Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினி

Kaathoduthaan Naan Paaduven

ணமகளே மருமகளே வா வா

உன் வலது காலை எடுத்து வைத்து வா வா

குணமிருக்கும் குல மகளே வா வா

தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா….

என்று அந்த வீட்டின் முன்னே மைக் செட் அலறியிருக்கும் அந்த காலமாக இருந்திருந்தால்...

மைக் செட் மட்டுமா?? திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே பந்தகால் நடும் விழா னு ஊரே திரண்டு திருமண வீட்டிற்கு வந்து அங்காளி பங்காளிகள் எல்லாம் ஒருவரை ஒருவர் கலாய்த்துகொண்டு ப்ரெஷ்ஷாக வெட்டிய தென்னை மட்டையில் கீத்து முடைந்து வீட்டின் முன்னே ஒரு பெரிய பந்தலை  போட்டிருப்பர்....

அதற்கு முத்தாய்ப்பாக அந்த கல்யாண வீட்டு பந்தலை சுற்றி சீரியல் பல்புகள் எரிய பந்தலின் நுழை வாயிலில் “நல்வரவு” என்று பெயர் பலகை அழகான வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து அனைவரையும் வரவேற்று கொண்டிருக்கும்...

அதோடு வாயிலின் இரண்டு பக்கமும் வாழை மரங்கள் கம்பீரமாக நின்றிருக்க,  பந்தலில் வேப்பிலை மாவிலை தோரணம் கட்டி யாராவது புதியவர்கள் பார்த்தாலே இது கல்யாண வீடு என்று தெரியுமாறு இருந்திருக்கும் முன்பு...

பெண்களும் ஒருவருக்கொருவர் சீண்டி பேசி அந்த கல்யாண வீடே கலகலப்பாக அந்த நாள் மட்டும் இல்லாமல் கிட்ட தட்ட ஒரு வாரமே கல்யாண கலையும் கலகலப்பு நிறைந்து இருக்கும் திருமண வீட்டில்...

இன்றைய அவசர கால கட்டத்தில் அதெல்லாம் மிஷ்ஷிங்.. எல்லாத்துக்கும் அவசர படும் தலைமுறை இன்றைய தலைமுறை..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதனால் தான் கோவிலில் சாமியை அவசரமாக தரிசிக்க சிறப்பு வழி, ட்ரெயினில் அவசரமாக டிக்கட் புக் பண்ண தட்கால் முறை  என்று எல்லாத்துலயும் அவசர முறைகளை கொண்டு வந்து விட்டனர் இன்றைய தலைமுறையினர்...

எந்த விஷேசம் ஆனாலும் உறவினர்கள் கூடி நின்று பந்தல் போடும் வழக்கம் மறைந்து இப்பொழுது ரெடிமேடாக இருக்கும் சாமியானா பந்தலாக மாறிவிட்டது.... 

அதுமட்டுமா?? உண்ணும் உணவில் கூட அவசரத்தை கொண்டு வந்து விட்டனர்..   இரண்டு மணிநேரம் சமையல் அறையில் போராடி தன்  அன்பையும் பாசத்தையும் கொட்டி விதவிதமாக சமைத்து தன் குடுப்பத்தாருக்கு பரிமாறி அதில் வயிறும் மனமும் நிறைந்து பூரித்து நிக்கும் வீட்டு அம்மாக்களின் நிலைமாறி, 

பசிக்கிறதா?? உடனே செருப்பை மாட்டி கொண்டு தெருக்கோடிக்கு நடந்தால் பல பாஷ்ட் புட் கடைகள் அவர்களை வரவேற்கும்... அவர்களின் அவசரத்திற்கு அவர்களும் அவசரமாக அந்த உணவை சரியாக வெந்தும் வேகாமலும் எடுத்து கொடுக்க அதையும் அவசரமாக நின்று கொண்டே வயிற்றுக்குள் கடனே என்று தள்ளும் நிலைதான்... 

