(Reading time: 12 - 23 minutes)

"வேண்டாம் கயல் இது வேண்டாமடீ"

அவன் கண்ணீர் என் மோகம் அனைத்து என் சுயநினைவு கொண்டு வந்தது. என்ன செய்ய இருந்தோம் என்று அறிந்தவளாய் அவன் அனணப்பில் விம்மி அழுதேன். சமாதானமாய் அனணப்பு மட்டும தந்தான். நிதானம் அடைநத பின் அவனிடம் கேட்டேன்

"நீங்க ஆசை பட்டது தானே அறிவு ஏன் தயக்கம்?"

"இல்லை கயல் அப்போ வேற இப்போ தப்பா தெரியுது"

"எப்போதும் உங்களுக்கு ஆனவள் நான அறிவு"

"கயல் வேண்டாம் அந்த நினைப்பு.உன் வாழ்க்கையை எனக்காக தேக்கி வைக்காதே"

"நீங்க சொல்லும் காரணம் ஏத்துக்க முடியலை.ஒரு வேளை நம் கல்யாணம் அப்புறம் இநத ப்ரச்சனைகள் வந்திருந்தா?"

"அதான் நடக்கலை யே கயல்.அதுவும் நனமைக்கு தான்."

"எத்தனையோ குடும்பததில் கணவன் மனைவி இப்படி பிரிய நேருவது இல்லையா.ஏன் நம்ம இராணுவ வீரர்கள் மனைவி அவங்களுக்காக காத்து கிடப்பது இல்லையா"

"நாம் கணவன் மனைவி ஆகலை கயல்.வாழ்க்கை நம் திசையை எப்படி வேணும்னாலும் மாற்றும்....நான் வெளிநாடு போன பிறகு நம் தூரம் அதிகரிக்கும். பிரிவுகள் பிளவுகள் ஏற்படும். உன் பொழுதுக்ள் வீணாண பொழுதாகும்.உன் வாழ்க்கையை திசை மாற்று கயல்.இப்போது கஷ்டமாயிருந்தாலும நிரந்தரமா சந்தோஷமாயிருப்ப"

இதையே எத்தனை முறை பேசினாலும் வாக்குவாதம் செய்தாலும் அவன் முடிவில் மாற்றம் இல்லை. நான தோற்று தான் போனேன்.

இறுதியாக நான் நினைத்தது அவனுக்கு நான் ஒரு சுமை என்பதே.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவனுடனான என் காதல் அவனுக்கு புரிய வைக்க என் வாழ்நாள் முழுதும் வேண்டும்.

"சரி அறிவு.நீங்க சொல்லற இந்த பிரிவை நான் ஏத்துகிறேன்.ஆனால் என் வாழ்க்கை யாருடன் நான் தான் முடிவு பண்ணனும். இனி நீங்களா என்னை தேடி வரும் வரை நான உங்களை தொல்லை பண்ணமாட்டேன்.எந்த விதத்திலும்..உங்களுக்கா நான வேண்டும்னு நினைவு வந்தா இது நினைவில் வச்சிகோங்க உங்களுக்காக நான காத்திருப்பேன்"

"கயல் திரும்பவும் இதையே சொல்லறயே!நான் வாழ்க்கை யில ஒரு அத்தியாயம். என்னை தாண்டி உனக்கொரு வாழ்க்கை இருக்கு.புரிஞ்சிக்கோ"

"எதுவும் சொல்லாதீங்க. உங்களை தாண்டி எனக்கு எதுவும் இல்லை. இனி பேச வேண்டாம். பேசி முடிச்சாச்சு.வெளியே கூட்டி போங்க"

நீண்ட பெருமூச்சுடன் வெளியே அழைத்து சென்றான்.கோயில் பாரக் பீச்...மௌனம் மட்டுமே பேசினோம்.எனக்கு கண்ணீர் மட்டுமே வந்ததது.நிலை கொள்ளவில்லை. சிறுவர் பூங்கா சென்றோம்.வெகு நேரம் சிறார்கள் விளையாட்டை பார்த்து கொண்டிருந்தோம்.அவன் எண்ண ஓட்ணமும் என் எண்ண ஓட்டமும வேறு வேறு திசையில். இனி இவ்வளவு தான். நேரம் ஆக ஆக என் நெஞ்சு அடைத்தது.

"கயல் கிளம்பலாமா"என் அழுத முகம் அலுத்துவிட்டது போலும்

"எனக்காக ஒரு உதவி கொஞ்ச நேரம் இங்கிருக்க நினைககிறேன்...அதனால நான் ..."

"தனியா உன்னை இஙக விட்டுவிட்டு எப்படி"

விரக்தியாய சிரித்தேன் புரிந்து கொண்டான்.

"எனக்கு தனிமை வேண்டும் என் போனிலிருந்து அபஅபாக்கு மெஸேஜ் பணணி தாங்க"

"ம்ம்ம்ம சரி நான் கிளம்பறேன்..பை கயல்"

"இன்னொரு உதவி"

"என்ன கயல்"

"ஐ லவ யு கயல்விழி!ஒரு முறை சொல்றீங்களா"

அவன் என் கைபற்றி பொங்கிய கண்ணீர் கண்களில் தப்பிக்க அடக்கிக்கொண்டு

"கயல்விழி என் கண்ணழகி ஐ லவ் யு டீ..."

என் கையில் மெல்ல இதழ் பதித்தான். அவன் கண்கள் தப்பித்த நீர்துளிகள் என் கையில் சுட்டது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"நான் வரேன் நீ சந்தோஷமா இருக்கனும் அது தான் என் ஆசை.என்றுமே உன் சிரிச்ச முகம் தான் என் பலம் கயல்...பை டா"

சட்டென்று எழுந்து சென்றான்.வெறுமையானது என் அருகாமையும் என் மனமும்.அவன் போகும் பாதையையே வெற்த்துக்கொண்டிருநதேன். என் தோள் மீது ஒரு கை.தலை திருப்பினேன்.

"அப்பா"கூக்குரலோடு அறிவு சென்ற திசை காட்டி சிறுபிள்ளையாய் ஏக்கம் காட்டினேன்.

"பார்த்து பேசிட்டு தான வரேன் மா.இப்போ தான் கிளம்பினார்"

என் மீது அவன் காட்டும் இந்த சிறு அக்கறை கூட அவன் மீதான அன்பை அதிகரித்தது.பிரிவு உடலளவே.உயிரை எப்படி பிரிவது.

சிற்பம் செதுக்கப்படும்

Episode # 07

Episode # 09

Go to En Kathale story main page

{kunena_discuss:1244}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.