(Reading time: 17 - 33 minutes)

"பேசலாமா நிறைய இருக்குன்னு சொன்னீங்க...முதலில் நீங்களா நானா?"படபடத்தேன்.பயம் ஏறிக்கொண்டது

"என்ன கயல் படபடப்பா இருக்க.....ஆர் யு ஆல் ரைட்"

"நான் நல்லாயிருக்கேன்.நீங்க சொல்லுங்க"

"நான் யு.எஸ் போறேன் கயல் ஆறு வருஷம் லாங்க் டர்ம் ப்ராஜெக்ட்.."

"ம்ம்ம் அது தெரியுமே...அப்புறம்"

"இது தான் விஷயம் .....என்ன அப்புறம்"

"சரி யு.எஸ் இருந்து வந்து"ஏதோ எதிபார்த்தேன்.

"யு.எஸ் எனக்கும் என் குடும்பத்துக்கும் நல்ல முன்னேற்றம் தரம்ன்னு நம்பறேன்.."

"உங்க கல்யாணம்?"நிஜமாய் பொறுமை இழந்த கேட்டேன்.அவனும் சலைக்காமல்

"அதுக்கென்னதன்னால் நடக்கும்"

"என்னங்க நீங்க..... சரி நீங்க இப்படி கொஞ்சநாளா பேசறீங்க.இப்போ நான் சொல்லறேன் கேளுங்க. என் கேள்விககு மட்டும் நேரமையா பதில் சொல்லுங்க"

"கயல்..."

கைக்காட்டி அவனை அமர்த்தினேன்.

"நான் உங்களை காதலிக்கிறேன்.உங்க கூட தான என் வாழ்க்கை னனு பமுடிவு பண்ணிட்டேன்.உங்களை தாணடி எனக்கொரு வாழ்க்கை நிச்சயமாக கிடையாது.என் அப்பா கிட்ட பேசிட்டேன்.இப்போது குடும்பமே சம்மதம் தந்நமாதிரி தான். உங்களுக்காக நான எவ்வளவு நாள் வேண்டும்ன்னாலும் காத்திருப்பேன்.இப்போ சொல்லுங்க...என்னை கல்யாணம் பண்ண உங்களுககு சம்மதமா..நீங்க என்னை இன்னமும் நேசிககறீங்களா?"

கொட்டி முடித்தபின் நீண்ட மௌனமே பதில். எனக்கு புரியவில்லை. அவன் எண்ணவோட்டம் அறுபடாமலிருக்கநானும் அமைதி காத்தேன்.. காதல் சொன்னவன் இப்போது கல்யாணம் என்றதும் பின் வாங்குகிறானா...இருககாது அவன் காதல் நிஜம்.நான காதல் சொல்லும் போதெல்லாம் அவன் மௌனம் கொட்க்கிறான.இது என்ன.நீண்ட பெருமூச்சு மட்டுமே அவன் பதிலாய் வர மௌனம் உடைத்தேன்.

"என்னங்க நான் பேசிட்டேன்.ஒரு கேள்வியும் கேட்டேன்.ஒரு பதிலும் இல்லை.இது கஷ்டமான் கேள்விகூட இல்லையே."

"என்ன சொல்ல எங்க ஆரம்பிக்க...?நீ என் உயிர் கயல்...உன் மகிழ்ச்சி தான் என் ஆசை...ஐ ரியல்லி லைக் யு...."

"அறிவு லைக்கா....நீங்க இதற்கு முன் காதல் சொல்லிருக்கீங்க...இப்போ என்ன.கல்யாணம் தான் ப்ரச்சனை யா?"

"கயல் காயப்படுத்தாத ப்ளீஸ்"அவன் கண்கள் பனித்தது. என் இதயம் வலித்தது. ஆனால் குழப்பங்கள் முடிவு பெற எண்ணி இறுக்கிக்கொண்டேன் இதயத்தை.ஒரு கல் கரைவதாய் எனக்கு பட்டது.

"நீங்க என்னை நேசிப்பது நிஜம் என் கூட வாழ நினைப்பது நிஜம்.ஆனால் எதையோ என்னிடம் மறைக்கறீங்க.என்னைவிட்டு ஒதுங்கி நிற்கறீங்க. ஏன்னு புர்யலை.உங்க ப்ரச்சனை என்ன?உங்க குடும்பம் என்னை ஏற்காதா உங்களுக்கு நான ஏற்றவள் இல்லையா?என் மீது ஏதாவது தவறா?நான் திருத்திக்கிறேன். உங்க மௌனம் தான் எனக்கு இம்சையா இருக்கு"

"கயல் உன் மீது என்னமா தப்பு...நீ தங்கம்...என் தேவதை...ஆனால்...."

எதையோ மென்று முழுங்கினான்

"அறிவு நீங்க வெகுதூரம் போகப்போறீங்க.இது தான் அனேகமா நாம் பேச கிடைசி வாய்ப்பு. இப்பவும் எதுவும் பேசாம குழப்பங்களோட என்ன நிற்க வைக்காதீங்க.என்னை இன்னும் இரணப்படுத்தாதீங்க"

"கயல் என் குடும்பம் நிலைப்படுத்த நான வெளிநாடு போறேன்.இது அவசியம்"

"உங்க வளர்ச்சி எனக்கு சந்தஷம் தான்.உங்க மகிழ்ச்சி மட்டுமல்ல உங்க துன்பமும் நான் பகிர்ந்துக்க விரும்பறேன்.என்னை ஏன் வேற்றுமை படுத்தறீங்க.என்னிடம் சொல்லக்கூடாதா?.வாழ்க்கையோட ஒவ்வொரு கட்டத்திலேயும் உங்க கூட பயணிக்க விரும்பறேன்.உங்களுக்கு புரியலையா.என் வாழ்க்கையே உங்களை சுற்றி தான் பின்னியிருக்கு.ஏன் என்னை தனிமை படுத்தறீங்க?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லதா சரவணனின் "காதல் இளவரசி..." - காதல் & மர்மம் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"கயல் இது என் சுமை நான் தான் சுமக்கனும். நேர்படுத்துவது என் கடமை.இதுல உன்னை இழுத்து உன்னையும் நோகடிக்க விரும்பலை.என்னோடு உன் பயணம் அவ்வளவு சுகமா இருக்காது கயல்விழி... உன்னை கஷ் டப்படுத்த விரும்பலை"

அர்த்தம் நன்றாக புரிந்தது.

"கண்ணாம்பூச்சி போதும் நிறுத்துங்க... உங்களோடு உங்க வாழ்க்கை முழுதும் என்னையும் சேர்த்து பயணிக்க சம்மதமா... ககாத்திருப்பேன்"

"அது வரம் கயல் ஆனா நான் அவ்வளவு அதிர்ஷ்டகாரனா தெரியலை.எங்க வீட்டு சூழல்ல இதை பற்றி பேகூட முடியாது கயல்"

எனக்கு பெரிதாய் ஒப்பாரி வைக்கவேண்டுமாய் இருந்தது.அழுத்தக்காரன் என்னை வதைக்கிறான்.அவனை உலுக்கி எடுத்து அவன் இரகசியம் வெளி கொணர எண்ணினேன்.நிஜமாய் பெர்தாய் தான் ஓலமிட்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.