாதிரி ப்ரியன்தான் அதைக் கண்காணிச்சி இருக்கணும். என்னால அங்கிருந்து யாரையும் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலையில் நான் என்ன செய்ய முடியும். வருவது வரட்டும் சப்போஸ் அங்கு தப்பு நடந்திருந்தா நிச்சயம் எனக்கு பெரிய ஆபத்து வருன்னு எனக்குத் தெரியும். கண்ணுக்குத் தெரியாத இடத்தில் அநாதையா சாகறதை விட வேறே ஏதாவது வாய்ப்பு கிடைக்குமான்னு பார்த்தேன் அதன்படி ப்ரியனும் வந்தான். 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இந்த சதிக்கெல்லாம் காரணம் அவன்தான்னு எனக்கு உறுதியா தெரிந்தது அதுக்கு பிறகு நடந்தைதான் என்னால நம்பவே முடியலை

என்னாச்சு 

ப்ரியனை அதன்பிறகு நான் உயிரில்லாமத்தான் பார்த்தேன். உனக்கு தெரியுமா பரத் இனிப்புக்கு மொய்கிற எறும்புகள் மாதிரி அந்த குட்டி குட்டி மீன்கள் லபக்குன்னு அவனை கூட்டிட்டுப் போச்சு. 

ஒருத்தன் செத்தது உனக்கு எத்தனை சந்தோஷமா இருக்குல்ல, 

அவனெல்லாம் சாக வேண்டியவன்தான் பரத் அலெக்ஸ் பேசிவிட்டு இப்போ சத்யாவோட நிலைமை என்னன்னு உங்களுக்குத் தெரியாதே ? என்று தன் கையில் இருந்து மொபைலைக் காட்டினான் அலெக்ஸ்

இன்னும் ஒரு அத்தியாயம் நீள்கிறது. ...

அடுத்த காதல் இளவரசி இரண்டாம் பாகத்தை தொடங்கலாம் என்று நினைக்கிறேன் உங்களின் ஆதரவிற்காய் காத்திருக்கிறேன்

அடுத்த அத்தியாயத்தில் முற்றுப்பெறும்

Episode # 25

Episode # 27

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.