(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - என் காதலே – 08 - ரம்யா

En kathale

றிவழகன் தன் மனம் திறக்கப்போகிறான்.அவனுக்கு என் செவியும் சுமை இறக்க தோளும் தர ஆயத்தமானேன்.

"கயல் உனக்கு என் குடும்பம் பற்றி ஓரளவு தெரியும். நான் என் அப்பா அம்மா தம்பி அத்தை இது தான் என் குடும்பம்.நிம்மதி சந்தோஷம் நிறைஞ்சி தான் இருந்தது. ஆனால் சில மாதங்களா பல புயல் வீசிடுச்சு.பல குழப்பங்கள் பல சிக்கல்கள். எல்லாத்தையும் ஏதோ தட்டு தடுமாறி எதையும் உடனே எதிர்கொள்ள முடியாம சமாளிச்சேன்இன்னமும் சமாளிக்கிறேன்.கேட்கறீயா கயல்?"

"ம்ம்ம சொல்லுங்க"

"நான் சென்னை வேலை விட்டு பெங்களூர் வேலை போனதும் கூட என் குடும்பத்துக்காக தான்.பிஸினஸ் பண்ணிட்டிருந்த அப்பா தன் நணபர்னு ஒருத்தர நம்பி பணம் கொடுத்து ஏமாந்து போனாரு.இதை எங்ககிட்ட சொல்லாம மறைச்சிட்டாரு.தனக்கு தானே அந்த வலியை அனுபவிச்சாரு.எப்படியோ குடும்பத்தை சமாளிச்சாரு.என் அத்தை பற்றி தெரியும் இல்லையா கயல்..."

"ம்ம்ம மாமா வோட தங்கை.உங்க கூடவே இருக்காங்க.அவங்க பொண்ணு வளர்...வளரமதி"

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"ம்ம்ம் ஆமா அவங்களுக்கு புற்றுநோய் வந்திடுச்சு. அவங்க வலி ஏதும் வெளிக்காட்டாம வளர விட்டுட்டாங்க.அவங்க சிகிச்சைக்கு பணம் கேட்கும் போது தான் அப்பா பிஸினஸ் லாஸ் பற்றி தெர்ய வந்தது.உடைஞ்சு போயிட்டோம்..சரி நிலமை அவ்வளவு மோசமாகலைன்னு நினைங்சு வீட்டின் பேரில் கடன் வாங்க நினைச்சேன்.ஆனால் அப்பா அதும் வாங்கி பிஸினஸ் லாஸ சரி பண்ண நினைச்சி அதுவும் தோற்றது தெரிஞ்சது.வீட்டின் கடன் திருப்பிக்கொடுக்க முடியாம திணிறிக்கிட்டிருக்காரு.என்ன செய்யனும் புரியலை கயல்.என்னை தூக்கி வளர்த்த அத்தை...இளம்விதவையா எங்க வீட்டுக்கு வந்தாங்க ஆனால் எங்க குடும்பத்தை அப்படி சுமந்தாங்க. அப்படியே விட முடியுமா முடிஞ்சவரை முயற்ச்சி பண்ணலாம்ன்னு வளரர்மதி கல்யாணத்துக்கு சேர்த்த பணம் கொண்டு அத்தை சிகிச்சை ஆரம்பிச்சோம்.அவங்களும் ஓரளவு தேர்ச்சி ஆனாங்க.இதற்கிடையில் வளர்மதி காத்ல் பற்றி தெரிய வந்தது.முதலில் கோபம் வந்தாலும் பிறகு அந்த பையன் வீட்டில் போய் பேசினோம்.அவங்களுக்கும் வளர் பிடிச்சி போச்சு.ஆனால் அந்த பையன் வெளிநாடு போறதுனால கல்யாணத்த சீக்கிரம் நடத்த சொல்லி வற்புறுத்தினாங்க.நாங்களும் வேறு வழி இல்லாமல் சம்மதிச்சோம்.தெரிந்த இடம் எல்லாம் பேசி ப்ரண்ட்ஸ் கிட்ட பேசி அவளுக்கு நிச்சயம் செய்யும் நேரம்........"குரல் உடைந்து ..தழுதழுத்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சந்யோகிதாவின் "வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"அறிவு?!"ஆதரவாய் அவன் கை அழுத்தினேன்.என் கைகளில் முகம் புதைத்து"அத்தை எங்கள விட்டு போயிட்டாங்க கயல்"விம்மி விம்மி அழுதான்.அவன் கண்ணீருக்கு என் கைகள் மட்டுமே கொடுக்க முடிந்தது. சிறு குழந்தையாய் அவன் அழுவது அவன் பாசத்தை காட்டியது.எனக்கும் எங்கோ வலி எடுத்தது.சிறிது நேரம் மனம் விட்டு அழுதான்.மெல்ல கண்ணீர் துடைத்துவிட்டு

