(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - சிவகங்காவதி - 03 - ஸ்ரீ

sivaGangavathy

கிழவற்கு உரைத்த பத்து

கிழவன் என்ற சொல் தலைவனைக் குறிக்கும். கற்பு வாழ்க்கையில் பரத்தை, தலைவனை எள்ளி நகையாடி உரைக்கும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி கிழவற்கு உரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. பரத்தைக்குச் சிறப்பின்மையால் தலைவன் பெயரால் குறிக்கப்பட்டது. கண்டிகு மல்லமோ கொண்க நின்கேளே?என்ற தொடர் பத்துப் பாடல்களிலும் இடம் பெற்றிருந்தாலும் இதனால் பெயர் அமையாது கேட்போரைக் கொண்டு பெயர் குறிக்கப் பெறுவது குறிப்பிடத் தக்கது.

கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே? 

முண்டகக் கோதை நனையத் 

தெண்டிரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே- (121)

(கண்டிகும் அல்லமோ = நாங்கள் பார்த்ததில்லையா என்ன?; கேள் = உறவு; முண்டகக் கோதை = தாமரை மாலை)

என்ற பாடலில் பரத்தை, தலைவனிடம் தலைவி குறித்துப் பேசிய செய்தி இடம் பெற்றுள்ளது.

சிவகங்காவதி தன் பெற்றோரிடம் விடைபெற்று வெளியே வந்த நேரம் மணிமேகலை அவளை இறுக அணைத்துக் கொண்டாள்.

“என்ன இது சிறு பிள்ளை போல்..என்றுமே சிரித்த முகமாய் இரு அதைவிட முக்கியமாய் துணிவோடு இரு புரிந்ததா?”

“சிவகங்காவதி உனக்காக காத்திருப்பேன் எத்தனை விரைவில் முடியுமோ வந்துவிடு சரிதானா?”

“மணிமேகலை காத்திருப்பு காலம் கடந்தும் ஏன் ஜென்மம் கடந்தும் தொடரலாம்.ஆனால் மறுபிறவி ஒன்று இருப்பின் நிச்சயம் உன் உடன்பிறப்பாய் பிறக்கும் வரம் வேண்டும் அக்கா!”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

என்றவள் அவளை ஆரத்தழுவி அவள் கணிக்கும் முன் கண்களின் கண்ணீரை துடைத்து புன்னகைத்து நகர்ந்தாள்.

ரகசிய வழி வழியே சிவகங்காவதி வீரர்கள் ஐவரோடு கோட்டையை கடந்து வெளியே வந்து அங்கு ஏற்பாடு செய்திருந்த குதிரைகளோடு தன் பயணத்தை தொடங்கினாள்.

மனம் மொத்தமும் நிலையில்லாமல் தவித்திருக்க எதுவாயினும் மண்ணை காப்பதே லட்சியம் என்பதை மனதில் பதித்து வைத்துக் கொண்டு வேகத்தை அதிகரித்திருந்தாள்.

இரவு இருள் படர்ந்த நேரத்தில் ஊர் எல்லையை கடந்து காட்டிற்குள் பயணத்தை தொடர்ந்தவர்கள் அருகில் எங்கோ கேட்ட சிறு சலசலப்பில் குதிரையை அப்படியே நிறுத்திவிட்டு சுற்றத்தில் கவனத்தை பதிக்க சிவகங்காவதியின் கை அதுவாய் தன் இடையிலிருந்த வாளுறையின் மீது அழுந்தப் பதிந்தது.

சிவகங்காவதி நடுவே செல்ல வீரர்கள் அவளை சுற்றி அவளை பாதுகாக்குமாறு சுற்றும் முற்றும் பார்த்தவாறு நகர்ந்தனர்.யாரும் எதிர்பாரா வண்ணம் எங்கிருந்தோ வந்த வில் அம்பு ஐவரில் ஒருவனின் மார்பில் நுழைந்து முதுகில் வெளியேறியது.

அனைவருமாய் அதிர்ச்சியில் உறைந்தது ஒரு நொடியே பார்வையின் தீவிரம் அதிகரித்து ஐவரின் விழியும் ஒரு முறை சந்தித்து மீண்ட அடுத்த நொடி சிவகங்காவதி உட்பட ஐவரும் சிதறி ஓடி ஒவ்வொரு மரத்திற்குப் பின் ஒளிந்து நின்றனர்.

சில நிமிடங்கள் அமைதியில் கரைய மரத்தின் பின்னிருந்தவளின் வாயை பக்கவாட்டில் இருந்து ஒரு வலிய கரம் அழுந்தப் பற்றியது.நடப்பதை உணர ஆரம்பித்த நொடி தன் காலை பக்கவாட்டில் கொண்டு சென்று அந்த கரத்திற்கு சொந்தகாரனின் காலை பின் வழியே வளைத்து மடக்கி தன் வாளால் மண்டியிட்டிருந்த அவனின் கழுத்தை மறுயோசனையின்றி அறுத்திருந்தாள்.

ரத்தகறை கையை நனைத்திருக்க அதை மடிந்து கிடந்தவனின் உடையிலேயே துடைத்தவள் அவன் வாளையும் உருகிச் சென்று சற்று தூரத்தில் நின்றுகொண்டாள்.

மீண்டுமாய் அம்புகள் காற்றை கிழிக்கும் சத்தம் அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருக்க சிவகங்காவதி விழி மூடி எதுவாயினும் ஏற்றுக் கொள்ளும் மன திடத்தை அதிகரித்துக் கொண்டிருந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "உன்னை விட மாட்டேன் என்னுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

சில நிமிடங்கள் கழிந்த நிலையில் வீரர்களில் ஒருவன் சிவகங்காவதியை வெளியே வருமாறு அழைத்தான்.

“அரசே!!தங்களின் பாதுகாப்புக்கு ஒன்றும் குறைவில்லையே?”

இது சிவகங்காவதி ஏற்கனவே செய்திருந்த ஏற்பாடு.வீரர்களிடம் தெளிவாய் தன் திட்டத்தை விளக்கியிருந்தாள்.எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் தங்களோடு இருப்பது இளவரசியென்ற செய்தி வெளிவரக் கூடாது.மன்னர் களத்தில் இறங்கியதாகவே இருக்க வேண்டும்.நம்மில் அவள் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் நாட்டின் பாதுகாப்பே மற்றவருக்கு பிரதானமாய் இருக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இருந்தாள்.

சிவகங்காவதிக்கு அவன் பிணைய கைதியாக்கப் பட்டிருப்பது புரிந்தது.ஆக அவனையன்றி மற்ற நால்வரும் தற்சமயம் உயிரோடிருக்கும் வாய்ப்புகள் குறைவே.தனக்கான எச்சரிக்கை அவன் மூலமாய் வருகிறது என்பதையும் உணர்ந்திருந்தாள்.இருப்பினும் அவர்களின் நோக்கம் அறிந்து கொள்ள வேண்டியது அவளின் அவசியமானது என்றுணர்ந்தவள் அமைதி காத்தாள்.

அவளிடத்தில் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போகவே புதியவன் ஒருவனின் கணீர் குரல் இருளின் அமைதியை கிழித்துக் கொண்டு வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.