(Reading time: 13 - 25 minutes)

“உமது தந்திரம் எதுவும் எடுபடப் போவதில்லை.உன்னுடன் வந்த வீரர்கள் ஐவரில் இவன் ஒருவனே மீதமிருக்கிறான்.அதற்கும் காரணம் நீயே அறிந்திருப்பாய்.எங்களின் குறிக்கோள் நீதான்,உனை சிறைப்பிடித்த விஷயத்தை நாட்டிற்குள் சென்று சேர்க்க வேண்டும் அல்லவா அதற்காகத் தான் இவன் மீதமிருக்கிறான்.

நாங்கள் இருபத்தி ஐந்து பேர் தேவைக்கு அதிகமான ஆயுதங்களோடே இருக்கிறோம் இந்த நிலையில் நீ தப்பிப்து என்பது அத்தனை இலகுவான விடயம் அல்ல.குறைந்தபட்சம் புறமுதுகிட்டு ஒழிந்து கொண்டாய் என்ற அவப் பெயராவது வராமல் இருக்கும்.எந்த தந்திரத்தையும் பிரயோகிக்க நினைக்காமல் எங்கள் முன் வந்துவிடு.”

“புறமுதுகிட்டு ஓடும் அளவு இந்த தமிழ் மண்ணின் மாந்தர்கள் கோழையில்லைடா என்றவள் தாமதிக்காமல் தன்னிடமிருந்த வளரியை வீசியிருந்தாள்.காற்றை கிழிந்து சுழன்று சென்ற அது ஒருனின் கழுத்தை செவ்வனே பதம் பார்த்துவிட்டு மீண்டும் அவள் கரத்தை எட்டியிருந்தது.

அதைப் பற்றியவாறே முன்னேறி நடந்தவள் அவர்களின் முன் சென்று நிற்க அவளது படை வீரன் கால்கள் மண்டியிட்ட நிலையில் ஒருவனின் பிடியில் இருந்தான்.

ஏற்கனவே வளரியை பற்றி அறியாமல் அந்த வீரர்கள் திகைத்து நின்றிருக்க இமைக்கும் நேரத்தில் தன் வீரனை பிடித்திருந்தவனை நோக்கி அடுத்த வளரியை வீசியிருந்தாள்.

அதை எதிர்பார்த்திருந்த அவள் வீரனும் தாமதியாது எழுந்து அருகிலிருந்தவர்களை தாக்க ஆம்பித்திருந்தான்.நீண்ட நெடிய போராட்டம் அத்தனையையும் மனதைரியத்தோடு வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தாள் சிவகங்காவதி.

இருப்பினும் ஒரு எல்லைக்கு மேல் அவளால் நிலைமையை சமாளிக்க முடியாமல் போனது.எஞ்சியிருந்த ஒரு வீரனையும் மாய்த்து விட்டிருந்தனர் எதிரி நாட்டு வீரர்கள்.தனியாய் போராடும் அவளின் வீரத்தை கண்டவர்கள் உண்மையில் பிரமித்துதான் போயிருந்தனர்.

வேறு வழியில்லை என்றுணர்ந்தவர்கள் பின்னிருந்து அம்பை அவள் நோக்கி எய்துவிட எதிர்பாரா தாக்குதலில் சட்டென மண்டியிட்டு வீழ்ந்திருந்தாள்.அந்த நொடிக்காக காத்திருந்த எதிரிப் படையோ அவளை அப்படியே விலங்கிட்டு பிடித்திருந்தது.

அத்தனை வலியிலும் அவள் உதடுகள் ஏளனப் புன்னகையை உதிர்த்தவாறு “கோழைகள்!!”,என்று முனகியது.அங்கிருந்து இழுத்துச் செல்ப்பட்டவள் நாட்டிற்கு எல்லையில் அமைந்திருந்த தங்களின் கூடாரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

அத்தனை அத்தனை வீரர்கள் முன் தான் இப்படி அழைத்துச் செல்லப்படுவதை எண்ணி மனதினுள் வெதும்பித் தீர்த்தாள்.இருந்தும் இத்தனைக்கும் காரணமான முகலாய அரசனை பார்க்க வேண்டும் என்றே அமைதியாய் இருந்தாள்.

அத்தனை கூடாரங்களுக்கும் நடுவில் அமைந்திருந்த ஒரு கூடாரத்தின் வாயிலில் அவளை நிறுத்தியவர்களில் ஒருவன் மட்டும் உள்ளே சென்று விடயத்தை கூறி திரும்பி வந்து அவளை உள்ளே இழுத்துச் சென்றான்.

 அங்கு நாற்காலியில் நடுநாகமாய் ஆஜானுபாகுவாய் வீற்றிருந்தான் இஷான்.அவளை கண்டவனின் கண்களில் சிறு சந்தேகம் எட்டிப் பார்த்தது.

அவளை வரவேற்பதாய் அவன் பாரசீகத்தில் மொழிய அருகிலிருந்தவன் அதை தமிழில் மொழிப்பெயர்த்தான்.

“உசூர் உன்னை எங்கள் இடத்திற்கு வரவேற்கிறார்”

“நேர் வழியில் போரிட முடியாமல் என் முதுகில் குத்தி அடிமையாய் அழைத்து வந்து வரவேற்ப்பும் வழங்கும் உங்கள் அரசர் மிக மிகப் பெருந்தன்மை வாய்ந்தவர் தான்.”,என்று பாரசீகத்திலேயே பதிலுரைக்க இஷான் உட்பட அனைவருமே திகைத்து விழித்தனர்.

ஒரு நொடி திகைத்து மீண்டவனாய் தன் இருக்கையிலிருந்து எழுந்தவன் அவளருகில் வந்து தன் கைக்கத்தியை எடுத்து அவள் கழுத்தில் வைத்திருந்தான்.

“நீ நுழைந்த நொடியே உன்மேல் எனக்கு சந்தேகம் இருந்தது.இந்த பாளையத்தின் மன்னர் வயதில் பெரியவர் என்ற செய்தி அறிந்திருந்தேன்.நீ யார்?மன்னருக்கு ஆண் மகவும் இல்லையென்று தெரியும்.சொல் மன்னர் உன்னை எதற்காக அனுப்பினார்.உங்களின் திட்டம் என்ன?”

“ம்ம் உங்கள் கூட்டத்தின் முதல் புத்திசாலியை பார்த்தாகி விட்டது..கூறுகிறேன் ஆனால் அதற்கு முன் நீ என்னோடு வாள்ப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் அதன்பின் அனைத்தையும் கூறுகிறேன்.”

அந்த இடமே அதிரும் அளவிற்கு சிரித்து கர்ஜித்தான் இஷான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "சுஷ்ருதா..." - வித்தியாசமான காதல் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஆனாலும் உன் மன திடத்தை கண்டு வெகுவாய்  பெருமை கொள்கிறேன்.என்னைப் பற்றியும் என் திறமை பற்றியும் அறியாமல் சிறு பிள்ளையென பிதற்றும் உன்னைப் பார்த்து சிரிக்கத்தான் முடிகிறது.

இருந்தும் போட்டி என்றுமே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று ஆகட்டும் இவனது கைவிலங்கை அவிழ்த்து விடுங்கள்.”

“உசூர் அவன்தான் ஏதோ பிதற்றுகிறான் என்றால் நீங்களும்..”

“ஏன் உன் அரசன் என்னிடம் தோற்றுவிடுவான் என அஞ்சுகிறாயா?”

“எங்கு வந்து என்ன பேசுகிறாய் உன் நாவை இப்போதே அறுத்தெறிகிறேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.