(Reading time: 17 - 33 minutes)

வீட்டிற்குள் வந்தவள் ஆனந்தியை பார்த்ததும், “எப்போ வந்தீங்க ஆன்ட்டி.. எப்படி இருக்கீங்க? அதுக்குப்பிறகு டாக்டர்க்கிட்ட போனீங்களா? திரும்ப மயக்கமெல்லாம் எதுவும் வரலையே..” என்று விசாரிக்க,

“இது யார்?” என்பது போல் பாட்டி பார்க்க, மற்றவர்கள் அருள் ஆனந்தியிடம் நன்றாக பேசுவதை ஆர்வத்தோடு கவனித்தனர்.

“நான் நல்லா இருக்கேன் அருள்.. நீ எப்படி இருக்க?” என்று விசாரித்தார்.

“நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி..” என்று அவள் சொன்னதும், மற்றவர்களை பார்த்தவர்,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“வெறும் மன்னிப்பு மட்டும் கேட்க வரலன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன் இல்ல.. இப்போ நான் வேற எதுக்கு வந்துருக்கேன்னா, அருளை என்னோட மருமகளாக்கிக்க ஆசைப்பட்றேன்.. இது நடந்த தப்பை சரி செய்ய மட்டுமில்ல.. அருள் யாருன்னு தெரியறதுக்கு முன்னமே அவளை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு..

என்னோட பையனுக்கு நல்ல தமிழ் பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணனும், இதுதான் என்னோட ஆசையே, எனக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சதும், நான் இங்க வந்ததே, ஒருவேளை என்னோட உயிர் போனாலும் அது இந்த மண்ணுல தான் போகணும்.. அதுக்குள்ள என்னோட பையனுக்கு நான் நினைச்சது போல கல்யாணம் செஞ்சுட்டு தான் என்னோட உயிர் பிரியணும்..” என்று ஆனந்தி பேசவும்,

“ஆனந்தி எதுக்கு இப்போ இப்படி பேசற..” என்று கதிர் சொல்ல,

“என்ன ஆன்ட்டி இது.. உங்களுக்கு ஒன்னும் ஆகாது.. நல்லப்படியா ஆபரேஷன் முடிஞ்சா நீங்க குணமாகிடுவீங்க..” என்று அருளும் ஆறுதல் கூறினாள்.

“அதுக்கும் முன்ன நீ என்னோட அமுதனை கல்யாணம் செஞ்சுப்பீயா சொல்லு..” என்றவர்,

“உங்க பொண்ணை என்னோட பையனுக்கு கொடுப்பீங்களா?” என்று மூவரையும் பார்த்து கேட்டார்.

பாட்டிக்கும் ஆனந்தியின் பேச்சிலேயே அவர் யாரென்று தெரிந்துவிட்டது. “அது எப்படிம்மா.. எங்க பொண்ணை வேண்டாம்னு சொன்னதே உன்னோட பையன் தானே.. இப்போ நீ வந்து பொண்ணு கேட்டா ஆச்சா..” என்று ஆனந்தியிடம் கேட்டார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“உண்மைதாங்க.. ஆனா திடீர்னு அத்தனை பேர் முன்ன அவனை நிறுத்தி கல்யாண விஷயம் பேசினதும், அதுவும் நடந்த அந்த சம்பவத்துக்காக அந்த கல்யாணம்னு பேசினது தான் அவனுக்கு யோசிக்க அவகாசம் இல்லாம, பட்டுன்னு சொல்லிட்டான்..

உங்களுக்கெல்லாம் தெரியாததில்ல, அவன் பிறந்து வளர்ந்த நாட்டுல இப்படியான முறைகளையெல்லாம் பார்த்ததில்ல.. அதுதான் அவனுக்கு இதெல்லாம் புதுசா இருக்கவே பட்டுன்னு சொல்லிட்டான்.. நீங்க முதலில் அவன்கிட்ட பேசினதுக்கு பதிலா என்கிட்ட பேசியிருந்தா நான் அவனுக்கு இதெல்லாம் புரிய வச்சிருப்பேன்..” என்று ஆனந்தி விளக்கம் கொடுத்தார்.

“இங்கப்பாருங்க நாங்க நடந்த விஷயத்தை சரி செய்யணும்னு இந்த கல்யாணத்தை முடிக்க நினைக்கல.. உங்க பையனோட சேர்த்து வச்சு எங்க பொண்ணை ஒருத்தங்க பேசிட்டாங்க.. அது நமக்கெல்லாம் சின்ன விஷயம் தான், ஆனா எங்கப் பொண்ணு எதிர்காலத்தை அது பாதிக்கக் கூடாது.. எப்படியோ ஒரு வரன் பார்த்து கல்யாணம் செய்யணும், ஆனா அது ஏன் உங்க பையனா இருக்கக் கூடாதுன்னு எங்களுக்கு தோனுச்சு..

சரி மனசுக்கு சரின்னு பட்டதை அப்படியே உங்க பையன்கிட்ட சொல்லி விருப்பத்தை கேட்டோம்.. இப்படி ஒரு சம்பவம் நடந்து அதுக்காக கல்யாணம் வேண்டாம்னு அந்த தம்பி மறுத்திருந்தா கூட பரவாயில்லை.. ஆனா எங்க பொண்ணை வேண்டாம்னு அவர் நிறைய காரணங்கள் சொன்னார்.. அந்த காரணமெல்லாம் இன்னும் அப்படியே தானே இருக்கு.. அப்புறம் திரும்ப எப்படி இந்த கல்யாணத்தை பேச முடியும்?” என்று புகழேந்தி கேட்க,

“எனக்கு புரியுதுங்க.. ஆனா அதுகூட அவசரத்துல தான் இப்படி பேசியிருப்பான்.. இப்போ நான் எடுத்து சொல்லியிருக்கேன்.. அவனும் சரின்னு சொல்லிட்டான்.. அதனால நீங்களும் ஒத்துக்கிட்டா இந்த கல்யாணத்தை முடிச்சிடலாம்..” என்று ஆனந்தி சொன்னதற்கு புகழேந்தி தயக்கத்தோடு யோசிக்க ஆரம்பிக்க,

இனி மகள் திருமணத்தில் அவசரப்படக்கூடாது என்று கலை நினைத்திருந்தாலும், இப்போது மகியை மனதில் நிறுத்தியவர், தனக்குள்ளேயே ஒரு முடிவெடுத்துக் கொண்டார்.

உறவு வளரும்...

Episode # 48

Episode # 50

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.