வாழ்த்தியதும் அவன் தலையிலிருந்து நகர்த்தியிருந்த அவரின் கையை சட்டென இழுத்து தலையோடு நிறுத்தியவன், “ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. உங்களை அப்பானு கூப்பிடலாமில்லை?” என்ற வேகனின் கமறிய குரலில் பெரியவர் அவனை மார்போடு அணைத்திருந்தார்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
சுற்றியிருந்தோரின் கண்களிலும் சிறு நீரேற்றம். சங்கர் கூட உணர்ச்சி வசப்பட்டிருந்தான். அங்கிருந்த அனைவருமே, கண்முன் நடனமாடிய மரணத்திலிருந்து தப்பியிருந்ததில் அன்பின் அவசியத்தை மிகத் தெளிவாக கற்றிருந்தனர். தன்னலமற்ற மாருதனின் அன்பின் அடையாளம் தானே இத்தனை இன்னுயிர் மண்ணலகை பிரியாதிருக்க காரணம்!
சில நிமிட அன்பின் அறங்கேற்றத்தின் பின், காவலர்களின் துணையோடு அவனுக்காக பஜ்ஜி கடையொன்றில் இருந்து எடுத்து வந்திருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.
நடக்கவிருந்த பேராபத்தை வேகன் தடுத்திருந்தாலும், திரையின் உட்பாகங்கள் உடைந்து சிதறியதில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தது. அவர்களுக்கு முதலுதவி வழங்கபட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சில காவலர்களும் அடக்கம். அவர்களிடத்தில் பேசி, அவசர சிகிச்சை ஊர்தியில் (ambulance) ஏற்றி அனுப்பினான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சசிரேகாவின் "என் வாழ்வே உன்னோடு தான்..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
சட்டென சுமித்ராவின் நினைவு நெஞ்சத்தில்.
‘அவளுக்கு காயமேதும்....’
சூழ்நிலையின் தீவிரத்தில் அவளை அங்கிருந்து வெளியேற்றுவது மட்டுமே முக்கியமாகி இருந்தது.
‘எனக்காக அவள் உயிரைக் கூட துச்சமா நினைச்சு ஓடி வந்தாளே. அவள் எப்படியிருக்கானு தெரிஞ்சுக்காம வந்துட்டனே. ச்சே... வர வர எனக்கு வேலை மட்டுமே போதும்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டனா? இல்லை சுமி மேலிருக்கும் காதல் குறைஞ்சு போச்சா? இதை எப்படி கவனிக்காம வந்திருக்கலாம். சங்கர்....நீ சரியில்லடா. அவளுக்கு என்னாச்சோ?’
தவறை உணர்ந்து தன்னையே நிந்தித்தபடி, அவளை தேடி கண்கள் சுழல அவன் கண்ட காட்சியில் உறைந்து போனான்.
மாருதனை அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் சுமித்ரா.
வருவான் வேகன்...
Go to Misaraga Sangini story main page
{kunena_discuss:1224}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.