(Reading time: 12 - 23 minutes)

அப்படியொரு மாற்றம் தாரிகையின் முகத்தினில்.. அவளது வதனம் அப்படியே கசங்கி கருத்திட.. வெறுமையான பார்வை சமுத்திராவை நோக்கி..!! எப்படி நீ என்னைப் பார்த்து அப்படிச் சொல்லலாம் என்பதாக..!!

வெற்றிக்குமே இவள் என்ன தாருவை பழிவாங்குகிறாளோ என்ற நினைப்பு.. ஆனால் சமுவின் முகத்தில் அப்படியொன்றும் இல்லை..!! வெகு சாதாரணமாகவே இருந்தது அது..!! இருந்தும் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை..!!

“சமுத்திரா..”, குரலை உயர்த்தியிருந்தான்..!!

“ப்ச்.. வெற்றி..”, அவனைச் சன்னமாக அடக்கியவள், “பாரு நான் உன்னோட இந்த மாற்றத்தைத்தான் சொன்னேன்.. எனக்கு உன்னை பெருசா தெரியாதுதான்.. இரண்டு தடவைதான் பார்த்திருக்கேன்.. இருந்தும் உன்னோட உடல்மொழி வெச்சு சொல்லனும்னா.. உன்னை யாராவது தப்பா ஒரு வார்த்தை பேசுனா நீ உன்னோட சுயத்தை இழக்கற.. சுயம்ங்கறது உன்னோட உடலைச் சார்ந்தது அல்ல.. அது உன் மனசை சார்ந்தது.. அது உன்னோட திடம் தைரியம் நம்பிக்கை அலட்சியம் துணிச்சல்னு உன்னோட எல்லாத்தையும் சேர்த்தது.. நான் மாற்றம்னு சொன்னது அதைத்தான்.. பட் நீ எப்படி அதைப் புரிஞ்சுக்கிட்ட பாரு..??”

“நீங்க சொல்றது சரிதான்.. எனக்கே நான் ரொம்ப வித்யாசமாத்தான் தெரியறேன்.. ரொம்பவே அந்நியமா.. ஆனால் அதுக்கு ஒன்னும் பண்ண முடியலையே.. அந்த நினைப்பை மாத்தனும்னு நினைக்கறேன்.. முடியல.. என்னவோ அதைச் செய்யவிடாம தடுக்குது..”

“இது ரொம்ப இயல்பான விஷயம் தாரிகை.. நம்மை மாதிரி இருக்கறவங்க எல்லாரும் நடக்கும்.. நம்முள் மாற்றங்கள் நிகழும்போது இப்படி நடக்கறது சகஜம்தான்.. கோழையா இருக்கறவங்க தைரியமா மாறுவதும்.. தைரியமா இருக்கறவங்க கோழையா மாறுவதும்.. ஒன்னும் நம்மளே மாறிப்போம்.. இல்லைன்னா சமூகம் நம்மை அப்படி மாத்திடும்.. இது எல்லாத்தையும் கடந்து முன்னேறிப் போறதுதான் வாழ்க்கை.. சும்மா அப்படியே அதே இடத்தில இருந்தோம்னா.. முன்னையும் போகமுடியாம பின்னையும் போகமுடியாம நரக வேதனை.. பி போல்ட்.. பி யுவர்செல்ப்..”, என்றவர், “உனக்கு சீட் வாங்கிடலாம்.. உனக்குப் பிடிச்ச வரலாறுல.. உன்னை மாதிரி அங்க படிக்கறவங்க கொஞ்சம் இருக்காங்க.. பார்த்துப்பாங்க..”, என்ற சமுவைக் கண்டு புதியதொரு நம்பிக்கை அவளுக்கு..!!

அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்தது.. கிடைத்த புது நண்பர்கள் என ஒவ்வொன்றாய் பெண்ணவள் அசைப்போட்டபடி இருக்க.. சாரலாய் அவள் மீது நீர்த்துளிகள்..!!

