(Reading time: 13 - 26 minutes)

அது மட்டுமே அவள் திருமணத்தை இத்தனை நாளும் அவள் போக்கில் விட்டு வைத்திருக்க இருக்கும் ஒரே காரணம்.இவ்வாறு மணிமேகலையோடு அவள் உரையாற்றிக் கொண்டிருக்க அவ்விடம் தன் மனைவி கங்காம்மாவோடு வந்தார் சேதிராயன்.

“வாருங்கள் தந்தையே!தாயே!ஆசீர்வாதம் செய்யுங்கள்”

“நன்மை உண்டாகட்டும் மகளே!”.

“என்ன தந்தையே துணைவியாரோடு எனை சந்திக்க வந்தீருக்கிறீர்கள்?”

“ம்ம் இப்பொழுதெல்லாம் உன் குறும்பு எல்லை மீறுகிறது மகளே.பார்த்து ரசிக்க நாங்கள் தயாராக இருந்தாலும் மற்வர்களை பொறுத்தமட்டில் நாங்கள் பொறுப்பற்ற பெற்றோராகவே தெரிகிறோம்.”

“அடடா என் பெற்றோரை இப்படி கூறும் தைரியம் வாய்த்தவர் யார் இந்த மண்ணில்!காட்டுங்கள் என்னிடம் இப்போதே இதற்கு நியாயம் கேட்கிறேன்.”

“விளையாட்டு போதும் சிவகங்காவதி தந்தை மிகுந்த மன வருத்தத்தோடு இருக்கிறார்.கொஞ்சமேனும் அவர் சொல்வதை பொறுமையாய் கேளம்மா”

“சரி சரி என்னவாயிற்று இப்போது எதற்காக இத்தனை சோர்வு இருவருக்கும்?”

“எல்லாம் உன் திருமணம் பற்றியது தான் மகளே..எங்களுக்கும் வயதாகிக் கொண்டே இருக்கிறதல்லவா!இப்போது கூட ஒரு நல்ல வரன் தஞ்சை பகுதியிலிருந்து வந்திருக்கிறது.எனக்கும் உன் தாய்க்கும் கூட மிகுந்த திருப்தி. இருந்தும் வழக்கமான உன் பலபரீட்சையை நடத்தி தான் இந்த திருமணத்திற்கு நீ சம்மதம் சொல்வாய் அல்லவா அந்த வருத்தம் தான்.”

“…..”

“ஏன் அமைதி காக்கிறாய் சிவகங்காவதி..தந்தை கூறுவது உன் காதில் விழவில்லையா.அவர் குரலில் இத்தனை தொய்வை என்றேனும் கண்டதுண்டா..எதாவது கூறு மகளே!”

“தாயே தங்களின் பேச்சு தந்த தாக்கத்தினாலே தான் நான் அமைதி காக்கிறேன்.தாங்கள் கூறும் அத்தனையும் என் அறிவிற்கு எட்டுகிறது.ஆனால் மனம் தான் அதை எளிதாய் ஏற்க முடியாமல் தயங்குகிறது!”

“ஏன் மகளே இந்த திருமண விடயத்தில் அப்படி என்ன உன் மனதை போட்டு குழப்புகிறது.இந்த வரன் வேண்டாமென்றாலும் பரவாயில்லை.உனக்கு பிடித்தமாய் வேறு யாரையாவது பார்க்கலாம்”

“தந்தையே இப்படி ஒரு தந்தையை பெற நான் எத்தனை காலத்தவம் செய்தேனோ அறியேன்.ஆனால் பிரச்சனை அதுவல்ல.உங்களின் இந்த கவலை தோய்ந்த முகத்தை காண திடமில்லாமல் உங்களிடம் மறைத்த ஒரு விடயத்தை கூறுகிறேன்.

என் திருமணம் என்ற ஒன்று அத்தனை எளிதாக நடக்க போகிற ஒரு விஷயம் இல்லை.இது என் ஈசன் இப்பிறவியில்  எனக்களித்த சங்கல்பம்.அதை நம்மால் மாற்ற முடியாதல்லவா?!”

