தொடர்கதை - சிவகங்காவதி - 02 - ஸ்ரீ
தோழிக்கு உரைத்த பத்து
தலைவி தனது நிலை குறித்தோ, களவு வாழ்க்கை இல்லத்தாருக்குத் தெரிந்தமை குறித்தோ தோழியிடம் எடுத்துக் கூறுவாள். இந்த ஒரு பாடல் மட்டும் கற்புக் காலப் பாடலாக உள்ளது.
அம்ம வாழி தோழி பாணன்
சூழ்கழி மருங்கின் நாண் இரை கொளீஇச்
சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே
அருந்தவம் முயறல் ஆற்றா தேமே.- (111)
(கழி = உப்பங்கழி; நாண் = தூண்டில்; முயறல் = முயலுதல்; சினைக்கயல் = சினையாக உள்ள கயல்மீன்கள்; ஆற்றாதேம் = இயலாதவர்களாகிய நாங்கள்)
என்ற பாடலில் தலைவன் பிரியாமல் இருக்கத் தவம் இயற்றவில்லை என்றாலும் பிரிவை ஆற்றியிருக்கும் திறம் பெற்றிருக்கிறேன் எனத் தலைவி தோழியிடம் உரைக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.
முகலாய அரசரிடம் அனுமதி பெற்ற நொடியே தன் பயணத்தை தொடங்கியிருந்தான் இஷான்.ஆறுமாத கால பயணம் மதுரையை நோக்கி தன் மொத்த படைகளையும் திரட்டிக் கிளம்பினான்.
“உசூர் எதோ ஒரு வேகத்தில் நம் இடத்திலிருந்து கிளம்பிவிட்டோம் ஆனால் வெற்றிக்காக நாம் என்ன புது யுக்தியை கையாளப் போகிறோம்?”
“இதற்கு மேல் கையாளப் போவதில்லை ரஹீம் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது.வழிப்பறி கொள்ளயர்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நாடகம் நடந்து கொண்டிருக்கிறது.அந்த பாளையத்தின் தளபதியார் நம்மோடு ஒப்பந்தத்திற்கு ஒத்துக் கொண்டார்.எனவே எத்தனை நாட்கள் ஆனாலும் வழிப்பறியை அவர் முறியடிக்க போவதில்லை.
நாம் அந்த பாளையத்தை நெருங்கும் நேரம் வழிப்பறி விடயம் மன்னரின் காதுகளை எட்டும் யாராலும் சமாளிக்க இயலவில்லை எனும் நிலையில் மன்னரே மக்களின் பாதுகாப்புக்காக களத்தில் இறங்குவார்.அந்தநொடி அவரை நாடு கடத்த போகிறோம்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
மன்னர் வேண்டுமெனில் பாளையம் நம் கைகளுக்குள் வந்தே ஆக வேண்டும்.இதையன்றி வேறு வழியில்லை அவர்களுக்கு. என்ன சொல்கிறாய் ரஹீம் வெற்றி நம் வசப்படுமா?”
“உசூர் உங்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டேனே என் அறிவை என்ன சொல்வது.மிகப் பிரமாதம் மிகப் பிரமாதம்.”
மாதங்கள் கடந்திருந்த நிலையில் சேதிராயனின் அரசவை அன்று அவசர கூட்டத்திற்கு தயாராகியிருந்தது.பொதுமக்கள் பலரும் அரசரிடம் தங்கள் குறைகளை பற்றி முறையிடுவதற்காக காத்திருந்தனர்.
“அரசவை ஆரம்பமாகட்டும்!”
“அரசே நாட்டில் குற்றங்கள் அதிகரித்து விட்டன. வரிப்பணம் கட்ட முடியாமல் பாமர மக்கள் தவிக்கின்றனர். தாங்கள் தான் இதற்கான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”
“என்ன தளபதியாரே நம் ஆட்சியில் குற்றமா?! என்ன நடக்கிறது?”
“ம..ன்..னா அப்படியெல்லாம் ஒன்றுமில்லை இவர்கள் ஏதோ பிதற்றுகிறார்கள். சிறு குற்றம் என்றாலும் தங்களின் கண்ணிலிருந்து தப்பி விடுமா?”
“அரசே நாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. அதுமட்டுமல்லாது வழிப்பறித் தொல்லையால் மக்கள் நாட்டின் எல்லைகளுக்குச் செல்லவே அஞ்சுகின்றனர். பல பேர் மாய்ந்து விட்டனர்.எங்களால் பொறுக்க மாட்டாத காரணத்தினாலேயே தங்களை நேரடியாக சந்திக்க வந்திருக்கிறோம்.”
“என்ன நடக்கிறது என் பாளையத்தில் மக்களின் குறைகளை கவனியாது இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.இனி கவலை வேண்டாம் நானே நேரடியாக இறங்குகிறேன் கூடிய விரைவில் அனைத்தும் மன்னரின் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.சென்று வாருங்கள்.”
அரசவை கலைந்த அடுத்த நிமிடம் பிரத்யேக ஆலோசனை கூடத்தில் முக்கிய பதவி வகிப்பவர்களோடு அரசர் ஆலோசனை நடத்தினார்.
“இது எப்படி சாத்தியம்?இருக்கும் அத்துணை பாளையத்திலும் மிகுந்த வளமும் பாதுகாப்பும் உள்ளது நம் பகுதி அப்படியிருக்க ஏன் இந்த கவனகுறைவு?”
யாரும் எந்த தெளிவான பதிலையும் கூறாமல் இருக்க அவ்வளவு நேரமும் வெறும் பார்வையாளராய் மட்டுமே மறைவில் இருந்த சிவகங்காவதி வாய் திறந்திருந்தாள்.
“தந்தையே இந்த பிரச்சனையை பற்றி தங்களிடம் தனிமையில் பேச விழைகிறேன்.”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
குருராஜனின் "எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
மறுநொடி சற்றும் தாமதியாது அனைவரையும் அங்கிருந்து அனுப்பிவிட்டிருந்தார் சேதிராயன்.
“சொல் சிவகங்காவதி இதில் உன் பக்க கருத்து என்ன?”
“மறுயோசனையின்றி தெரிகிறது நம்மில் இருக்கும் ஒரு கருப்பு ஆடு நம் அழிவிற்கு வித்திட காத்திருக்கிறது என..”
“என்னம்மா சொல்கிறாய்??!”
“நிச்சயம் இது உறுதி தந்தையே.இல்லையெனில் பலம் மிகுந்த ஒரு பாளையத்தில் நடக்கும் விடயங்களா இவையனைத்தும். நம் படைத் தளபதி ஏதோ ஒரு காரணத்திற்காக அமைதி காக்கிறார். அத்துனை பிரச்சனையும் தெரிந்தும் தங்களிடம் வரும் வரை பொறுத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.