சமீபத்தில் அதையும் தாண்டி தெருக்கோடி வரைக்கும் நாம எதுக்கு நடக்கணும்?? அவர்களே நம்மளை தேடி வரட்டும் என்று வெளியில் நடக்க கூட அவசியமில்லாமல் மக்களை சோம்பேறிகளாக்கி  பல புட் டெலிவரி ஆப் வந்துவிட இந்த அவசரகாரர்களுக்கு இன்னும் வசதியாகி விட்டது...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மகியின் "வேலன்டைன்ஸ் டே" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

பசிக்கிறதா??   விதவிதமா சாப்பிட வேண்டுமா??  இரண்டு மணி நேரம் அடுப்படியில் போராட வேண்டாம்... நம்முடன் எப்பவுமே ஒட்டி கொண்டிருக்கும் உடன் பிறவா சகோதரி/சகோதரனான அந்த அலைபேசியை எடுத்து அதில் இருக்கும் விதவிதமான ஆப் களில் எதில் அதிக டிஷ்கவுண்ட் தர்ரான் என்று ஒரு அவசர ஆராய்ச்சி பண்ணி உடனேயே தனக்கு வேண்டியதை ஆர்டர் பண்ண, அடுத்த பத்தாவது நிமிடம் அத்தனையும் அவர்கள் வீட்டின் டைனிங் டேபிலில் அமர்ந்து இருக்கும்...

அதோடு முன்பு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களின் முதல் கவலை  டிபன் பாக்ஷ் கொடுப்பதே.. என்ன செய்வது என்று இரவே தீர்மானித்து அதுக்கு எல்லாம் இரவே தயாராக ரெடி பண்ணி காலையில் எழுந்து பள்ளி வேன் வருமுன்னே   டிபன் பாக்சையும் ரெடி பண்ணி பிள்ளைகளையும் ரெடி பண்ணி வேனில் கொண்டு தள்ளிய பிறகே மூச்சு விட முடியும்...

இப்பொழுது அதுக்கும் விடிவு காலமாக, பள்ளி  குழந்தைகளுக்கு டிபன் பாக்ஷ் ஐ அவர்கள் வகுப்பறைக்கே சென்று கொடுப்பதற்கென்றே பல ஆப் கள்  (App) வந்துவிட்டன... ஒரு 10  மணிக்கு அலைபேசியை எடுத்து தன் குழந்தைக்கு என்ன வேணுமோ,  அதை ஆர்டர் பண்ணி விட்டால் போதும்..  பள்ளியை தேடி அவர்கள் வகுப்பறையில் சுடச்சுட உணவு டெலிவரி செய்யபடும் நிலைக்கு முன்னேறி இருக்கிறார்கள் இன்றைய தலைமுறையினர்...

இப்படி எல்லாமே அவசரமாக சுருங்கிவிட்ட நிலையில் திருமணத்தை மட்டுமா விட்டு வைக்க போகிறார்கள்?? ... 7 நாள் கல்யாணம் மூன்று நாளாக சுறுங்கி இப்பொழுது அதுவும் அரை நாள் கல்யாணம் ஆக மாறிவிட்டது.. பாதி பேருக்கு பக்கத்து வீட்டில் கல்யாணம் என்பதே அறிந்திருக்க மாட்டார்கள்..

காலையில் ஒரு கோவிலிலோ இல்லை கோவிலில் பண்ணினால் அதை ரிஜிஷ்டர் பண்ண வேறு அலையணும் என்று நேரடியாக ரெஜிஷ்டர் ஆபிஷ்லயே திருமணத்தை அவசரமாக முடித்து மதியம் ஒரு ஹோட்டலில் வரவேற்பை முடித்து தங்கள் மணவாழ்க்கையையும் அவசரமாக ஆரம்பித்து விடுகின்றனர்.. அதனால் தான் என்னவோ அந்த திருமணமும் அவசரமாக முடிந்து விடுகிறது சில நேரங்களில்.... 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 

