(Reading time: 19 - 37 minutes)

தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 09 - மகி

valentines

வலைகள்.. சோகங்கள்.. என்றும் நிலையானது இல்லை.. அனைத்தையும் மென்றுமுழுங்க வேண்டும்.. அதானே வாழ்க்கை..

அரைமணி நேரம் கழித்து வெளியே வந்தவளை புன்னகையுடன் வரவேற்றான் ஆகாஷ்..

அவனை கண்டதும்.. துள்ளிக்கொண்டு ஓடி வந்து அவனை அணைத்தாள்.. தாய்யை தேடும் சேய்யை போல.. அவனை கண்டதும்.. அவனிடம் அடைக்கலமானாள்..

தன் மார்போடு முகம் புதைந்தவளை அவனும் மென்மையாக அணைத்தான்..

அம்மூ..

...............

அம்மூகுட்டி..

...................

குட்டிம்மா..

..................

மனும்மா..

ம்..

என்னடாம்மா.. விடு போகட்டும்.. இனி இங்க நமக்கு எந்த வேளையும் இல்லடாம்மா.. அவளின் மனதை முழுமையாக படித்தது போன்று கூறினான்..

கஷ்டமா இருக்கு ஆகா.. நான் ஆசை பட்டு சேர்ந்தேன்..

சரிடாம்மா..

எல்லாரும் நினைக்கராங்க நான் ரொம்ப சுலபமா இதை தூக்கி கொடுத்துட்டேன்னு நினைக்கராங்க.. வழிக்குது டா..

அம்மூ.. போதும் ப்ளீஸ் அழாத.. என்னால அதை பாக்கமுடியாதுடா..

கஷ்டமா இருக்கு..

அம்மூ.. இப்போ சொல்லு.. நாம புதுசா ஒரு ரேடியோ ஸ்டேசன் தொடங்கலாம்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

வேண்டாம்..

நீ முகம் சுழிச்சாலே என்னால தாங்கமுடியாது.. இதுல நீ அழுதா.. நான்..

நான் நல்லா தான் இருக்கேன்..

உன் முகம் சொல்லுது..

சரி அதைவிடு.. நான் புடைவை கட்டியிருக்கேன் எப்படி இருக்கு சொல்லு.. தன் சோகத்தை உள்ளுக்குள் புதைத்து நண்பனுகாக புன்னகைத்தாள்..

அவள் தனக்காவே பேச்சைமாற்றுகிறாள் என்பதை உணர்ந்து.. உனக்கு என்னடா தேவதை நீ.. ரொம்ப அழகா இருக்கடா குட்டிமா.. என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டான்..

உண்மையாவா.. தன் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு கண்ணில் குறும்புடன் கேட்வளை கண்டு ஆச்சர்யம்மே அங்கு..

நீ என்னோட தேவதைடாம்மா..

பொய் சொல்லாதடா பன்னி.. அவளின் விளையாட்டை புரிந்து கொண்டு அவனும் வம்பிலுத்தான்..

போனா.. போகுதுன்னு.. சும்மா பேச்சுக்கு சொன்னா.. என்னையே ரொம்ப ஓட்டர.. குரங்குகுட்டி..

நான் குரங்கா.. என வெகுதுண்டு எழுந்தவள்.. நீ தான் எருமை, மாடு, பன்னி, குரங்கு எல்லாம்..

நீ தான்..

இல்ல நீ தான்..

நீ தான்..

நீ..

நீ..

இருவரும் இடைவிடாது சண்டை போடவே.. போதும்.. இன்னும் சின்னபிள்ளைங்க போல அடிச்சுகரீங்க.. அபியே இவர்கள் சண்டையை நிறுத்தினான்..

அப்போது தான்  நினைவு வந்தவளாக.. நீ எப்போ வந்த ஆகா..

நீ ஸ்டேசன் உள்ள போகும் போது.. ரொம்ப நல்லா பேசுன மனும்மா..

எனக்கு ஏற்பட்ட ஒரு மறக்க முடியாத அனுபவம் அது.. கூறியவள் பெருமூச்சொன்றுவிட்டாள்..

அம்மூ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் " மிசரக சங்கினி " - காதல் கலந்த சூப்பர் ஹீரோ தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஏய்.. ஐஸ்கிரீம்.. ஐஸ்கிரீம்.. இங்கயே இருங்க நான் வாங்கிட்டு வரேன்.. என துள்ளி ஓடினாள்.. அவள் சென்றதையே இருவரும் பார்த்தனர்..

ஐஸ்கிரீம்ம பாத்துட்டா மட்டும் எங்க இருந்தாலும் ஓடியிரா.. சிரித்துக்கொண்டே ஆகாஷ் கூறினான்..

கர்னி.. உன்னை ரொம்ப மிஸ் பன்னினா.. ஆகாஷ்.. வியப்பாக அபியா பார்த்தான் ஆகாஷ்..

ஏன் அப்படி பாக்கர..

இதுவரை.. எங்க உறவை எல்லாரும் புரிஞ்சுகிட்டது இல்லை.. உன் இடத்துல வேற யாராவது இருந்தா இப்படி நினைப்பாங்கலான்னு தெரியல்ல..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.