(Reading time: 13 - 25 minutes)

அதன்பின் அன்றைய பொழுது முழுவதையும் தன் அரண்மனையிலும் அதை சார்ந்த பகுதிகளிலும் கழித்தாள் சிவகங்காவதி.ஒவ்வொரு இடத்தையும் ஒவ்வொரு ஒவ்வொரு காட்சியையும் தன்னுள் பதிய வைத்துக் கொண்டாள்.தந்தையை பார்த்தால் எங்கு மனமுடைந்து விடுவோமோ என யாரையும் பார்ப்பதையே தவிர்த்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மாலை மங்கும் சந்திரனின் ஒளி பரவத் தொடங்கிய நேரம் சிவகங்காவதி அரண்மனையில் இருந்து கிளம்பத் தயாரானாள்.தாயிடமும் தந்தையிடமும் ஆசி பெறுவதற்காக வந்து நின்றவளை பார்த்தவர்களுக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

பெண் என்ற அடையாளமே தெரிந்திரா வண்ணம் உடை முதல் தன் நிறம் வரை அனைத்தையும் ஒரு ஆணுக்கு நிகராக மாற்றியிருந்தாள்.

“மகளே உன் திறமையை கண்டு மீண்டும் ஒரு முறை  வியப்பில் ஆழ்ந்திருக்கிறேன். இருந்தும் நானும் உன்னுடன் வருகிறேன் சிவகங்காவதி.”

“தந்தையே!!”

“சரி சரி நீ என்ன கூறுவாய் என புரிகிறது. எது எப்படியிருப்பினும் உன் பாதுகாப்பு மட்டுமே மிகவும் முக்கியம் நினைவில் இருக்கட்டும்.”

“நிச்சயம் தந்தையே அதைவிட முக்கியமாய் இந்த பாளையத்தின் பாதுகாப்பிற்கு நான் பொறுப்பு.விடை கொடுங்கள். மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு விரைவில் அமையட்டும். வருகிறேன்.”, என்றவள் நிற்காமல் திரும்பி நடக்க ஆரம்பித்திருந்தாள் தன் விழியோரம் கசிந்த நீரைத் தட்டிவிட்டவாறு. 

தொடரும்...

Episode 01

Episode 03

Go to Sivagangavathi story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.