(Reading time: 19 - 37 minutes)

சிவஞானத்தின் பேச்சால் பார்வதி அவரை முறைத்தார்..

ஏங்க நான் என்ன சொன்னா நீங்க என்ன செய்யறீங்க..

விடு பாரு.. குட்டி பொண்ணு என்ஜாய் பன்னடும்டா.. நீ போடா குட்டி.. ஜாக்கிரதை..

சரி என இருவரையும் கட்டிதலுவி விடைபெற்றாள்..

மிகுந்த உற்சாகத்தோடும்.. ஆராவாரத்துடனும்.. ஊட்டி நோக்கி பயணப்பட்டது அந்த சொகுசு பேருந்து..

அந்த இரவு நேரத்திலும்.. துள்ளலான இசையுடன்.. ஆட்டம்.. பாட்டம் என கொண்டாட்டமாக இருந்தது.. அனைவரும் தங்களை இணைத்துக்கொண்டனர்.. அதில் மனு பயங்கர ஆட்டமாக இருந்தாலும்.. அவளின் பார்வை அவ்வப்போது அபியை சென்றது.. அவனும் இவளை பார்த்தான் தான் இவள் பார்க்காத போது.. அனைத்து ஆட்டம் பாட்டு எல்லாம் முடிவுக்கு வந்த நிலையில் அவர் அவர்களின் இருக்கைக்கு சென்று உறங்கினர்..

நல்ல சொகுசு பேருந்தே.. ஆகாஷ்சின் கம்பெனியின் தனிபட்ட வண்டியே.. இவங்க எல்லாம் தொந்தரவு பன்னாத வகையில்ல டிரைவர் இருக்கையின் தனியா கதவு இருந்தது..

அறைமணி நேரம் சென்ற பின்.. எவ்வளவு முயன்றும் மனுவுக்கு உறக்கம் பிடிபடவேயில்லை.. எவ்வளவு முயன்றும் தோற்றவளாக எழுந்து முன் சென்றாள்..

அங்கு ஏற்கனவே அபி இருக்கவே.. என்ன செய்வது என்று தெரியாமல் நின்றவள்.. சரி என்ன பன்ரான்னு பாக்கலாம்ன்னு அவனுக்கு முன் சென்று நின்றாள்..

அவன் இவளை கண்டுக்கொள்ளாமல் நின்றான்.. கோவம் கொண்டவள்..

ஓய்.. நான் தான் கோவமா இருக்கணும்.. திட்டுவாங்குனது நான் தான்.. என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னவளை என்ன செய்ய என்பது போல் பார்த்தான்..

என்ன..

உன்ன.. என அவன் சிரித்துக்கொண்டே சொல்ல..

என்ன பன்னுவ.. என்றாள் மிடுக்காக..

நான் ரொம்ப திட்டியிட்டன்ல்ல சாரி..

பராவாயில்ல ஜித்து.. என்ன யாரும் திட்டுனது இல்லையா அதான் நீ திட்டவும் கொஞ்சம் கஷ்டமா போச்சு.. இப்போ பராவாயில்லை..

ஏய்.. அது நீ அப்படி கத்தவும்.. நான் உண்மையா பயந்துட்டேன் கர்னி.. எனக்கு இது போல விளையாட்டு எல்லாம் உன் விஷயத்துல கோவம் தான் முதல்ல வருது.. சாரி..

ஓய்.. பராவாயில்ல விடு.. ஜித்து..

ம்..

அது.. நானும் அங்க கதவுகிட்ட வந்து நிக்கவா..

உனக்கு பழக்கம் இருக்கா..

இல்ல.. நான் பஸ்ல போனது இல்லையா அதனால இல்லை.. இப்போ நிக்கவா.. குழந்தையை போல கொஞ்சி கேட்பவளை எப்படி ஏமாற்ற..

சரி வா..

ஐய்யா.. ஜால.. ஜாலி.. என அபியின் கையை பிடித்துக்கொண்டு படிகளில் நின்றாள்.. அவள் நின்ற மறுநொடியில்..

நினைச்சேன்.. எங்க இந்த குரங்கு குட்டிய காணம் என்ன சேட்டை பன்னுதுன்னு நினைச்சு வந்தா.. அங்க என்ன அம்மூ பன்னர.. முதல்ல மேல வா.. அபி நீயும் அவ கூட சேந்துகிட்டு என்ன இது..

சும்மா போடா டப்பா.. இங்க ஜாலியா இருக்கு.. நீயும் வாடா.. அவள் கைநீட்டி கூப்பிட்டாள்..

மெல்ல சிரித்தவாரே அவளின் அருகில் வந்து நின்றான்.. படியில் இருபக்கமும் அபி மற்றும் ஆகாஷ் நிற்க.. நடுவில் மனு நின்றுகொண்டு காற்றில் கை அசைத்து விளையாடிக்கொண்டு இருந்தாள்..

என்ன அம்மூ தூக்கம் வர்லையாடா..

ஆமான்டா.. தூக்கம் சுத்தமா வர்லை..

எப்படி வரும்.. நீ தான் வீட்டுல்லையே கும்பகர்னி போல தூங்கிட்டா.. அப்பரம் இப்போ எப்படி தூக்கம் வரும்..

அவனுக்கு அழகுகாட்டி போடா என்றாள்..

மூன்று பேரும் கதை அடித்துக்கொண்டும்.. ஊட்டியின் எல்லைக்குள் நுழைந்தனர்..

ஊட்டி செம குளிருப்பா.. கையை தேய்துக்கொண்டே கூறியவளின் மேல் சால்வையை போர்த்திவிட்டான் அபி.. இருவக்குள்ளும் புரியாத உணர்வு..

நீ இப்படி தான் இருப்பியா எப்பவும்..

எப்படி ஜித்து..

அருந்தவாலா.. என கூறி அபியும்,ஆகாஷ் வாய்விட்டே சிரித்தர்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ரெண்டும் என்னை இப்படி கலாய்கரீங்க.. போங்கடா.. இருவருக்கும் அடியை போட்டாள்..

போங்கடா.. ஊட்டி செமையா இருக்குப்பா.. ஆமா யார் இந்த இடத்தை செலக்ட் பன்னது..

நாங்க தான் கர்னி..

சூப்பர்ப்பா.. எல்லாருக்கும் அரேன்ஞ்மென்ஸ் எல்லாம்..

பக்கவா இருக்கு அம்மூ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.