(Reading time: 17 - 33 minutes)

"நாளைக்கு பேசலாம் என்ஸமனசா கல்லாக மாற்றிக்கிட்டு வரேன் இன்னம் என்ன இருக்கோ ஏற்றி வைங்க.."

"கண்ணம்மா இப்படி பேசாத..தாங்க முடியலை டீ...எனக்கு நீ நிம்மதியா அமைதியா இருக்கனும்"

"என் நிம்மதி அமைத் எல்லாம் நீங்க தான்.சொல்லி சொல்லி நான் ஒய்ந்து போயிட்டேன்...புரியலைன்னா புரிய வைககலாம்.....பிடிவாதம் பண்ணா என்ன செய்ய முடியும். என்றைக்கும் என் மனம் திரும்பாது...ஐ லவ் யூ அறிவு"

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

வார்த்தைகளையும் கணணீரையும் கலந்து பேசி முடித்தேன்.

கால்ம் இத்தனை விளையாடுமா?.அதிசயம் தான்.முன்பெல்லாம் அறிவழகன் சந்திக்க போகும் ஒவ்வொரு நாளும் திருநாளாய இனித்தது. அவன் கண்களுக்கு நிஜ தேவதையாய் இருக்க கண்ணாடி முனபு பல மணி நேரம் செலவிட்டேன்.புன்னகை சற்றும் மாறாமல் என் கண்கள் சிரிக்க இதழ் சிரிக்க மனசெல்லாம் சில்லென்றுமழை தூவ...எத்தனை இனிமையான தருணங்கள்.இன்று என்னவனை சந்திக்கப்போகும் இந்நேரம் மனதில் சந்தோஷம் இல்லை.அவனை பார்ககும் அந்த ஒரு நொடி அப்படியே உறைந்து விடக்கூடாதா என்ற ஏக்கம். நாளை என்பது முடியாமல் நீண்டக்கொண்டே இருக்க விருப்பம். திசையறியா பறவையாய் கிளம்பினேன்.யறுமுறை வீடு நுழையும் போது மனம் எப்படி இருக்குமோ உயிர் எப்படி இருக்குமோ...

இன்றேனும் என் அவஸ்தை பார்தது என் காதல் புரிந்து என் துயர் துடைக்கும் பதில் கூற மாட்டானா....எண்ணவோட்டம் அலை மோதியது.கதிர் வீடும் வந்தது.வீட்டு வாசலில் நின்று வரவேற்றான்."வா கயல்"

என் கைபற்றி உள்ளே அழைத்தான்.இந்த உரிமை இந்த இனிமை இன்னும் எத்தனை நேரமோ.முகம் சற்று வாடியிருந்தது.உடம்ப கூட மெலிந்ததாய் தெரிந்தது.எப்போதும் அவன முகத்தில் இருக்கும் ஒளி இன்று இல்லை. பிரிவின் துயர் அவனையும் விட்டுவைக்கவில்லை.

என் கைபற்றி உள்ளை அழைத்து சென்று இருக்கையில் அமர்த்தினான்.கொடுத்த கையை திருப்பி எடுக்கத்தோன்றவில்லை.அவனும் என் கையை விடுவதாய் இல்லை.எங்கள் இதயத்துடிப்பின் சத்தம் அன்றி அங்கு நீண்ட ஆழ்ந்த மௌனம் குடி கொண்டது.அவன் கைகளையே பாரத்துக்கொண்டிருந்தேன்.அவன் என்னை பார்ந்துக்கொண்டிருந்தான்.மௌனத்தின் கொடுமை தாளாமல் "பேசனும்னு சொன்னீங்க?"தலை நிமிர்த்தினேன்.அவன் கண்களில் நீர் திரை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "உன்னாலே நான் வாழ்கிறேன்..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"பேசனும் கயல்..பேசனும்..மனம் திறந்து பேசனும்.....உன்னை  உனனை இப்படி இரணப்படுததிட்டேனே கயல்....."அவன் கைகளால என் கன்னம் ஏந்தி என் கண்கள் வருடினான்.அவன் பார்வை என் வாடிய தேகமும் மனமும் அவனை காயப்படுத்தியது புரிந்தது.

என்ன நினைத்தானோ கைகளை விலக்கிக்கொண்டு கண்ணீர் அடக்கி தொண்டையில் சிக்கிய சோகத்தை முழுங்கினான்.மறுபடி என் கைபற்றி பேசத்தொடங்கினான்.

"கயல் நான் பேசனும் மனம் விட்டு.நீ என் தோழியா என் கயல்விழி யா அமைதியா கேட்கனும்..."

"கண்டிப்பாக அறிவழகன்"

அவனுள் இறுக்கி வைத்திருந்த அவன் சுமைகளை இறக்க நினைக்கிறான்.அவன் மனத்தின் இரகசியங்களை உடைக்கப்போகிறான். நன்றாய புரிந்தது.அவனுக்கு செவியும் தோளும் கொடுகக ஆயத்தமானேன்.

சிற்பம் செதுக்கப்படும்

Episode # 06

Episode # 08

Go to En Kathale story main page

{kunena_discuss:1244}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.