(Reading time: 17 - 33 minutes)

நேற்று சுடரொளியிடம் விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்கிறேன் என்று ஆனந்தி சொல்லியது போல், இப்போது நேராக கதிர் வீட்டுக்கு சென்றவர், அருள்மொழியை அமுதனுக்காக பெண் கேட்க போவதாக கூறினார்.

“என்ன விளையாட்றீயா? அவனால நான் ஒருமுறை அசிங்கப்பட்டது போதாதா? திரும்பல்லாம் இந்த பிரச்சனையில் என்னை இழுக்காத..” என்று கதிர் கோபப்பட்டார்.

“ஏற்கனவே நடந்த பிரச்சனையை நான் சரி செய்ய தான் பார்க்கிறேன்.. புதுசா எந்த பிரச்சனையையும் நான் ஏற்படுத்த மாட்டேன்..  இதுல அருளுக்காக மட்டுமில்ல கதிர்.. நம்ம சுடருக்காகவும் யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்..

மகி ஏதோ அவசரப்பட்டு சுடருக்கு தாலிக்கட்டிட்டான்.. அதை நாம முறையான கல்யாணமா நடத்தணும்.. அதுக்கு அருள்க்கு நல்லப்படியா கல்யாணம் நடக்கணும்.. சுடருக்காக ஒரு அப்பாவா இதுக்கு முதல்ல நீதான் ஒரு முடிவு எடுத்து இருக்கணும்.. அதை பண்ணாம விட்டுட்ட,  இப்போ நான் அதற்கான முயற்சி எடுக்க போறேன்.. அது மட்டும் இல்லாம எனக்கு அருளை ரொம்ப பிடிச்சிருக்கு.. அவ எனக்கு மருமகளா வரணும்னு ஆசைப்பட்றேன்.. அமுதாக்கிட்டேயும் அவனோட விருப்பத்தைக் கேட்டுட்டேன்.. அவனும் இதுக்கு சரின்னு சொல்லிட்டான்..

அதனால நாம நேராக அவங்க வீட்டுக்கு போய் பேசலாம்.. உன்னை விட்டுட்டு நான் மட்டும் பேசினா நல்லா இருக்குமா? நீயும்  என்கூட வரணும்..” என்று ஆனந்தி சொல்ல,

“அவர் இப்படி தான் பேசுவார்.. என்னைக் கேட்டா  நீங்க செய்வதுதான் சரி ஆனந்தி..  நான் கண்டிப்பா உங்க கூட வரேன்.. அமுதன், அருள் கல்யாண விஷயத்துக்கு  அக்காவும் எப்படியோ ஒத்துப்பாங்கன்னு தான் நினைக்கிறேன்.. அதனால நாம உடனே அருள் கல்யாணத்தை  பேசி முடிக்கறது தான் நல்லது..  அப்போ தான் அடுத்து உடனே சுடருக்கும் மகிக்கும் கல்யாணம் பண்ண முடியும்.. இந்த விஷயத்துக்கு நான் எப்பவும் உங்களுக்கு துணையாக இருப்பேன்..  இவர் வரலன்னா விடுங்க.. நாமா போவோம்..” என்று எழில் கூறினாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

 “சரி ரெண்டு பேரும் இதுதான் முடிவுன்னு இருக்கப்போ..  அதுக்குப்பிறகு  நான் என்ன சொல்ல.. நானும் உங்கக்கூட  வரேன்.. ஆனால் உன் பிள்ளை இதுக்கு அப்புறம் திரும்ப வேற ஏதாவது காரணம் சொல்லி மறுக்கமாட்டான் இல்ல.. நீ அதை முதல்ல தெளிவா தெரிஞ்சுக்கோ..” என்று கதிரும் ஒருவழியாக தன் சம்மதத்தை தெரிவித்தார்.

“அவன் கிட்ட நான் பேசிட்டு தான் வந்திருக்கேன் அவன் கண்டிப்பா மாட்டேன்னு சொல்ல மாட்டான்.. அதனால ஒன்னும் பிரச்சனை இல்லை..” என்று ஆனந்தி சொன்னதும், மூவரும் நேராக புகழேந்தி வீட்டுக்கு  சென்றார்கள்.

