(Reading time: 17 - 33 minutes)

என்ன அன்னைக்கே இதை கொஞ்சம் யோசிச்சு பர்த்திருந்தா, அண்ணன் அன்னைக்கு உன்னை வீட்டை விட்டு அனுப்பும் போதே நான் தடுத்திருக்கணும்.. ஆனா ஏதோ கோபத்துல அழுத்தமா அமைதியா இருந்திட்டேன்.. ஆனா எனக்கு நேத்து வரை இருந்த கோபம் இப்போ இல்லை மகி.. உன்மேல மட்டுமில்ல சுடர், எழில் யார் மேலேயும் கோபமில்ல.. முதலில் வீட்டுக்கு போனதும் அண்ணன் கிட்ட பேசி உன்னை வீட்டுக்கு கூப்பிட சொல்றேன்..”

“இல்லை அத்தை நீங்க எங்களை புரிஞ்சிக்கிட்டா போதும்.. அப்பா சொல்றது போல அருள் கல்யாணம் நல்லப்படியா முடியட்டும்.. அதுவரை நாங்க இப்படியே இருக்கோம்.. ஆனா நான் வீட்ல சொல்லிட்டு வந்தது போல அருள்க்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சதும் தான் எங்க வாழ்க்கையை ஆரம்பிப்போம்..”

“இல்ல மகி அது சரியா இருக்காது.. ஏற்கனவே அவசரப்பட்டது போல அருள் கல்யாணத்துல நான் இப்போ அவசரப்பட்றதா இல்ல.. கொஞ்ச நாள் போகட்டும், அதுவரை அருள் மேல படிக்கணும்னு நினைச்சது போல படிக்கட்டும்.. அப்புறமா அவளோட கல்யாணத்தை பத்தி யோசிப்போம்.

அதனால அவ கல்யாணம் நடக்கிற வரை நீங்க விலகி இருக்கணும்னு சொல்றது சரியா வராது.. இப்பவே ஆளாளுக்கு ஒன்னொன்னு பேச ஆரம்பிச்சுருப்பாங்க.. என்ன இருந்தாலும் முறைப்படி உங்களுக்கு கல்யாணம் நடக்கணும் இல்ல.. அதனால இன்னைக்கே அண்ணன்க்கிட்ட பேசறேன்.. உங்களை வீட்டுக்கு கூப்பிட சொல்றேன்..” என்று சொல்ல்விட்டு சென்றார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஆனாலும் தன் தந்தை அதற்கு அவ்வளவு எளிதாக ஒத்துக் கொள்ளமாட்டார் என்பது மகியின் யூகம், தந்தை இப்போது மனம் மாறவில்லையென்றாலும் பரவாயில்லை. அத்தை மனம் மாறியதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.

மகியிடம் பேசிவிட்டு வந்த கலை உடனே புகழேந்தி, பூங்கொடி, மற்றும் முத்துப்பாட்டி மூவரிடமும் பேச வேண்டும் என்று சொன்னவர், மகியை பார்த்து பேசியதை கூறி, அவனை வீட்டுக்கு அழைக்க வேண்டும் என்பதை கூறினார்.

கலையரசி வாயால் அந்த வார்த்தையை கேட்டு பூங்கொடி மகிழ்ச்சியடைந்தார். பாட்டிக்கும் மகி செய்த காரியத்தால் அவன் மீது கோபம் தான், ஆனால் பேரன் வீட்டை விட்டு வெளியேறியதை அவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னத்தான் அவரவருக்கு ஆசை இருந்தாலும், ஆண்டவன் மகிக்கும் சுடருக்கும் முடி போட்டு வைத்திருந்தால், நம்மால் வேறு என்ன செய்ய முடியும் என்ற மனநிலைக்கு அவர் வந்திருந்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "உன்னை விட மாட்டேன் என்னுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

புகழேந்தி என்ன பதில் சொல்லப் போகிறார் என்று மூவரும் எதிர்பார்க்க,  “இந்த முடிவு உன்னை சமாதானப்படுத்த எடுத்த முடிவு இல்லை கலை.. அருள் மேல எனக்கு உன்னை விட அதிக அக்கறை இருக்கும்மா..  ஒருமுறை பேச்சை ஆரம்பிக்கிறது முன்ன, அடுத்து பேச்சளவுல, அடுத்து நிச்சயம் வரை வந்துன்னு இப்படி அருளோட கல்யாணம் தடைப்பட்டுக்கிடே போகுது.. அவ கல்யாணம் நல்லப்படியா முடியணும்னு இப்போ நான் நினைக்க ஆரம்பிச்சிட்டேன்.. அதுவரை என்னால மகி செஞ்சதை மன்னிக்கவே முடியாது.. அதனால அருள் கல்யாணம் நல்லப்படியா முடியறவரை அவனோட கல்யாணத்தை  பத்தியோ, இல்லை அந்த பொண்ணோட வீட்டுக்கு வர்றதை பத்தியோ யாரும் பேசக் கூடாது..” என்று இது தான் என் முடிவு என்பது போல் தீர்மானமாக கூறினார்.

“அண்ணா மகிக்கு சுடர் மேல விருப்பம் இருக்கு போல, அதனால தான் இப்படி செஞ்சுட்டான்.. ஒரு கட்டாயத்துல தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்.. விருப்பமில்லாம அவனுக்கு அருள் கூட கல்யாணம் செஞ்சு வச்சிருந்தா அவங்க சந்தோஷமா இருந்திருப்பாங்களா சொல்லுங்க..” என்று கலை கூற,

“அவனை ஒன்னும் நாம இந்த கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தலையே, அதுவும் நான் அப்படி ஒரு கரியத்தை எப்போதும் செய்ய மாட்டேன்.. நாம அப்போ இருந்த சூழ்நிலைக்கு அவனை அருளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டோம் தான், ஆனா இன்னொரு பொண்ணு மேல விருப்பம் இருக்கிறவன் அதை வெளிப்படையா சொல்லணுமா? இல்லையா? அவன் சொல்லியிருந்தா அப்போதும் இல்லை நீ அருளை தான் கல்யாணம் செஞ்சுக்கணும்னு சொல்லி நாம கட்டாயப்படுத்தி அப்போ இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருந்தா அப்போ அதை ஏத்துக்கிறதுல ஒரு நியாயம் இருக்கு.. ஆனா இப்போ அவன் செஞ்சத என்னால ஏத்துக்க முடியாது.. அதனால இதோட அந்த பேச்சை விடுங்க..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

“என்னை மன்னிச்சிடுங்க அண்ணி.. இந்த பிரச்சனை நடந்த அன்னைக்கே அண்ணன்க்கிட்ட மகிக்காக பேசியிருக்கணும்.. சரி இப்போதாவது சொன்னா ஏத்துப்பார்னு பார்த்தா இப்படி பேசிட்டு போயிட்டாரே..” என்று கலை வருத்தப்பட,

“விடு கலை.. முன்ன சொன்னது போல எங்களுக்கு மகி போல அருளும் முக்கியம் தான், அவன் என்ன ஆம்பிளை பையன் தானே எல்லாம் பார்த்துப்பான்.. நாம இப்போ அருளுக்காக தான் பார்க்கணும்” என்று பூங்கொடி சமாதானம் கூறினார். ஆனாலும் கலைக்கு தான் மகி வெளியே இருப்பது உறுத்தலாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.