உடல் சிலிர்த்து அவள் நிமிர்ந்து பார்க்க.. குறும்புப் புன்னகையுடன் தன்னுடன் படித்துக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டு ஆர்த்தி..!!

“அடியே.. என்னடி பண்ற..??”, தாரிகை சுதாரிப்பதற்குள் நீர் அபிஷேகம் நடந்து முடிக்க..

தனது பங்கிற்கு ஆர்த்தியையும் நனைத்திருந்தாள் தாரிகை..!! சிறுபிள்ளைபோல் உற்சாகம் ஊற்றெடுக்க இருவரும் சில நிமிடங்கள் நீரைத் தெளித்து விளையாட.. அவர்கள் இருவரையும் கண்டு ஒரு பத்து பதினைந்து பேர் அங்கு ஆஜர்..!!

வாளிகளில் நிறப்பப்பட்ட நீருடன் கலர் கோலப்பொடியும் கலக்கப்பட.. ஹோலி பண்டிகை அங்கே..!!

கன்னங்களில் வர்ணங்கள் பூசி.. இதழ்களில் புன்னகை ஏந்தி.. அடித்துப்பிடித்து.. தோளோடு தோள் சேர்த்து அழகானதோர் சொந்தபந்த நிகழ்ச்சி அங்கே..!!

மேளதாளங்கள் இல்லாமல்.. ரத்த பந்த இணைப்புகள் அல்லாமல்.. திருவிழாக்கோலம் பூசிக்கொண்டது அந்தக் கூட்டம்..!!

கோவையை தனது வாசமாகக் கொண்டபிறகு தாரிகை கலந்துகொள்ளும் திருவிழாவாக மாறிட.. அனைத்தும் அவளுக்கு புதுமையாய்..!! விளையாட்டிற்கு ஆர்த்தித் துவங்கிய விளையாட்டு இப்படி விஸ்வரூபம் எடுக்கும் என்று சுத்தமாக அவள் எதிர்பார்க்கவே இல்லை..!! மகிழ்வாகவே உணர்ந்தாள் அவள்..!!

கூட்டாக ஒருபக்கம் மதிய உணவு தயாராகிக்கொண்டிருக்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமென அழகாய் நகர்ந்தது பொழுது..!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

விழிகள் முழுவதிலும் சுவாரஸ்யத்தை குத்தகைக்கு எடுத்தபடி தாரிகை வேடிக்கை பார்க்க, “என்னடி இப்படி பாக்கற..??”, என்றிருந்தாள் ஆர்த்தி..!!

“எல்லாமே புதுசா இருக்கு ஆர்த்தி..”, ஆச்சர்யம் நீங்காமல்..

“நல்லா இருக்குல இது..??”

“நல்லாத்தான் இருக்கு.. ஆனா எப்படி இப்படி இருக்காங்க..?? சும்மா ஒரு இரண்டு நிமிஷம் நம்ம விளையாடினது என்னவோ பண்டிகை மாதிரி மாறிடுச்சு..”

“ஹா ஹா.. இங்க இப்படித்தான் தாரு.. இப்படி இருந்தாத்தான் நல்லா இருக்கு பாரு.. எந்த ஒரு விஷயமும் இல்லாம இப்படி ஆடி பாடி கொண்டாடுவது எல்லாம் ஒருவகையில ஸ்ட்ரெஸ் பிரேக்கர்தான்.. இந்த நாலு மாசம் புக்கும் கையுமா அலைஞ்சுட்டு இப்படி ஒரு சின்ன கொண்டாட்டம்.. நல்லா இருக்குல.. இது இல்லேன்னா லைப் ரொம்ப போர் அடிச்சிடும்..”, என்ற ஆர்த்தி மறைத்துவைத்திருந்த சிகப்பு நிற பொடியை தாரிகையின் மீது தூவிட.. மீண்டும் துவங்கியது ஒரு ஆட்டம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.