About the Author

Padmini Selvaraj

Like Padmini Selvaraj's stories? Now you can read Padmini Selvaraj's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிAbiMahesh 2019-02-28 08:04
Great start Mam.. Match stick patha vaika training ah :grin: Sooper Mam.. Vel's oda vilayatta pakka Waiting :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிPadmini 2019-02-28 11:08
:thnkx: Abi!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிSAJU 2019-02-27 23:47
Nice ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிPadmini 2019-02-28 11:07
:thnkx: Saju!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிAdharvJo 2019-02-27 20:39
Vel's ippadi-a ponna Ganesh kitta complain pana vendi irukkum :P Irunga adhukku munadi Inga oru aunty etho ring game adittu irundhangale avangala konjam enan kavaninga boss(kodumai pidicha aunty) facepalm Padmini ma'am first epi-a summa dhool parakadhu (thambi thaan paraka vachitingale :grin: ) :clap: :clap: :dance:
pathu poratham pakuradhu irukatum ji Inga 10 yrs gap eppadi feel pana poringa :Q:
I second you :yes: Indha traditions ellam engayo disappear agidichi still unga series la appo appo function vachi remind seivathu as said before its :cool: waiting for Akki..Akki-k ertha set thaan madhi...Hope madhu come's to form soon illana indha moraikkum sangathin member-I parka mudiyadhu 8) keep rocking with your mass entertainers :GL: U cld have invited adhi and Bharathi too !! THank you.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிSrivi 2019-02-28 06:38
Adharv ji, naanum adhiyum bharathiyum varuvanganu ninaichen..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிAdharvJo 2019-03-02 14:02
Quoting Srivi:
Adharv ji, naanum adhiyum bharathiyum varuvanganu ninaichen..

Srivi Sis nama sangathin thalaivi padmini ma'am sollitanga so adikadi parpomo illayo but climax la varuvanga 😍
@ padmini ma'am adhu yen vara vara :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிPadmini 2019-02-28 11:05
:thnkx: Thanks Adharv!!
regarding the age difference, it is going to be one of the role in Vel's play.. Correct a point out pannitingale.. Super (y) . vara vara smart a aayittu varringa Adharv... :P
and Adhav, Srivi utpada niraya per Adhi /Bharathi ethirparkkaranaga... kandippa avangalum intha aattatthula appappa varuvaanga.. vara vachidalam... :-) :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிmadhumathi9 2019-02-27 19:10
:clap: nalla thodakkam (y) oru thaayin parithavippai padam pidithu kaattiyathu polirukku. :clap: arumai.waiting 4 vels aattam. :thnkx: 4 this epi & story :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிPadmini 2019-02-28 10:57
:-) Thanks Madhu!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிதீபக் 2019-02-27 15:25
Super start sis (y) . Good narration to :hatsoff: . Eagerly waiting to now the moves of vel's in further episodes :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிPadmini 2019-02-28 10:56
:-) Thanks Deepak!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிmahinagaraj 2019-02-27 15:06
ரொம்ப சூப்பரான முதல் அத்தியாயம் தோழி.... :clap: :clap:
நிகிழ் பயங்கர கோவகாரரா இருக்காரு.. மது எப்படி சமாளிக்க போராங்காளோ... :Q: :D
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிPadmini 2019-02-28 10:55
Thanks Mahi!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிV.lakshmi 2019-02-27 13:05
எப்பவும் போல கலக்கிட்டீங்க :hatsoff: :clap: (y) :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிPadmini 2019-02-28 10:55
:thnkx: Lakshmi!!
Reply | Reply with quote | Quote
# KNPMary mohana 2019-02-27 12:34
Nice update sister (y) starting super :clap:
Reply | Reply with quote | Quote
# RE: KNPPadmini 2019-02-28 10:54
Thank you Mary Mohana!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிSrivi 2019-02-27 12:00
Super sis.. arambame summa adhirudhu.. .. vazhthukkal sis..Vels aatama na summava.. therikka vidarar.. expecting next episode..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிPadmini 2019-02-28 10:52
:thnkx: Srivi!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிRaVai 2019-02-27 11:52
பத்மினி! முதல் பக்கமே, நீங்க ஒரு நாவலாசிரியை என்று காட்டிவிட்டது!
புது மணமகளின் தடுமாற்றமும், தாயின் பிரார்த்தனையும் சிங்காரவேலனின் புன்சிரிப்பும் கதை களை கட்டிவிட்டதை வெளிச்சம்போட்டு காட்டிவிட்டது. வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 01 - பத்மினிPadmini 2019-02-28 10:51
Thank you RaVai!! :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top