“என்னம்மா என்னென்னவோ கூறுகிறாய்!என்னவாயிற்று சற்று தெளிவாய் கூறு.”

“என் திருமண பேச்சை ஆரம்பித்த முதல் நாளே என் ஈசன் இந்த அறிகுறியை காட்டிவிட்டான் தாயே..முதலில் சற்றே நடுக்க முற்றது உண்மை ஆனால் பரம்பொருளை மீறி செய்ய நம்மிடம் ஏதும் உண்டோ!

அன்று காலையில் பூஜையில் ஈடுபட்டிருந்த போது ஏதேதோ எண்ணங்கள் காட்சிகள் மனக்கண்ணில் போர்களமும் உங்கள் கண்ணீரும் என மாறி மாறி ஏதேதோ காட்சிகள் ஆனால் இறுதியில் முகம் கொள்ளா பூரிப்போடு திருமதி பட்டம் சுமந்து என் கணவர் என்ற ஒருவரோடு நான்.அந்த முகமோ வேறு எதுவுமோ தெளிவாய் நினைவில்லை எனக்கு.

அந்த நொடி சட்டென கண்விழித்தேன் அகமும் முகமும் விதிர்த்து போயிருந்தது எனக்கு.அதன் பின் உங்களிடம் இதை கூற வேண்டும் என்று வந்தவள் தான் என்னையே அறியாமல் வாள் யுத்தத்தில் வெல்பவரையே திருமணம் புரிவேன் என்று கூறினேன்.

அன்று முழுவதுமே என் ஈசனின் திருவிளையாடலை எண்ணி எண்ணி பூரித்துப் போனேன்.அதே போன்று இன்று வரை ஒருவர் கூட என்னை வாள் வீச்சில் வெற்றி கொள்ளவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "சுஷ்ருதா..." - வித்தியாசமான காதல் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இதிலிருந்தே புரியவில்லையா எனக்கானவரை நான் அடையும் காலம் இன்னும் வரவில்லை என.எனவே தாங்கள் இருவரும் எதை நினைத்தும் கவலை கொள்ளாதீர்கள்.நடப்பது நடந்தே தீரும் அதை அந்த ஈசனை அன்றி யாரும் மாற்றப் போவதில்லை.”

“சிவகங்காவதி!!!பேச நா எழவில்லை எனக்கு.உன் சிவ பக்தியை நினைத்து மனம் குளிர்ந்து போவதா இல்லை நீ கூறிய செய்தி கேட்டு மனதை தேற்றி கொள்வதா சத்தியமாய் தெரியவில்லை.ஆனால் உன் கணிப்பு என்றும் சரியில்லாமல் போனதில்லை.அதை வைத்து பார்த்தால் என்ன நடக்கப் போகிறதோ என மனம் பதைபதைக்கிறது மகளே!!

“தந்தையே அத்தனை மோசமான எதையும் என் ஈசன் எனக்கு அளித்துவிட மாட்டார் என்றே தோன்றுகிறது.பொறுத்திருந்து பார்க்கலாம் தாயே நீங்கள் இப்படி கண்ணீர் வடித்தால் தந்தையை தேற்றுவார் யார்?”,எனஇருவருக்கும் மாறி மாறி தன் ஆறுதலை வழங்கினாள் சிவங்காவதி.

அதே நேரம் இந்துஸ்தானத்தின் அனைத்து பகுதியிலும் முகலாய பேரரசின் ஆட்சி செழித்து வளர்ந்திருந்தது.தில்லியின் அருகில் பலமிகுந்த சிற்றரசின் மன்னனாய் சிறந்து விளங்கினான் இஷான் நஸீம் 28 அகவே நிரம்பிய இளைஞன்.

பெயருக்கேற்றவாறே மிகவும் புத்திசாலியாகவும் அருமையான ஒருங்கிணைப்பாளனாகவும் திகழ்ந்தான்.இத்துனை பலம் பொருந்தியவன் முகலாய அரச பரம்பரைக்கு முக்கியமானவனாக இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.