(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 49 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

கிழ்வேந்தன் கலையரசியை தொடர்புக் கொண்டு கொஞ்சம் பேச வேண்டும் என்று சொன்னதும், அவரும் அதற்கு ஒத்துக் கொண்டு அவனை பார்க்க அவன் சொன்ன கோவிலுக்கு வந்திருந்தார்.

நேற்று கோவிலில் சுடரிடம் சாபம் விடுவது போல் அவர் பேச ஆரம்பித்ததும் அதை பூங்கொடி தடுத்த போது அவருக்கு கொஞ்சம் மனதில் உறுத்தல் தான், மனதில் மகி செய்த விஷயத்திற்கு கோபம் இருக்கலாம், ஆனால் அதற்காக அவர்களுக்கு சாபம் கொடுப்பது போல் வார்த்தைகளை விட்டுவிட்டாரே, என்ன இருந்தாலும் அவன் அவரது சகோதரனின் மகனல்லவா? சுடருக்கு சாபம் விடுவது அவனுக்கும் சேர்த்து தானே என்பதை அவர் மறந்து போனாரே,

என்ன இருந்தாலும் அருள் சொன்னது போல் மகளின் வாழ்க்கையை நினைத்து அழுதுக் கொண்டே இருந்ததால் தானே, இப்படி ஒரு திருமண ஏற்பாட்டை செய்தது. தங்களையும் அவனது குடும்பமாக நினைத்ததால் தான் மனதிற்கு விருப்பம் இல்லையென்றாலும் மகி தங்களுக்காக ஒத்துக் கொண்டிருப்பான். அதே சமயம் சுடர் மீதும் அவனுக்கு  விருப்பம் இருந்திருக்க வேண்டும், அவளால் பிரச்சனை என்பதால் அதை அனைவரின் முன்பும் சொல்ல முடியாமல் மறைத்திருக்க வேண்டும் என்பதாக, மகிக்காக காத்திருந்த கொஞ்ச நேரத்தில் யோசித்ததில் அவர் சரியாக புரிந்துக் கொண்டிருந்தார். தன் மகளின் எதிர்காலத்தை குறித்தும் இப்படி நிதானாமாக யோசித்து செயல்பட்டிருந்தால் பல பிரச்சனைகள் நடந்து இருக்காமல் இருந்திருக்கும் என்பதையும் நினைத்து பார்த்தார்.

கிட்டத்தட்ட அவர் நினைத்தது போல் தான் மகியும் பேசினான். “உங்களுக்கு என் மேல ரொம்ப கோபம் இருக்கும் அத்தை.. நான் உங்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திட்டேன் தான், ஆனா நான் அந்த நேரம் சூழ்நிலை கைதி அத்தை.. அருளை வேண்டாம்னு சொல்லிட்டு சுடரை கல்யாணம் செஞ்சுக்கணும்னு நான் நினைக்கவேயில்லை.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சுடரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஆனா அவ தான் பிரச்சனைக்கு காரணம்னு சொன்னதும் என்னால அதை வெளிய சொல்ல முடியல.. அருள்க்காக நீங்க் வருத்தப்பட்டப்போ, நான் அருளை கல்யாணம் செஞ்சுக்கணும்னு எல்லாம் சொன்னப்போ என்னால மீற முடியல.. அருளை கல்யாணம் செஞ்சுக்கணும்னு முடிவெடுத்ததுமே சுடரை மறந்துடம்னு தான் முடிவு செஞ்சேன்.. ஆனா அவ திரும்ப லண்டனுக்கே போகப் போறான்னு தெரிஞ்சதும் அவளை எப்படியாவது கூப்பிட்டுக்கிட்டு வரணும்னு முடிவுப் பண்ணப்போ, அவ பிடிவாதம் பிடிச்சதால எனகு வேற வழி தெரியாம தான் நான் அவளுக்கு தாலி கட்ட வேண்டியதா போச்சு..

