(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - தாரிகை - 29 - மதி நிலா

series1/thaarigai

ந்திப்புகளும் திருப்பங்களும்..!! என்றோ எப்பொழுதோ புரியாமல் தெரியாமல் உணராமல் கொன்ற ஒருவருடனான சந்திப்பு..!! அதுவும் இனி ஒருமுறை அவரை சந்திதிடவே கூடாதென்ற நினைப்பில் அவளிருக்க காலம் வகுத்திருக்கும் வழி தாரிகையை சமுத்திரத்திடமே சேர்த்திருந்தது..!!

சமுத்திராவின் வரவேற்பில் கண்களுக்கு எட்டாத ஒரு புன்னகை தாரிகையிடம்..!!

மாமனையும் மருமகளையும் இறுக்கையில் அமர வைத்த சமுத்திரா இருவருக்கும் வேண்டி பழரசம் எடுத்துவர சமையலறைக்குச் செல்ல, “இவங்களை எப்படி உங்களுக்குத் தெரியும் மாமா..??”, காத்திருந்தாற்போல் கேட்டிருந்தாள் தாரிகை கிசுகிசுப்பாக..!!

“நான் இங்க தானே தாரு வேலை பார்த்தேன்.. அப்போ இவங்களைப் பார்த்திருக்கறேன்..”, என்றிருந்தான் வெற்றி..

“எங்கிட்ட ஏன் சொல்லல்ல நீங்க..??”

“சொல்ல சந்தர்ப்பம் கிடைக்கல பாப்பா.. அதுவும் இல்லாம நான் சொல்லிருந்தா நீ இப்ப என்கூட வந்திருக்கமாட்ட..”, அவளை நன்கு அறிந்தவனாய்..!!

அதற்குள் வழிய வழிய கேரட் சாறு வந்திருந்தது..!! எல்லாம் சமுத்திராவின் உபயம்தான்..!!

தயக்கம் மேலிட தாரிகை சங்கோஜமாய் அமர்ந்திருக்க, “எடுத்துக்கோ தாரிகை..”, பெண்ணிடம் நீட்டியிருந்தார் சமுத்திரா..

மாமனை ஒரு பார்வை பார்த்தவள் தயக்கம் நீங்காது சமுத்திரா கொடுத்ததை எடுத்துக்கொள்ள.. பாவமாய் இருந்தது சமுத்திராவிற்கு..!!

“ச்சீ.. எந்திரிச்சுப் போ முதல்ல.. அக்காவா..?? யார் அக்கா எனக்கு..”, அன்று அகங்காரத்தில் குதித்தவன் இன்று என்னவோ அத்தனை புதிதாய் காட்சியளியப்பதாய்..!!

“உனக்கு என்ன படிக்கனும் தாரிகை..??”, அவளையே பார்த்தபடி சமுத்திரா கேட்க..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஐ ஏ எஸ்..”, என்றிருந்தாள் தயக்கமாக..

“பெரிய கனவுதான்..”, மெச்சுதல் பார்வையுடன் சொன்னவர், “என்ன டிகிரீன்னு முடிவு பண்ணிட்டியா..??”, கூடவே..

“பொலிட்டிக்கல் சைன்ஸ் இல்லைன்னா ஹிஸ்டரி..”

“அதென்ன இது இல்லைன்னா அதுன்னு ஒரு சாய்ஸ்..??”

“அது வந்து.. நான் இப்படி இருக்கறதால நான் நெனச்சதைப் படிக்க முடியாது இல்லையா..?? அதான்..”

“படிக்கறதுக்கும் நீ இப்படி இருக்கறதுக்கும் என்ன சம்மந்தம்..??”

“சம்மந்தம் இல்லைன்னா என்னை ஏன் எங்க ஊருல எந்த காலேஜுலையும் சேர்த்திகல..??”

