Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 15 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 15 - சசிரேகா

en vazhve unnodu thaan

தான்யாவை அவளது கணவனுடன் அனுப்பவிட்டு வீட்டுக்குள் யாமினியுடன் வீட்டுக்குள் வந்த ஆதித்யவர்மன் நேராக டைனிங் டேபிளுக்குச் சென்றான். அந்நேரம் அவனுக்கு சட்டென தான்யாவின் ஞாபகம் வந்தது

”நான் எப்ப வந்தாலும் பரிமாற ஒருத்தியிருந்தா, நான் போற வரைக்குமாவது இருந்திருக்கலாம், பாவி கதிரவா அதுக்குள்ள கூட்டிட்டு போயிட்டியேடா இனி எனக்கு யாரு சாப்பாடு பரிமாறுவா சே” என அலுத்துக் கொண்டிருக்க ஐஸூ அங்கு வந்தாள்

”என்ன ஆதி சோகமா இருக்கே என்னாச்சி” என கவலையாக கேட்க அவனோ

”ம் போ ஐஸூ, தான்யா வேற போய்ட்டா, இங்க பாரு எனக்கு டிபன் பரிமாற கூட  இங்க யாருமில்லை” என சோகமாக சொல்ல அதைக் கேட்டுச் சிரித்தபடியே

“இதுதான் உன் கவலையா, நான் இருக்கேன்ல நான் பரிமாறிவிடறேன் வா வந்து உட்காரு” என சொல்லிவிட்டு அவனுக்கு சாப்பாடு பரிமாற ஆரம்பிக்க ஆதியும் அமைதியாக ஒரு இருக்கையில் அமர்ந்து அவள் பரிமாறிய உணவை சாப்பிட்டபடியே அவளை பார்த்துச் சிரித்தான்.

”ஆமா என்ன சொல்றான் உன் புருஷன், அவன் ஆசைப்பட்டபடியே நீதான் ஷோல நடந்துட்டியே, அப்புறம் என்ன உன்னை பிடிச்சிருக்காம்மா இல்லை இப்பவும் டைவர்ஸ்தான் வேணும்ங்கறானா” என கேட்க அதற்கு

”அதை ஏன் கேட்கற நீ முதல்ல சாப்பிடு, நான் அப்புறமா சொல்றேன்” என்றாள் சலிப்புடன் அவளின் பேச்சில் இருந்த வெறுப்பைக் கவனித்த ஆதியோ அவளிடம்

“நான் சாப்பிட்டுக்கிட்டுதான் இருக்கேன் நீ சொல்லு, என்னவாம் அவனுக்கு” என அமைதியாக கேட்க அதற்கு அவளோ இன்னொரு இருக்கையில் அவனை பார்த்தபடியே அமர்ந்துக் கொண்டு பெருமூச்சுடன் சோகமாகப் பேசினாள்.

“அன்னிக்கு ஷோ முடிஞ்சி நம்ம போட்டோ பேப்பர்ல வந்தப்பின்னாடி வினோவுக்கு ஏகத்துக்கும் ஆர்டர் வந்துடுச்சி. நாம ஷோல கலக்கின மாதிரி எல்லாத்திலயும் வரனும்ன்னு கஸ்டமர் சொல்றாங்க ஆதி” என சொல்ல ஆதியோ அவளிடம்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”வேணாம்னு சொல்லச் சொல்லு, அன்னிக்கு ஏதோ வினோ மேல பாவம் பார்த்து ஓகே சொல்லியாச்சி, நாம நடந்தாச்சி அது அன்னியோட முடிஞ்சிடுச்சி. அதுக்காக திரும்பவுமா நான் பரவாயில்ல ஆம்பளை, நீ குடும்ப பொண்ணு திரும்பவும் உன்னை மேடை ஏத்த நான் விடமாட்டேன்” என்றான் உறுதியாக ஆதி அதற்கு

“அதையும் நான் சொல்லிட்டேன் ஆதி, வினோவும் ஒரு பக்கம் சரின்னு சொல்றாரு, இன்னொரு பக்கம் குழப்பமா இருக்காரு” என சோகமாக சொல்ல அதைக் கண்ட ஆதி உடனே வேறு பேச்சை எடுத்தான்.

“சரி அதை விடு உன் பொண்ணு என்ன சொல்றா” என கேட்க அதற்கு அவளோ

”அவளுக்கென்ன ஹாஸ்டல் விட்டு வந்த பின்னாடி வீட்ல அவளுக்கு ஜாலியா பொழுது போகுது, இங்கதான் இத்தனை பேர் இருக்கோமே அவள் ரொம்ப ஹாப்பியா இருக்கா” என்றாள்  சந்தோஷமாக

அவள் சொல்லும் போதே அவளுக்கு பின்னால் வந்து நின்றான் வினோதன். அதை கவனியாத ஐஸூவும் ஆதிக்கு டிபன் பரிமாறி விட எதேச்சையாக வினோதனை பார்த்த ஆதி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே மனதுக்குள் ஒரு திட்டத்தை உருவாக்கி அதை உடனே செயலாக்க நினைத்தவன் வேண்டுமென்றே  ஐஸூவிடம் பேச்சுக் கொடுத்தான்.