அப்படி தாலி கட்டிட்டு வர அளவுக்கு அவ  லண்டன் போகாம இருக்கணும்னு அப்படி என்ன அவசியம்னு கேட்கலாம்.. உங்களுக்கு தெரியாது அத்தை சுடர் லண்டன்ல அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கா தெரியுமா? அவ நம்மக்கிட்ட இருந்து எதிர்பார்க்கிறது அன்பும் அரவணைப்பும் தான் அத்தை, நம்ம குடும்பத்துல அவளுக்கு ஒரு இடம் கிடைக்கணும்னு ஆசைப்பட்டா..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

கதிர் மாமாவோட பொண்ணா அவளும் நம்ம குடும்பத்துல ஒருத்தி தான், அதை நாம உணர்த்தி  இருந்தா தன்னோட மனசுக்குள்ள இருந்த ஆசையை வெளிப்படையா சொல்லியிருப்பா, ஆனா அதை நாம அவளுக்கு உணர்த்தல.. அவளை யாரோ விருந்தாளி போல தான் பார்த்தோமே தவிர, அவளை உறவா பார்க்கல.. அதான் நம்ம கூட உறவை ஏற்படுத்திக்கணும்னு நினைச்சவ, அதுக்கு குறுக்கு வழியை யோசிச்சிட்டா, அப்போக் கூட அதால வர பின்விளைவுகளை பத்தி தெரிஞ்சிருந்தா அவ அப்படி செஞ்சிருக்க மாட்டா அத்தை.. தன்னோட தப்பை அவ புரிஞ்சிக்கிட்டா, ஆனா அவளை நாம யாரும் மன்னிக்க தயாரா இல்லை. அதனால நம்மளை விட்டு விலக முடிவெடுத்தா, ஆனா அதுக்குப்பிறகும் அவ எப்படி வேதனைப்படுவ தெரியுமா? தனியா இருக்கா மாதிரி ஃபீல் பண்ணுவா.. அதான் அவளுக்காக அந்த நேரம் யோசிச்சு நான் அவளுக்கு தாலி கட்டினேன்.

அந்த நேரம் அது தான் சரியா இருக்கும்னு நினைச்சேன்.. ஆனா முன்னாடியே நான் கொஞ்சம் யோசிச்சு எல்லாம் செஞ்சிருக்கலாமோன்னு தோனுச்சு.. இப்படி தப்பு செஞ்சது நான் தான்,

சுடரை காதலிச்சிட்டு, அப்புறம் அவ தப்பு செஞ்சான்னு அவ மேல கோபப்பட்டு, அதனால் அருளை கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டு, இதனால நாம யாருக்கும் பிரச்சனையா இருக்கக் கூடாதுன்னு விலகி போக இருந்த சுடரை கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு வந்ததுன்னு எல்லா தப்பும் நான் தான் செஞ்சேன்.. அதுக்கு நீங்கல்லாம் என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க அத்தை.. ஆனா இதுக்கெல்லாம் சுடர் தான் காரணம்னு சொல்லாதீங்க.. தெரியாம அவ ஒரு தப்பு தான் செஞ்சா. ஆனா தெரிஞ்சே நான் நிறைய தப்பு செஞ்சுருக்கேன் அத்தை..” என்று மகி வருத்தமாக கலையிடம் பேசினான்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மகி.. ஆத்திரம் புத்தியை மறைக்கும்னு சொலவாங்கல்ல.. அப்படி தான் நான் நேத்து நடந்துக்கிட்டேன். அடிப்படையே என் கிட்ட தான் தப்பிருக்கு.. அருள் விஷயத்துல நிதானமா இருந்திருந்தா இத்தனை பிரச்சனை நடந்திருக்காது.

அப்பவே அண்ணன் உனக்கும் அருள்க்கும் கல்யாணம் பேச வேண்டாம்னு சொன்னாரு.. அப்போ அவர் சொல்றதும் சரியா தன் பட்டுச்சு.. ஆனா அதுக்குப்பிறகு நடந்ததையெல்லாம் பார்த்தப்போ அருளோட வாழ்க்கையை நினைச்சு பயந்து அம்மா சொன்னதால நானும் அது சரியா இருக்கும்னு நினைசேன்.. ஆனா இப்போ யோசிச்சு பார்த்தா, உண்மையிலயே எவ்வளவு பெரிய தப்பு நடக்க இருந்துச்சு.. நீ சுடர் மேல பிரியம் வச்சிட்டு, அருளை கல்யாணம் செஞ்சுக்கிட்டிருந்தா, உங்க 3 பேர் வாழ்க்கையும் இல்ல வீணா போயிருக்கும்.. நீ சொல்றதுக்கு முன்னயே நானும் உனக்கு சுடர் மேல விருப்பம் இருந்திருக்கும்னு யூகிச்சிட்டேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.