"ஆனால் இதுலயும் ஒரு ஆறுதல் எங்க வளர்மதி காதலன் வீட்டில் இத பெருசு பண்ணாம...ஆறு மாதத்தில் நேர கல்யாணம் வச்சிக்கலாம்ன்னு சொல்லிட்டாங்க.ஏதோ நிம்மதி மூச்சு விடும் நேரம் பேரிடியாய் வந்தது வீடு மேல அப்பா வாங்கிய கடன்.அவர் ஏதோ வட்டிகாரன் கிட்டவாங்கியிருக்காரு.அவன் ஏதோ இல்லாத கணக்குகள் காட்டி வீடு எங்ககிட்டயிருந்து பறிச்சிட்டான்.என் அப்பா சிறுக சிறுக சேர்த்து பார்த்து பார்த்து கட்டிய வீடு கயல்.(கண்கள் பனிக்க)அந்த வீட்டில் தான் உன்னை மணப்பெண்ணா கூடிப்போக ஆசைப்பட்டேன்.கனவு கண்டேன்.

இடி தாங்கியா எங்க குடும்பத்தை காத்து நின்ற என் அப்பா எவ்வளவு தான் தாங்குவாரு.உடைந்து போயிட்டாரு.இப்போ வலிப்பு வந்ததில் கால் நடக்க இயலாம நாற்காலியில் இருக்காரு.கோடியா சம்பாதிக்க நான் ய.எஸ் போகலை.கலையரசன் காலேஜ் ஃபைனல்,கல்யாண கனவுகளோட காதலனை எதிர்பார்த்து வளர்மதி,அப்பா முடியாதவரா நாற்காலியில், குடும்ப பாரம் சுமக்க முடியாத அம்மா.பொருளாதார முன்னேற்றம் கொஞ்சம் இருந்தா எப்படியும் நிலைமை சீர் ஆகும்ன்னு நம்பறேன்.இத்தனை குழப்பங்களோட உன்னையும் என் கூட பயணிகக சொல்ல முடியாது கயல்.என் நிலைமை புரிஞசிக்கோ கயல் ப்ளீஸ்"

உறைந்து தான் போனேன்.இத்தனை குழப்பங்கள் இடையில் என்னையும் சந்திக்க வந்திருக்கிறான். என்னிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் இயல்பாய் இருந்திருக்கிறான்.கேட்கத்தான் தோன்றியது.

"அறிவு இத்தனை நடந்திருக்கிறது.தனியாக எதிர் கொண்டிருக்கீங்க.ஏன் ஒரு வார்ததை கூட என்னிடம் சொல்லல.வெறும் இதழோட பழகினீங்களா? மனசார பழகலையா?உங்களை பற்றி எனக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சேன்.அது எவ்வளவு பிழை.உண்மையில் எனக்கு ஒன்றுமே தெரியலை.நான் உங்க மனசுல எங்க இருக்கேன்.புரியலை...ஒரு தோழன் கிட்ட இதை சொல்லமாட்டீங்களா.உங்களுக்கு ஆதரவா உங்க கூட வாழ்க்கை பகிர்ந்துக்க நினைக்கிறேன்.ஆனால் உங்க துன்ப நேரத்தில் நான் உங்க கூட இல்லையே.நான் உங்களுக்கு வேண்டியில்லையே.....வருத்தமாயிருக்கு.நீங்க கடந்த நாட்கள் நினைச்சா மனம் வலிக்குது."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.