”ம் சரி உன் லைப்பை பத்தி நீ என்ன யோசிச்சி வைச்சிருக்க” என்றான் அமைதியாக

“என்ன யோசிக்கனும்” என்றாள் ஐஸூ அலுப்பாக

“வினோவோட நீ சேர்ந்து வாழப்போறியா இல்லை தனியாவே இருக்கப் போறியா”

”நான் அவரோட வாழனும்னுதான் ஆசைப்படறேன் ஆனா, அவருக்குத்தான் என்னை விட என் குழந்தையை விட பேஷன் தொழில் மேல ஆசை.”

“நீங்க ரெண்டு பேருமே ஒரே தொழில் செய்றவங்க, நல்லது கெட்டது தெரிஞ்சவங்க ஆமா அப்படி என்னதான் பிரச்சனை உங்களுக்கு நடுவுல வந்துச்சி எதுக்கு இந்த டைவர்ஸ் எல்லாம்” என ஆதி கேட்க உடனே ஐஸூவும்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரம்யாவின் "என் காதலே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ஒண்ணும் இல்லை ஆதி, ஒரு முறை நான் டிசைன் செஞ்ச காஸ்ட்யூம் போட்டுக்க வேண்டிய லேடி மாடல் வரலை, என்னை போடச் சொல்லி வினோ சொல்லவும் எனக்கு அது பிடிக்கலை, நான் ஒத்துக்கலை அன்னிக்குத்தான் முதல் சண்டை ஆரம்பிச்சது”

“ஏன் என் கூட நடந்த மாதிரி அன்னிக்கும் மேடையில நீ நடக்க வேண்டியதுதானே”

“இல்லை ஆதி அதுல ஒரு பிரச்சனையிருக்கு, அன்னிக்கு அந்த மாடல் வராததுக்கு காரணமே அன்னிக்கு ஷோ நடத்தின புரட்யூசராலதான், அந்தாளு மோசமானவன் அவனுக்கு பயந்து அந்த மாடல் அன்னிக்கு வரலை, வினோ என்னை மாடலா நடக்க வைக்க நினைச்சாரு நானும் அந்தாளை நினைச்சி பயந்து முடியாதுன்னு சொல்லிட்டேன்”

“இதை உன் புருஷன் கிட்ட நீ சொன்னியா”

”சொன்னேன் ஆதி அவர் என் பேச்சை நம்பலை, இப்ப கூட பாரு அந்தாளால நிறைய மாடல்கள் பீல்டை விட்டே போயிட்டாங்க தெரியுமா” என சொல்ல அதைக் கேட்டதும் ஆதி கோபத்துடன்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • ManipayaManipaya
  • Monathirukkum moongil vanamMonathirukkum moongil vanam
  • Muthan muthalil paarthenMuthan muthalil paarthen
  • Neervazhippadooum punaipolaNeervazhippadooum punaipola
  • Vaanamennum veedhiyileVaanamennum veedhiyile
  • Vilaketri vaikkirenVilaketri vaikkiren
  • Yaanum neeyum evvazhi arithumYaanum neeyum evvazhi arithum
  • Yaathu varinum evvaaraayinumYaathu varinum evvaaraayinum

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 15 - சசிரேகாAdharvJo 2019-02-11 16:25
:D rendu ticket vacate seithu achi :dance: Nandhakumar sounded too hopeless facepalm Indha aunties yen tac-n adhi-oda love proposal cancel panama enakku kalyanam aidichi, etc etc solluranga :D Yam's rombha porumaiya irukanga heroin-k second half la role illama panitingale sasi ma'am :eek: Inga vara 7 husbands-um sema sillya ya irukanga ivangalai ithanai varushama samalika mudiyalan ninaicha rombha pavamaga irukku ma'am :lol: however before sending them adhi indha aunties manasa avangalukku puriyavachi send off kodupadhu :cool: adhuthu yaraga irupanaga??? Mr Bheem boy konjam reason-a change panungale yaravdhu unga proposal accept panitinga yam's ungalai pichi pichi thaan :grin: thank you ma'am for this entertaining epi :clap: :clap: Keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 15 - சசிரேகாmahinagaraj 2019-02-11 16:15
செம சூப்பர் மேம்.... :clap: :clap:
ஆதி செம கெட்டிகாரர் தான்.. ;-)
ஆதிய யாமிகிட்ட கொஞ்டச நேரம் பேசவிடுங்க.. சின்னஞ்சிறுசுங்க வேற.. :lol: :P
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 15 - சசிரேகாmadhumathi9 2019-02-11 05:40
wow big big :thnkx: 4 more pages.nice epi. Aadhi pora vegam super.waiting to read more. :clap: (y) :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top