(Reading time: 12 - 23 minutes)

மாலை நேரத்து மன்னவன் வானில் வாசம்கொள்ள அலையடித்து ஓய்ந்ததுபோல் காட்சியளித்தது அந்தத் தெரு..!!

சிதறிக்கிடக்கும் குப்பைகளை அனைவரும் கூட்டாக சுத்தம் செய்ய சமுவும் மொழியும் அப்பொழுதுதான் வீடு திரும்பி இருந்தனர்..!! முகத்தில் அவ்வளவு களைப்பு..!!

அலங்கோலமாய் காட்சியளித்த வாசல் அவர்களை வரவேற்க.. தலைசுற்றித்தான் போனது இருவருக்கும்..!!

“அக்கா.. அது வந்து..”, என்று தாரிகை இருவரையும் கண்டதும் ஆரம்பிக்க..

“ஹோலியா இன்னைக்கு..??”, என்று கேட்டிருந்தாள் மொழி ஆர்வமாய்..

“அது அடுத்த மாசம்தான்க்கா..”, என்ற ஆர்த்தி காலையிலிருந்து நடந்தவற்றைச் சொல்ல..

“நல்லது நல்லது..”, என்ற சமுத்திரா, “உங்களுக்கு ஒரு ஒரு மணிநேரம் டைம்.. அதுக்குள்ள.. சுத்தமாயிடனும்..”, கண்களை உருட்டி மிரட்டிவிட்டுச் செல்ல..

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட ஆர்த்தியும் தாரிகையும் சுத்தம் செய்யும் பணியை தொடர அவர்களுடன் சேர்ந்துகொண்டாள் மொழி..!!

“அக்கா.. நாங்களே பண்ணிடறோம்..”, ஆர்த்தி அவரைத் தடுக்க..

“நீங்களா..??”, கொஞ்சம் நக்கலாக பதில் வந்தது மொழியிடம்..

“பண்ணிடறோம்க்கா..”, தாரிகை தன் பங்கிற்கு வாக்குறுதி கொடுக்க..

“பத்து நாள் ஆனாலும் இந்த வேகத்துல சுத்தம் பண்ணா பண்ண முடியாது பிள்ளைங்களா..”, சலித்துக்கொண்ட மொழி, “நீங்க இரண்டு பேரும் எனக்கு உதவி பண்ணுங்க.. சீக்கிரம் முடிச்சிடலாம்..”, என்றபடி சேலையை தூக்கிக் கட்டியிருந்தார்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதோ இதோவென வேலைகள் முடிய ஆர்த்தி தனது இல்லம் நோக்கி சென்றிருக்க.. சூடான காபியை பரிமாறிவிட்டு சமுவும் அசதியில் முடங்க வெளி வாசலில் தாரிகையும் மொழியும் மட்டுமே..!!

“உங்ககிட்ட ஒன்னு கேக்கவா..?? தப்பா ஒன்னும் நெனச்சுக்க மாட்டீங்களே..??”, சில நாட்களாக மொழியிடம் கேட்கவேண்டும் என்று நினைத்ததை கேட்பதற்கு தாரிகைக்கு தயக்கம்..(?)

“பீடிகையெல்லாம் பலமா இருக்கே..?? என்ன விஷயம் செல்வி கேளு..”

“இல்லை.. உங்க அம்..மா.. அ..ப்பா..??”

“தெரியல செல்வி.. நான் இங்க இருக்கேன்னு அவங்களுக்கு தெரியுமானுகூட தெரியாது..”, இயல்பாக சொல்வதுபோல் இருந்தாலும் அதில் ஒரு சோகமும் ஏக்கமும் ஒளிந்திருக்கவே செய்தது..

“அவங்களை நீங்க அதுக்கப்புறம் போய் பார்க்கலயாக்கா..??”

“ஹ்ம்.. அதெல்லாம் போய் பார்த்தேன்.. பார்க்க மட்டும்தான் என்னால முடிஞ்சுது.. பேச முடியல.. அதை அவங்க அனுமதிக்கல.. நான் அவங்களுக்கு தலைகுனிவாம்.. அவமானமாம்.. என் நிழல் பட்டாக்கூட விளங்காதாம்.. துரத்திட்டாங்க..”, அவர் தனது வேதனையை முழுங்குவது நன்றாகவே புரிந்தது தாரிகைக்கு..

“அக்கா..”, என்றபடி அவரது கைகளை அவள் தொட..

“ஒன்னுமில்லடா..”, தனது கண்களைத் துடைத்துக்கொண்டவர், “எதிர்பாத்துத்தான் போனேன்.. அப்படியெல்லாம்தான் நடக்கும்னு தெரியும் எனக்கு.. இருந்தாலும் மனசுல ஒட்டிட்டு இருக்கும்ல பாசம்னு ஒன்னு.. அது அவங்களைப் பார்த்ததும் ஒரு எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுடுச்சு..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிரேமாவின் சுப்பையாவின் "உன்னில் தொலைந்தவன் நானடி..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“சாரிக்கா..”

“ப்ச்.. அதெல்லாம் ஒண்ணுமில்லை செல்வி.. பழகிருச்சு இப்போ.. எல்லாத்தையும் ஏத்துக்க பழகிட்டேன்.. பழகிக்கனும்..”, என்றவர் சுற்றிலும் பார்வையிட்டபடி, “இங்க இருக்கறவங்க எல்லாருக்கும் பின்னாடி ஒரு கதை இருக்கு செல்வி.. சின்ன வயசுல தடுமாறி பாதை மாறி போனவங்க.. அம்மா அப்பாவே வெளில போக சொல்லி வெளியில வந்தவங்க.. அம்மா அப்பா இருக்க சொல்லியுமே அங்க இருக்க முடியாம வெளில வந்தவங்கன்னு.. நிறைய நிறைய அனுபவங்கள் எல்லாருக்கும்.. ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் இங்க இருக்கறவங்க எல்லார்த்தையும்விட நீ ரொம்ப லக்கி.. உன்னைப் புரிஞ்சுக்கற சுற்றம் உனக்கு.. பார்த்துப் பார்த்து செய்யற சொந்தங்கள்.. நீ இந்த சமூகத்தை மட்டும் பேஸ் பண்ணா போதும்.. மே பி அதுக்கான பயிற்சிக்குத்தான் உன்னை இங்க விட்ருக்காங்கன்னு நினைக்கறேன்.. இந்த அனுபவம் உனக்குத் தேவை செல்வி.. நீ கத்துட்டு இருக்கத்தான்.. இல்லைன்னு சொல்லல.. இருந்தாலும் உனக்குள்ள ஒரு அலைபுருதலை என்னால பார்க்க முடியுது.. அது என்னென்னு தெரியல எனக்கு..”, என்றவர் அவளைப் பார்த்திட..

“...........................................”, மௌனமே பதிலாய்..

“எனக்கிட்ட நீ சொல்லனும்னு எதிர்பார்க்கல.. அதைவிட்டு நீ வெளியில வரணும்னு எதிர்பார்க்கறேன் நான்.. அது என்னைப் பொறுத்த வரைக்கும் தேடலா மாறனும்.. உனக்கான தேடலா இல்லாம இந்த சமூகத்துக்கான தேடலா இருக்கணும்.. ரொம்ப அறிவுரை சொல்றேன்னு நினைக்கறியோ..??”

“ச்சே.. ச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்லைக்கா.. அப்படி எல்லாம் நினைக்கல நான்..”, மறுப்பாய் தலை அசைத்தவளுக்கு இன்னுமே தெளிவானதுபோல்..!! 

உருவெடுப்பாள்..

Episode # 28

Episode # 30

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.