“அவங்களுக்கு கொடுத்து வைக்கல.. தட்ஸ் ஆல்.. லைப்ல என்னைக்கும் சாய்ஸ் வைக்காத தாரிகை.. எய்தர் ஆர் ஆப்ஷன் இருந்தாலே நம்ம எடுக்கற முடிவுல நமக்கு நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம்.. ஐ ஏ எஸ் னு தீர்மானமா சொன்ன மாதிரி.. பொலிட்டிக்கல்னோ ஹிஸ்டரினோ தீர்மானம் பண்ணனும் நீ.. காலேஜுல போய் எனக்கு இதுல ஏதோ ஒன்னு கொடுங்கன்னு நீ கேட்டா.. அவங்க அவங்க இஷ்டப்படிதான் உனக்கு அமைச்சு கொடுப்பாங்க.. கிடைக்கறத ஏத்துக்கனும் நீ.. இதுவே எனக்கு இதுதான் வேணும்னு தீர்மானமா இருந்து பாரேன்.. உனக்கு வேண்டியது கண்டிப்பா கிடைக்கும்.. உன் முயற்சியால..”, என்றவர் சிறு இடைவேளைவிட்டு, “இப்ப சொல்லு அரசியலா..?? வரலாறா..??”, அவளை ஊடுருவியபடி..

“வரலாறுதான்..”, சத்துபானம் குடித்ததுபோல் இருந்தது தாரிகைக்கு..!!

கல்க்கட்டாவில் யாருமில்லா அநாதையாய் நிற்கதியில்.. யார் மட்டம் தட்டினாலும் குனிந்துபோகும் பெண் அல்ல இந்த சமுத்திரா.. இவள் வேறு..!! முற்றிலும் வேறு..!! கண்களில் நிலைபெற்றிருந்த வெறுமைகளும் நம்பிக்கையின்மையும் மறைந்துபோய் தேஜசுடன் புதிதாய்..!! முற்றிலும் புதிய பரிமாணம்..!! ஒருவித ஆச்சர்யமே தாரிகைக்கு..!! எது கொடுத்த நம்பிக்கை இது..?? இந்த நிமிர்வு.. தெளிவு எல்லாம்.. பிரம்மிப்பாய்..!!

எல்லாவற்றிற்கும் அனுபவமும் காலமும் காரணமென தெரியவில்லை இந்த சிறு பெண்ணிற்கு..!! காணாத பொருளை கண்டுவிட்டதுபோல் சமுத்திராவை வட்டமிட்டது தாரிகையின் விழிகள்..!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“என்ன தாரிகை என்னை இப்படி பாக்கற..??”, சிரிப்புடன்.. உன்னை நான் கண்டுகொண்டேன் என்பதாய்..

மனதில் தோன்றியதை மறைக்கத் தோன்றவில்லை அவளுக்கு..!!

“வயசானவங்க பேசுறமாதிரி பேசுறேனோ..??”, கேலியாக..

“இல்லையில்லை..”, உடனடியாக மறுத்தவள், “ரொம்பவே மெச்சூர்டா பேசறீங்க நீங்க.. ரொம்ப வித்யாசமா.. ரொம்பவே.. அன்னைக்குப் பார்த்ததுக்கும் இன்னைக்குப் பார்க்கறதுக்கும்..”, மறையாது..

“அனுபவம்தான் எல்லாம்.. அன்னைக்கு எனக்கு ஒன்னும் தெரியாது.. இந்த சமூகம்.. என்னை சுத்தி நடக்கற விஷயம்னு ஒன்னும் தெரியாது.. ஆனால் இப்போ அப்படி இல்லையே.. எல்லாத்தையும் பார்க்கறேன்.. எல்லாத்தையும் நானே பேஸ் பண்றேன்.. எனக்குன்னு ஒரு அங்கீகாரத்தை நானே தேடறேன்.. அதை நோக்கி ஓடறேன்.. அது கொடுத்த தன்னம்பிக்கையா இருக்கலாம்..”,என்றவருக்கு என்ன தோன்றியதோ, “எனக்கும் உன்னை பார்க்கும்போது அப்படித்தான் இருக்கு.. ரொம்ப வித்யாசமா..”, என்றிருந்தார் பட்டென..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.