(Reading time: 17 - 34 minutes)

தொடர்கதை - மிசரக சங்கினி – 03 - தமிழ் தென்றல்

Misaraga Sangini

வன் உண்மையான மாருத வேகன் தானா?” சங்கர் சந்தேகமாக கேட்டான்.

‘என்னாச்சு இவருக்கு? முதல்ல மாருதனோட உருவ படத்தை கிழிச்சாரு.  நான் சொன்னத நம்பாம, சுமித்ராம்மாக்கு பேசினாரு.  இப்போ என்னடான்னா மேடையிலிருப்பது மாருத வேகனே இல்லைங்குறாரு’ குழப்பத்தோடு அவனை ஏறிட்டான் சுந்தரம்.

மேடையில் பதிந்திருந்த சங்கரின் பார்வை சுந்தரத்தை கவனிக்க தவறின.

“ஒரு முறை இவனை நான் பார்த்திருக்க சுந்தர்! அப்போ இவன் தங்க நிறத்துலதா இருந்தா.  இன்னைக்கு வெள்ளி நிறத்துல....” யோசனையாய் தாடையை தடவியபடி, “ம்ம்ம்ம்... ஏதோ உதைக்குது! இங்கிருக்க அவனோட படங்கள் கூட தங்க நிறத்தைதா காட்டுது”

பொதுவாக அதிசய சக்திகள் படைத்த ஹீரோக்கள் ஒரே மாதிரியான உடை அணிவது வழமை.  எந்நேரத்திலும் எக்காரணம் கொண்டும் இதில் மாற்றமிருந்ததில்லை.  அதுவும் மக்களை சந்திக்க வந்திருக்கும் இவ்வேளையில் அவன் உடையில் கவனப்பிழை ஏற்படும் வாய்ப்புமில்லை.  மாருதன் அந்தரத்தில் மிதந்ததும் பறந்ததும் உண்மையென்றாலும் அவனிடம் வெளிபட்ட தயக்கமும், முகம் மறைந்திருந்தாலும் அவன் எதற்காகவோ தடுமாறுவதையும், ஒரு காவல்துறை அதிகாரிக்கே உரித்தான ஆராயும் கண்கள் கண்டுகொண்டன.  எல்லாவற்றிற்கும் மேலாக உடையின் நிற மாற்றம்.  இவை வந்திருப்பவன் மாருதன் இல்லையோ என்ற சந்தேகத்தை விதைத்தது.

சுந்தரத்திற்கு ஆச்சரியத்தை தந்தது சங்கரின் வார்த்தைகள்! அவனுக்கு தெரிந்த சங்கருக்கு எல்லாமே தெரிந்திருக்கும்.  திருடன் ஒருவன் மாறுவேடம் அணிந்து வந்தாலும் அவன் பெயர் முதல் நடவடிக்கைகள் வரை எல்லாவற்றையும் பிட்டு பிட்டு வைப்பவன்.  இன்றோ நகரத்து நாயகனை அடையாளம் காண முடியவில்லையா?!

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சர்! சூரிய ஒளி படும்போது அவனோட உடல் தங்கமா ஜொலிக்கும்.  மாருதனை தெரிஞ்ச எல்லாருக்கும் தெரிஞ்ச ஒன்னு சர் இது” சற்று தாழ்ந்த ஆச்சரியமானக் குரலில் சொல்லவும் அதிர்ந்துவிட்டான் சங்கர்.

‘உங்களுக்கா இது தெரியாம போச்சு?’ என்று சுந்தரம் கேட்டதை போன்ற மாயை இவன் மனதை அதிகமாய் பாதித்தது.