கதிரவன் எழிலரசியோடு புதியவர் ஒருவர் உடன் வர, அவர் யாரென்று புகழேந்தி வீட்டினர் பார்க்க, “இவங்கதான் ஆனந்தி… அமுதனோட அம்மா..” என்று எழில்  அறிமுகப்படுத்தினாள்.

ஆனந்தி  பொதுவாக அனைவருக்கும் வணக்கம் சொல்ல,  அவர்களும் அமுதன் மீது கசப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அவரை உபசரித்தனர்.

“ஆனந்திக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல..”  என்று அவரது வியாதியைப் பற்றி கதிரவன் சொல்லி,

“இந்தியாவில் இருந்து தான் ட்ரீட்மென்ட் செஞ்சுப்பேன்னு வந்திருக்கா.. வந்து 3 நாள் ஆகுது.. இங்க வந்து தான் ஆனந்திக்கு நடந்த விஷயமெல்லாம் தெரிய வந்துச்சு.. உடனே உங்களை பார்க்கணும்னு சொன்னா.. அதான் கூட்டிட்டு வந்தேன்..” என்றார்.

“ஆமாம் அருள் வீட்ல  இல்லையா?” என்று ஆனந்திக் கேட்க,

“அவளோட பாட்டியோட  பக்கத்துல இருக்க கோவிலுக்கு போயிருக்கா.. இதோ கொஞ்ச நேரத்துல வந்திடுவா..” என்று பூங்கொடி தான் கூறினார்.

“நீங்க தான் அருளோட அம்மாவா?” என்று பூங்கொடியை பார்த்து ஆனந்தி கேட்க,

“இல்ல இவங்க எங்க அண்ணி..” என்ற எழில், பின் அங்கேயே நின்றிருந்த கலையை காட்டி,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "சுஷ்ருதா..." - வித்தியாசமான காதல் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“இவங்க தான் என்னோட அக்கா கலை, அருளோட அம்மா..” என்று அறிமுகப்படுத்தினாள்.

“ரொம்ப சந்தோஷம்மா.. அருளை நீங்க நல்லா வளர்த்துருக்கிறீங்க.. ரெண்டு முறை தான் பார்த்தேன்.. ஆனா பார்த்ததுமே பிடிச்சிடுச்சு..” என்று ஆனந்தி சொல்ல,

அருளை இவர் எப்போது பார்த்தார் என்பது போல் கலை மட்டுமல்ல, மற்ற இருவரும் ஆனந்தியை பார்க்க,

“இங்க வந்த மறுநாளே கதிரை பார்க்க யூனிவர்சிட்டி போன நான் மயக்கமாயிட்டேன்.. அப்போ அருள் தான் என்னை கொண்டு போய் ஹாஸ்பிட்டலில் சேர்த்தா, அப்போ அவளுக்கு நான் யாருன்னு தெரியாது, ஆனா அமுதனோட அம்மான்னு ஹாஸ்பிட்டலிலேயே தெரிஞ்சும் அப்போதும் நான் பார்க்கணும்னு சொன்னதும் உடனே என்னை பார்க்க வந்தா.. அப்போ தான் அவ கதிருக்கு சொந்தக்கார பொண்ணுன்னு தெரிஞ்சுது.. கூடவே என்னோட பையன் செஞ்ச தப்பும் தெரிஞ்சுது..

எனக்கு என்ன சொல்லன்னே தெரியல.. என்னோட பையன் இப்படி செஞ்சிருப்பான்னு நான் நினைக்கவேயில்லை. ஆனா கண்டிப்பா தப்பான எண்ணத்தோட செஞ்சிருக்க மாட்டான்.. அவனுக்கு சுடர்னா ரொம்ப பிடிக்கும்.. அவளுக்காக செய்றேன்னு இப்படி செஞ்சு வச்சிருக்கான்.. அப்போக்கூட அவனுக்கு இதுல இருக்க பிரச்சனைங்க புரியல.. இதுக்கு எனக்கு உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்கறதை தவிர வேர வழியில்ல.. ஆனா வேறும் மன்னிப்பு மட்டும் கேட்க நான் வரல..” என்று அவர் சொன்ன நேரம் அருள் கோவிலிலிருந்து பாட்டியோடு திரும்பி வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.