(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - சிவகங்காவதி - 01 - ஸ்ரீ

sivaGangavathy

சரித்திர கால காதல் எப்படி இருந்திருக்கும் என்பதான ஒரு கற்பனையே இந்த சிவகங்காவதி.சரித்தித்தோடு சேர்ந்த நம் இலக்கியமும் நம் கதைக்கு அழகூட்டும் விதமாக ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் அகத்தினை விவரங்களைக் கொண்ட ஐந்குறுநூறு பாடல்களை அதன் இரு வரி விளக்கத்தோடு பகிர்கிறேன்.

தாய்க்கு உரைத்த பத்து

அன்னை வாழி வேண்டன்னை உதுக்காண் 

ஏர்கொடிப் பாசடும்பு பரிய ஊர்புஇழிபு 

நெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள் 

பூப்போல் உண்கண் மரீஇய 

நோய்க்கு மருந்தாகிய கொண்கன் தேரே

(உதுக்காண் = அதோ பார்; பாசடும்பு = பசிய அடப்பங்கொடி; பரிய = வருந்துமாறு; ஊர்பு இழிவு = ஏறியிறங்கி; உண்கண் = மையுண்ட கண்; கொண்கன் = கணவன்)

என்ற பாடலில் தலைவியின் பிரிவு நோய்க்கு மருந்தாகிய தலைவனின் தேர் வந்து விட்டது என்று தோழி செவிலியிடம் கூறும் ஆறுதல் செய்தி இடம் பெற்றுள்ளது.

கி.பி 1630 ஆண்டு பாண்டிய தேச பகுதிகளின் ஒன்றான மதுரை, நாயக்கர்களின் ஆட்சியில் சிறந்து விளங்கியது.நாயக்கர்கள் விஜயநகர பேரரசின் ஆட்சிகாலத்தில் அரசு பிரதிநிதிகளாய் இருந்தவர்கள்.விஜயநகர பேரரசு வலுவிழந்து ஆட்சி முடியும் நேரம் தங்களுக்கான பகுதிகளில் பலப்படுத்தி நாயக்கர்கள் ஆட்சியை நிலைநாட்டிக் கொண்டர்.

விஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவர் நாகம நாயக்கர். இவருடைய மகன் விசுவநாத நாயக்கர். கிருஷ்ண தேவராயரிடம் பணிக்குச் சேர்ந்த விசுவநாத நாயக்கர், பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அக்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின. அதனை அடக்குவதற்காக விசுவநாத நாயக்கர் படையுடன் அனுப்பிவைக்கப்பட்டார் . எடுத்த பொறுப்பைச் செவ்வனே முடித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தின் நிர்வாகியாக அமர்த்தப்பட்டார். இவருடைய பரம்பரையினரே மதுரை நாயக்கர்கள் என அழைக்கப்பட்டவர்கள்

நாயக்கர்கள் அரச பொறுப்பில் இருந்தாலும் பெரும்பாலும் அவர்களுக்கு கீழான நகரங்கள் பாளிகார் என்றழைக்கப்பட்ட பாளையக்காரர்களின் கண்காணிப்பிலேயே இருந்தது.

பாளையம் (ஆட்சி நிர்வாக முறை)"பாலாமு” என்கிற தெலுங்கு மொழிச் சொல்லிலிருந்து பாளையம் என்ற சொல் உருவானது. பாலாமு என்றால் படை முகாம் என்று பொருள்படும். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும்.அதன் தலைவர்களே பாளையக்காரர்கள் என அழைக்கப்பட்டனர்.

மண்டல அரசு, ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைப் பாளையக்காரர்களின் நிர்வாகப் பொறுப்பில் விடும். இதற்குப் பதிலாகப் பாளையக்காரர்கள் அரசின் பாதுகாப்புக்காகத் தேவையான இராணுவ வளங்களைக் கொடுக்கவேண்டும். பாளையப்பட்டுகளுக்குள் அடங்கும் நிலங்களுள் ஒருபகுதியைத் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளும் பாளையக்காரர்கள், மிகுதியை, இராணுவ வளங்களைத் திரட்ட உதவக்கூடிய செல்வாக்குள்ள குடிமக்களில் சிலருக்குப் பிரித்து வழங்கினர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிரேமாவின் சுப்பையாவின் "உன்னில் தொலைந்தவன் நானடி..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

தங்களுடைய நிர்வாகத்துக்குள் அடங்கிய பகுதியில் ஓரளவு சுயமான அதிகாரத்துடன்கூடிய ஆட்சியதிகாரம் பாளையக்காரர்களுக்கு இருந்தது. பாளையப்பட்டுகளுக்கெனத் தனியான நிர்வாக அமைப்பும் இருந்தது. இந்த அமைப்பிலே பாளையக்காரர்களின் கீழ் அமைச்சராகவும், படைத் தளபதியாகவும் செயற்படக்கூடிய தளவாய் ஒருவரும், பாளையப்பட்டுக்கு மேலுள்ள அரசு தொடர்பான விடயங்களைக் கவனிக்கத் தானாபதி ஒருவரும் இருந்தனர்.

பாளையங்களின் பாதுகாப்பு, நிருவாகம், சட்டம் ஒழுங்குப் பராமரிப்பு, வரி வசூலிப்பு போன்ற விடயங்களில் பாளையக்காரர்களுக்கு உரிமைகள் இருந்தன. படை திரட்டி அவற்றைப் பாராமரிக்கவும், பாளயத்தின் பாதுகாப்புக்காகக் கோட்டைகளைக் கட்டிக்கொள்ளவும், நீதி விசாரணைகளை நடத்தித் தீர்ப்பு மற்றும் தண்டனைகள் வழங்கவும் பாளையக்காரர் அதிகாரம் பெற்றிருந்தனர்.

தங்களுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் குடிமக்களிடம் வரி அறவிடும் உரிமை இவர்களுக்கு இருந்தது. இவ்வாறு அறவிடப்படும் வரி, மன்னருக்கான கொடுப்பனவு, பாளையக்காரர்களின் சொந்தச் செலவு மற்றும் பாளையத்து நிர்வாகச் செலவு என்பவற்றுக்காகச் சமமாகப் பங்கிடப்பட்டது.

முழு நாட்டின் பாதுகாப்புக்காகவும், வலிமைப் பெருக்கத்துக்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும், நாட்டின் மன்னர்கள் ஈடுபடும் போர்களில் உதவியாக நின்று போர்புரிந்து வெற்றி தோல்விகளைப் பாளையக்காரர்கள் தீர்மானித்துள்ளார்கள்.

அரசுரிமைப் போட்டி, உள்நாட்டுக் கலகங்கள் போன்றவற்றிலும் பாளையக்காரர்களின் பங்கு பல சந்தர்ப்பங்களில் முக்கியமானதாக இருந்ததுண்டு. பிற்காலங்களில் மன்னர்கள் அந்நியர் ஆதிக்கங்களுக்குப் பணிந்த பின்னரும், பாளையக்காரர்கள் அவர்களை எதிர்த்து நின்ற வரலாறுகளும் உண்டு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.