(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - என் காதலே – 07 - ரம்யா

En kathale

ரவெல்லாம் தலையனை நனைத்து தலை பாரமாய் ஆனது.கண் திறக்க முடியாமல் எழுந்து அமர்ந்தேன்.நேற்றைய நினைவுகள் சுட்டது.அதெல்லாம் வேறும் கனவாய் இருக்க வேண்டுமென தெய்வங்களை வேண்டிக்கொண்டேன். நேற்று மெய் என்பதை அலைபேசியில் இருந்த குறும்செய்திகளும் கால்களும் நிரூபித்தது. கண்ணீல் நீர்கேர்க்க தலை நிமிர்ந்தேன்.அன்பாய் தலை வருடி நின்றிருந்தார் அப்பா.

"அப்பா?!"

"கண்ணா ரொம்ப கலைப்பா இருக்க... காப்பி தரேன் வா"

என் மனதின் பாரம் தெரிந்தும் அதை குத்தி குடையாமல் தன் தோள் மட்டுமே கொடுத்து ஆறுதல் தந்தார் அப்பா.

"கயல் உன்கிட்ட பேசனும் இப்போ பேசலாம் மா?"

"சொல்லு பா"

மெல்ல என் கைபற்றி மொட்டை மாடி அழைத்து சென்றார். இளம்சூரியன் வெளிச்சத்தில் உஷாணத்தில் தன் குளிர்ந்த குரலில் பேச ஆரம்பித்தார்.

"க்ண்ணம்மா நேற்று நீ அறிவழகன் பார்க்க போனேன்னு தெரியும்..."

"அப்பா இன்றைக்கும் போகனும் பா...பேசனும்...."கண்கள் கலங்கியது.

"அது சரி மா நான் உன் ப்ரைவசி ல தலையிட மாட்டேன். ஆனா கண்ணா என் இடத்திலிருந்து பாரு என் அருமை கண்மணி இப்படி தேம்பி அழுது நான பாரத்ததில்லையம்மா.உன் அழுகை உன் மனபாரம் குறைக்கும்ன்னு தான் நான் எதுவும் கேட்கலை.என்னை கட்டுபடுத்திக்கிட்டு அமைதியா இருந்தேன்.என் மனசு தாங்கலைடா"அவர் கண்ணில் நீர் திரண்டது...என்க்கு வலித்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"வாழ்க்கையில் என்ன சோதனை வந்தாலும் என்ன நேர்ந்தாலும் உனக்காக உன் பக்கத்தில் உன் தோள் கொட்த்து நான் இருப்பேன் கயல்.அதை எப்பவும் உன் நினைவில் வச்சிக்கோ.துவண்டு போகலாம் ஆஆனால் உடைஞ்சி போகக்கூட்டது"

கன்னம் பற்றிய அவர் உள்ளங்கை உஷ்ணம் இதமாய் இருந்தது. அவன் தோளில் சாய்ந்து அனைத்துக்கொண்டேன்.

"அப்பா......அறிவு சந்திச்சா பல குழப்பங்கள் தீரும்ன்னு நினைத்தேன்.ஆனால் அதிகம் தான் ஆச்சு.தெளிவே கிடைக்க மாட்டேங்குது பா.நான் சரயா தவறான்னு புரியலை....என்ன பண்ணணும் புரியலை பா"

"கயல் உன்னை துருவி துருவி உன்ன இரணத்தை ஆராய நான நினைக்கலை விரும்பலை.நான் நினைப்பது....அழுகை ஒரு இமோஷன்.ஒரு வடிகால் அவவளவே ஆனால் எதற்காகவும் உடையக்கூடாது.மீண்டு வரனும். உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவுகளும் எடுக்கக்கூடாது கண்ணம்மா.நிதானம் பொறுமை ரொம்ப அவசியம்.அன்னைக்கு சொன்னது தான் இன்றைக்கும் சொல்லறேன்.உனக்குள்ள முன்சிந்தனை வச்சி பேசக்கூடாது. நடப்பதை நடப்மதாய் பாரக்க பழகு.உன ஈகோ தலைகாட்டாமல் கோபம் ஏமாற்றம் எல்லாம தள்ளி வை.தெளிவா பேசு..நிதானம் கவனி.உனக்கு நீயே தடையாகாதே..எதுவுமே மனம் விட்டு பேசு கயல். நேற்று நான உன்னை பாரகக வந்தது...ரகு கிட்ட பேசிட்டேன்.?முதலில் கொஞ்சம் கோபம் வந்தது. ஆனால்அவனுக்கும் உன் சந்தோஷம் மட்டுமே முக்கியம் கயல்.இந்த குடும்பம் உன் சந்தோஷத்துல தான் இயங்குது டா..."

என் அழுகை இப்படி இவரை பாதிதததா.அவர் பயம் புரிந்தது.ஆனால் அந்த எண்ணங்கள் என் மனதில் தோன்றா வண்ணமே நான அன்பால் சூழப்பட்டேன்.அப்பா பேசபேச என்னுள் ஒரு புது இரத்தம் ஓடியது.என் குழப்பங்கள் எல்லாம் சிறுபிள்ளைத்தனமாய் இருந்தது. என் அறிவழகன் அவனிடம் பேச எனக்கென்ன தடை.என் அப்பா இமயம் போல் துணையிருக்க எதையும் வெல்லலாம்.மிகுந்த உத்வேகத்துடன் புறப்பட்டேன் என் காதலை நோக்கி..அப்பாவை நீங்கியதும் மெல்ல தொற்றிக்கொண்டது பயம்.அவன் அயல்நாடு போகிறான்.அதனால் என்ன.அவன் வெற்றி எனக்கு மகிழ்ச்சிக்குறியதே.இது அவனுக்கு மிகப்பெரிய வளர்ச்சி. இதை அவன் சொன்போது கஷ்டப்பட்டு கஷ்டப்படுத்தி விட்டேன்.என்ன நடந்தாலும் எவ்வளவு தூரம் பறந்தாலும அவன் என்னுடையவனை.பரிசு பொருள் வாங்க நினைத்தேன்.பாஸ்போர்ட் வைக்கும உரை வாஙகினேன்..உள்ளே என் புகைப்படம் ஒன்றை இணைத்து வைத்தேன். எனக்காக காத்திருந்தான்.இன்று ஏனோ அவன் இன்னமும் அழகாய் தெரிந்தான்.

"வா கயல்"

"நீங்க வாமட்டும் சொல்லுங்க.சாரி என்னை மன்னிச்சிடுங்க.உங் வளர்ச்சி எனக்ஙு சந்தோஷமே.உங்களுக்காக ஒரு பரிசு"

நீட்டிய என் கையிலிருந்து பெற்றுக்கொண்டான,விரல் நுனிக்கூட தீண்டக்கூடாதெனும் ஜாக்கிரதையுடன்.எனக்கு அது புரிந்து தொலைத்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சந்யோகிதாவின் "வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"வாழ்த்துக்கள்"

கைகுலுக்கலுகாக கை நீட்டினேன்.

"நன்றி கயல்.இதை எதிர்பாரககலை"சட்டென்று கையை விடுவித்து கொள்ள நினைததவன் கையை நன்றாக பற்றிக்கொண்டேன்.

"எதை எதிர்பார்க்கலை நீங்க"

"பரிசு இப்படி சிரிதத முகம்"பலவந்தமாக கையைவிடுவித்து கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.