(Reading time: 19 - 37 minutes)

எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.. கர்னி.. இப்போ ரொம்ப பீல் பன்னுனா.. நீயும் கூடயில்லைங்கவும் கொஞ்சம் கவலை.. அவளை அப்படி பாக்க கஷ்டமா இருந்தது..

உன்கிட்ட அவள் சேர் பன்னாலா.. ஆச்சரியத்தின் விழிவிரித்து கேட்டான்..

ம்..

அபி.. அவ பாக்க எவ்வளவு ஜாலியா இருக்காலோ.. அதே போல ரொம்ப வித்தியாசமானவ.. தன்னோட சந்தோஷத்தை அவ பகிர்ந்துகுவா.. ஆனா தன்னோட எண்ணங்கள், கவலை,முக்கியமானதுன்னு எல்லாம் அவ யார்கிட்டையும் சொல்லமாட்டா.. இப்போ வரை அவ என்கிட்ட, மாமாகிட்ட தான் மனசுவிட்டு பேசுவா.. இப்போ தான் உன்கிட்ட பகிர்ந்திருக்கா.. சந்தோஷம்.. நான் இல்லாதப்போ அம்மூவ பாத்துக்கா அபி.. அவளால சின்ன வலியை கூட தாங்கமுடியாது..

ஏய்.. கர்னிய நான் பாத்துகரேன்.. அவனுக்கு நம்பிக்கையூட்டினாலும்.. ஆனாலும் நீங்க எல்லாம் கர்னிக்கு ஓவர் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருகீங்கடா..

சிரித்துக்கொண்டே.. என்ன பன்னரது நண்பா.. அவ பேசியே எல்லார்த்தையும் மயக்கிறா.. கேடி.. அவ சேட்டைய மட்டும் இப்போ வரை குறைக்க முடியல்ல அபி.. ஆனா அது தான் எல்லாருக்கும் பிடிச்சுயிருக்கு..

உண்மை தான் ஆகாஷ்.. கர்னிய எல்லாருக்கும் பிடிச்சிருது.. எப்படின்னு தெரியாமா உள்ளத்துல வந்தர்ரா.. அவன் மென்மையாக கூறவே அவன் பேச்சை கேட்டு ஆகாஷ் உள்ளுக்குள் புன்னகைத்தான்..

அவர்கள் பேச்சிக்கொண்டு இருக்கும் போதுதே மனு அருகில் வந்தாள்..

ஆகா அவங்க காசு கேக்கராங்கடா..

பின்ன கேக்க மாட்டாங்களா.. அவளை முறைத்துவிட்டு சென்றான்..

அவனுக்கு அழகு காட்டிவிட்டு ஐஸ்கிரீமை சாப்பிட்டாள்..

அவள் உண்பதையே ரசித்து பார்த்தவன்.. கர்னி.. ரொம்ப அழகா இருக்கடா.. என மென்மையாக.. மெல்லிய குறலில் கூறினான்..

அவனின் விழியை பார்த்தவள்.. சில நொடிகளில் வெட்கப்பட்டு குனிந்துகொண்டாள்..

ஜித்து.. சும்மா இருங்க.. அவள் சிணுங்களுடன் கூறினாள்..

உருகியே போனான் அபி.. அவளின் வெட்கத்தில்.. இருவரின் உள்ளமும் மகிழ்ச்சியில் இருந்தது..

சரி போலாம் அபி.. எல்லாம் ரெடி தானே.. நாம ரெண்டு பேருமே இங்க இருக்கோம்.. யார் பாத்துக்கராங்க.. என டூர் பற்றி கேட்டுக்கொண்டு கிளம்ப போகும் போது.. மனு காரில் ஏறவில்லை..

என்னடாம்மா..

ஆகா.. காரு உள்ள உட்காந்து போக வேண்டாம்.. இங்க மேல உட்காந்து போலாம்பா.. கெஞ்சலாக முடித்தாள்..

அம்மூ..

சரி.. போலாம்.. நீயும் அவளும் மேல உட்காருங்க.. நான் வண்டி ஓட்டரேன்..

இல்ல வேண்டாம் அபி.. அவளுக்கு இந்த காத்து ஒத்துக்காது.. காய்ச்சல் வந்துட்டா போச்சு.. நீ உள்ள ஏறு மனுகுட்டி சற்று அழுத்தி கூறவே.. அவள் அவனை முறைத்துக்கொண்டே காரில் அமர்ந்தாள்.. கோவமா இருக்காளாம்..

இருவரின் சேட்டையும் ரசித்துக்கொண்டே வண்டியை ஓட்டினான் அபி..

ஆகாஷ்.. இனி கர்னி ரேடியோ ஸ்டேசனுக்கே போகமாட்டாளா..

அம்மூ ஒண்ணு வேண்டான்னு முடிவு பன்னீட்டா.. அதை மொத்தமாவிட்டுவா அபி.. அங்க அவ மனசை காயபடுத்தியிருக்காங்க.. இனி அங்க அம்மூவே போரன்னு சொன்னாலும் நான் ஒத்துக்கமாட்டேன்.. உறுதியாக கூறினான்.. ஒரு மெச்சுதலான பார்வை பார்த்தான் அபி..

இருவரையும் கண்டுகொள்ளாமல் மனு வெளியே வேடிக்கை பார்த்தக்கொண்டு வந்தாள்.. பின் தன் கைகளை வெளியே உலாவவிட்டாள்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

Chillzee Special "ஐ லவ் யூ" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அம்மூ கையை உள்ளவிடு.. நைட் நேரம்.. வண்டியெல்லாம் வருது.. கோவமாக ஆகாஷ் சொல்வதை கேக்காமல்.. விளையாடிக்கொண்டே வந்தவள்.. ஆ.. ஆ.... என கத்தியதில் அபி காரை சடன்பிரேக் போட்டு நிறுத்தினான்..

என்ன ஆச்சு அம்மூ.. என்ன ஆச்சு கர்னி.. என இருவரும் ஒருசேர அவளை அழைத்து.. கீழே இறங்கினார்கள்.. அவளை வெளியே இழுத்து அவளுக்கு எங்கேனும் அடிபட்டு உள்ளதா என முழுவதும் ஆராய்ந்தார்கள்..

இருவரும் அவளை ஆளுக்கு ஒருபுரமாக பிடித்து இருக்க..

ஏ..... நான் சும்மா சொன்னேன்.. உல்லுலாங்காட்டிக்கு.. என நாக்கை நீட்டி அவர்களுக்கு அழகுகாட்டியவளை.. இருவரும் தொரத்தவே.. அவள் சற்று நேரம் ஓடம் பிடித்தாள்..

இருவரும் ஒருசேர அவளை பிடித்து.. உனக்கு ரொம்ப குறும்பு அதிகம் கர்னி.. ஏன் இப்படி எல்லாம் விளையாடர.. உன்ன சொல்லி என்ன பயன்.. உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்காங்க.. நான் ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டோம்.. எதுல எல்லாம் விளையாடரதுன்னு இல்ல..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.