(Reading time: 19 - 37 minutes)

அவனின் கோவம் மனுக்கு பயத்தை கொடுத்தது.. எதுவும் பேசாமல் சிலை என நின்றாள்.. பின் ஆகாஷ் தான் துணைக்கு வந்தான்..

சரி விடு.. வா மனுகுட்டி போலாம் என அவளை அழைத்து காரில் அமரவைத்தான்.. அவள் அதே நிலையிலே இன்னும் இருக்க.. அவளின் முகத்தை கையில் ஏந்தி மனும்மா.. உண்மையா நாங்க பயந்துட்டோம்டாம்மா.. இனி இப்படி விளையாடாதே.. அபி கோவத்துல தான் உன்னை திட்டியிட்டான்.. பெருசுபன்னாம நார்மலா இருடாம்மா என அவளிடம் பேசிவிட்டு அபியிடம் வந்தான்..

அபி..

என்ன ஆகாஷ்.. உன்னோட அம்மூவ கொஞ்சியாச்சா..

அது.. அபி.. அவ எங்க எல்லாருக்கும் செல்லம்டா.. அவளை எதாவது சொன்னா தாங்காதுடா.. இதுவே நீயா இருக்கவும் தான் நான் அமைதியா இருக்கேன்..

அது சரி.. எல்லாரும் அவளுக்கு இப்படியே செல்லம் கொடுத்து கெடுத்தாள்.. யார் தான் அவளை கண்டிகரதாம்..

அது எல்லாம் யாரும் கண்டிக்க வேண்டாம்.. அம்மூ சமத்து..

ஆமான்டா.. தூக்கி மடியில்லவச்சு கொஞ்சுடா.. உன்னால தான்டா அவ கெட்டுபோரா..

பராவாயில்லை போ..

சரி மேடம் என்ன பன்னராங்க..

நீ திட்டவும் அம்மூ முகமே ஒருமாதிரி ஆயிருச்சுடா.. கார்ல இருக்கா..

சரி வா நாம கிளம்பலாம்.. அங்க எல்லாரும் நமக்காக தான் காத்திருக்காங்க..

இருவரும் காரில் அமர.. அபி வண்டி ஓட்டினான்.. மனுவை மறந்தும் அவன் திரும்பி பார்க்கவில்லை.. ஆனால் மனுவோ..

அவனையே நொடிக்கு ஒரு தரம் பார்த்துக்கொண்டே வந்தாள்.. அதையும் ஓரக்கண்ணால் கண்டுகொண்டனர்..

கல்லூரியை அடையும் வரை மௌனம் மட்டுமே அங்கு நிலைத்து நின்றது.. காரைவிட்டு இறங்கியதும்.. மனுகுட்டி என்ற அழைப்பை கேட்டு.. ஸ்வீட்டி என்று ஓடிச்சென்று பார்வதியை கட்டிக்கொண்டாள்..

மனுகுட்டி.. ரொம்ப அழகா இருக்கடா செல்லம் என அவளுக்கு நெட்டிமுறித்தார்..

அய்யோ ஸ்வீட்டி.. என வெட்கபட்டு.. பாருங்க குரு என உரிமையாக அவரின் தோள் சாய்ந்தாள்..

உண்மைடா.. புடைகட்டவும் பெரியபொண்ணா தெரியரடா மனுகுட்டி.. அழகா இருக்கரடாம்மா..

போங்க என சிணுங்கினாள்..

எங்க கண்ணே உனக்கு பட்டுர போகுதுடா குட்டி.. என அவளின் காதுமடலுக்கு பின்பு அவரின் கண்மையில் பொட்டுவைத்தார்..

அய்யோ இங்க என்னப்பா நடக்குது.. அவர்களின் உரையாடலை கேட்டுக்கொண்டே ஆகாஷ் அருகில் வந்தான்..

ம்.... நீயா நானா நடக்குது.. நீயும் வரியா.. போடா.. அவன் மட்டும் அருகில் வரவும் அபியை தேடியது அவளின் விழிகள்..

விடு மனுகுட்டி.. நான் உனக்கு கிச்சடி கொண்டு வந்தேன் சாப்பிடு என அவளுக்கு ஊட்டினார் பார்வதி..

செமையா இருக்கு ஸ்வீட்டி.. இது தான் கிச்சடின்னா.. அப்போ நான் அன்னைக்கு பன்னது என்ன..

அது.. செத்தடி.. சாப்பிட்டவுடன் சொர்கம் தான் அம்மூ..

ஸ்வீட்டி.. அவன பாருங்க.. என சிணுங்கியவளை..

நீ முதல் தடவை பன்னுனதுனால அப்படி இருக்கும்.. பழகிட்டா ரொம்ப சுலபம்டா..

டேய் பாருடா.. நானும் கத்துகிட்டு செய்து காட்டரேன்..

ஏய் நீ செய்யர டிஸ்கல்லாம் நான் என்ன எலியா..

ஆமான்டா.. தகரடப்பா.. நீதான் என்னோட டெஸ்டிங் எலி..

விளையாடினது போதும்.. எல்லாரும் ரெடி.. கிளம்பலாம் என அபி கூறவே அவர்களின் சண்டை நின்றது..

பாத்து சாக்கிரதையா இருக்கணும்டா..

ம்...

தனியா எங்கையும் போக கூடாதுடா..

ம்...

நேரத்துக்கு சாப்பிடனும்டா..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீனுவின் "மழையின்றி நான் நனைகின்றேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ம்...

எப்பவும் யாராவது கூடதான் இருக்கனும்..

ம்...

மனுகுட்டி செமையா சேட்டை பன்னும்டா..

ம்.. ம்.. ம்... உற்சாகமா தலையாட்டிள் மனு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.