எல்லாவற்றையும் பொறுமையாக ஆராய்ந்து பார்க்கும் சங்கருக்கு வேகனிடத்தில் மட்டும் ஏனோ தடுமாற்றம்.  அதற்கு காரணம், அவனும் தன்னைப் போன்றே மக்களின் சேவையில் ஈடுபட்டதால் அவனை போட்டியாக கொண்டு விட்டதோ மனம்? உணர்ச்சிகளை கட்டிவைத்து செயல்படுவனுக்கு மாருதன் விதிலிக்காவிட்டது தான் தனக்குள் இந்த மாற்றமோ? தன்னிலை பிழறாது இருந்திருப்பின், நகரத்து நாயகனின் நிற மாற்றம் தெரிந்திருக்கும்.  இனிமேலும் இதற்கு இடம் கொடுக்காது ஒரு காவல் துறை அதிகாரியாக தெளிவான சிந்தனையோடு செயல்படவேண்டும் என உறுதிகொண்டான். 

காவல்துறை அதிகாரியாக முடிவெடுத்துவிட்டான்.  சொந்த வாழ்க்கையில் என்ன செய்வான் சங்கர்?! காலம் பதில் சொல்லட்டும்.

க்களின் கவனமனைத்தும் வேகனிடத்தில் நிலைத்திருந்த சமயம் வானத்திலிருந்து பாய்ந்தது இராட்சத இடியொன்று.  உலகத்தின் உயிர்கள் அனைத்தையும் குடித்துவிட்டதோ என்ற எண்ணத்தை பிறப்பிக்கும்படியிருந்த அந்த சத்தத்தில் நடுநடுங்கி போனது மெரினாவின் கூட்டம்.  பயத்தில், சுமித்ராவும் தோழிகளும் ஒருவரோடு ஒருவர் நெருங்கி நின்றிருந்தனர். 

வேகன் வானத்தை நிமிர்ந்து பார்த்தான். 

‘மனதில் உதித்த சிலநிமிட மகிழ்ச்சிக்கு தடை விதிக்கிறாயா வானே?’ யாருக்கும் காணக்கிடைக்காமல் நகரத்து நாயகன் உடையில் மறைந்திருந்த வேகனின் உதடுகளில் விரக்தி புன்னகை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

Chillzee Special "ஐ லவ் யூ" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

‘கணக்கில்லா நெஞ்சங்களின் அன்பிற்கு நீ தகுதியற்றவன், மாருதா!  நியாயமாக இதற்கெல்லாம் காரணமான அந்த கள்ளமற்ற உள்ளம்.....? எப்படி தவிக்கிறதோ? எதையெண்ணி வெம்புகிறதோ? கணம் கணமும், உயிர் இவ்வுடலை பிரியாது வேதனையும் வலியும் என்னை கொல்லாமல் கொன்று தின்கிறது.  வேண்டும்! வேண்டும்! இது எனக்கு போதாது.... நான் செய்த துரோகத்துக்கு இது போதாது.  இடியே இந்த நம்பிக்கை துரோகியை கரியாக்காது மனதின் மகிழ்ச்சியை அழிக்க வந்தாயா?’  

ர், இடியோட பலத்தை பார்த்தா நல்ல மழை வரும் போலிருக்கு” நட்சத்திரங்கள் தொலைந்து போயிருந்த கருவானத்தை பார்த்திருந்த சங்கரிடம் சொன்னான் சுந்தரம்.

சங்கரின் அகமோ தன்னவளின் நினைவில் குவிந்திருந்தது.  சுமித்ரா தைரியமானவள் தான்! எல்லோரையும் உலுக்கியெடுத்த இடியில் பயந்திருப்பாளோ? தனியாக வந்திருப்பாளோ? இருக்காது.  எப்போதும் அவளோடு ஒட்டிக்கொண்டிருக்கும் தோழிகளோடு வந்திருப்பாள். 

யாருடன் இருந்தாலும், இப்போது தன்னை தேடுவாளோ?! அருகிலிருந்தால் அள்ளியணைத்து ஆறுதலிருத்திப்பான்.

ஆனால் சற்று முன் நடந்துவிட்டவற்றில் கடலை விட அமைதியற்று துடித்தது உள்ளம்.  மாருதனை காண மெரினா வந்ததும், அதை அலைபேசியில் தெரிவித்த ஒற்றை வாக்கியத்திலும் தன்னிடமிருந்து அவள் பல காதம் தள்ளி சென்றுவிட்டாள் என்ற நெஞ்சத்தின் கூவலை கலைத்தது மக்களின் ஓலம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.