(Reading time: 13 - 26 minutes)

முகலாயர்களின் ஆட்சி தேசம் முழுவதுமே பரந்து விரிந்திருந்த தருணம்.தென் இந்தியா உட்பட அனைத்து அரசர்களையும் தோற்கடித்து ஆட்சியை பிடித்தவர்களுக்கு தென் தமிழகத்தில் காலூன்றுவது அத்தனை எளிதாய் இருக்கவில்லை.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதுவே அவர்களின் கோபத்தையும் அதிகரித்திருந்தது.பாளையகாரர்களை மீறி ஒன்றும் செய்ய இயலாத நிலையை கண்டு கொதித்துக் கொண்டிருந்தனர்.இந்த முறை தான் படையெடுத்து செல்வதாய் அரசரிடம் அனுமதி வேண்டினான் இஷான்.

“நஸீம் உன் மீது அதிகமாகவே நம்பிக்கை இருக்கிறது.இருந்தும் பாளையக்காரர்களை அத்தனை எளிதாய் எண்ண முடியவில்லை அதற்காகவே தயங்குகிறேன்.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“உசூர்..இதை என் தன்மான பிரச்சனையாகவே கருதுகிறேன்.இந்த ஒரு முறை என்னை நம்பி படையை ஒப்படையுங்கள் நிச்சயம் நல்ல செய்தியோடு வருகிறேன்.”

“ம்ம் இதுவரை நம்மால் அவர்களின் பொன் பொருளின் மீது கூட கை வைக்க முடியவில்லை.இருந்தும் உனக்குள் இருக்கும் இந்த வேட்கை நிச்சயம் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றே தோன்றுகிறது.சென்று வா.உனக்கு தேவையான படைகளை தயார் செய்து கொள்.வேறேதும் உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேள்.”

“நன்றி உசூர்.இம்முறை நிச்சயம் நமக்கு சாதகமாகவே அமையும்.விடை பெறுகிறேன்.”என்றவனுக்குள் தன் பயணத்தை பற்றிய சிந்தனைகள் அந்த நொடியிலேயே மனதினுள் வலம் வர ஆரம்பித்திருந்தன. 

தொடரும்...

Episode 02

Go to Sivagangavathi story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.