(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - மிசரக சங்கினி – 04 - தமிழ் தென்றல்

Misaraga Sangini

ன் வகுப்புல ரெண்டு அர்ஜுன் இருக்காங்க இல்லை.  அதே மாதிரிதா இங்கேயும் ரெண்டு மணிமேகலை இருந்தாங்க.  ஒரு பொண்ணு! இன்னொன்னு தெய்வம்!”

கண்கள் விரித்து ஆச்சரியத்தோடு வாயை திறந்திருந்தவளின் மூளையில் கேள்வி எழ, “தெய்வம்னா என்ன பாட்டி?”

“மத்தவங்களுக்கு கஷ்டம்னா தன்னைப் பற்றி கூடக் கவலைபடாம அவங்களுக்கு உதவுற நல்ல மனம், குணம் படைத்தவங்களை, இயற்கையானது தெய்வமா மாற்றும்.  அந்த தெய்வங்கள், மத்தவங்களுக்கு உதவுறதால, அவங்களுக்கு இயற்கையிடமிருந்து எல்லா உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.  இதனால தெய்வங்கள் அதிசய சக்தி கொண்டவங்களா கருதபடுறாங்க”

“ஓ....அப்படியா?! அதிசய சக்தினா என்ன பாட்டி?”

“பறக்குறது, ஒரு இடத்துல மறைஞ்சு இன்னொரு இடத்துல தோன்றுறது, எதிர்காலத்துல நடக்க போறதை இப்பவே தெரிஞ்சுக்கிறது, இது போல நிறைய சக்திகள் இருக்கு”

வியப்பும் குதூகலமும் நிஷ்டாவை, “அன்னைக்கு அப்பா சிங்கப்பூர்க்கு பறந்து போனேனு சொன்னாறே, அவரும் தெய்வமா பாட்டி?” என்றுக் கேட்க வைத்தது.  அத்தோடு நிறுத்தாமல் கல்யாணியின் அலைபேசியை கையில் எடுத்து கொண்டாள்.

“நான் அப்பாட்ட கேட்க போறேன் பாட்டி.  நானும் பறந்தா தெய்வமாயிடுவேன்.  நீயும் என் கூட வா.  அப்றம் நாம எல்லாருமே தெய்வம், பாட்டி!” மெத்தையின் மேலேறி துள்ளி குதித்து குதூகலித்தாள் சிறுமி.

பாட்டி சொன்ன அதிசய சக்திகளில் பறப்பதை முன்பே கேட்டிருக்கவும் அதையே பிடித்து கொண்டாள் நிஷ்டா.

‘அய்யோ! மணிமேகலை காப்பியம், குழந்தைக்கு தேவையானு அந்த ஆட்டம் போட்டான்.  இவள் போய், தெய்வம், பறக்குறதுனு சொல்லி தொலைச்சா அவ்வளவுதா’ பின்விளைவுகளை யோசித்த கல்யாணி, பாய்ந்து நிஷ்டாவிடமிருந்து கைபேசியை அபகரித்தார்.

ஜெயராமன், தொழில் முறையில் பல நாடுகளுக்கு சென்று வருவதுண்டு. சமீபத்தில் சிங்கப்பூர் சென்ற போது, மகளிடம் உலக உருண்டையில் சிங்கப்பூரையும் இந்தியாவையும் சுட்டிக்காட்டியதும், இங்கிருந்து அவன் பறந்து போவதாக சொன்னதும் நினைவுக்கு வந்தது. 

“சின்னக் குழந்தைக்கு மணிமேகலை காப்பியம் தேவையானு கேட்டுட்டு, இவன் மட்டும் உலக உருண்டையை காட்டினா சரியா?” என்று கல்யாணி கூட மகனை திட்டியது நினைவுக்கு வந்தது.

தாய், தமிழ் புகழ் பாட, மகனோ தற்போதைய உலகமென கற்பிக்க.... இவர்கள் போட்டியில் நிஷ்டாவின் அறிவு, வயதை மீறிய செழுமையடைந்ததை அவர்கள் உணரவேயில்லை.

‘ஆனாலும் இந்த வாண்டுக்கு இவ்வளவு ஞாபக சக்தி கூடாது’

எப்போதுமே பேத்தியின் குணநலன்களில் பெருமையடையுபவர் இன்று சற்று அதிலிருந்து சருக்கியிருந்தார்.

“கொடு பாட்டி அப்பாட்ட பேசுறேன்.  உன்னையும் கூட்டிட்டு போறேன்” பாட்டியின் கையிலிருந்த கைபேசியை பறிக்க முயன்றபடி சிறியவள் பெரியவருக்கு ஆசைக் காட்டினாள்.

“நிஷிக் குட்டி பாட்டி சொல்றதை கேட்ப்பீங்களாம்.  நான் என்ன சொன்னேன்? தெய்வத்துக்கு அதிசய சக்தி இருக்கும்னு சொன்னேன்.  அதிசய சக்தி இருந்தவுடனே தெய்வமாக முடியாது”

பாட்டியின் வார்த்தைகள் தந்த ஏமாற்றத்தில் அமைதியாக அவரை அணைத்து படுத்துக் கொண்டாள்.  மேலும் எதையும் பேசி அவளுக்கு வருத்தத்தை தராது கதைக்கு தாவினார் கல்யாணி.   

“மணிமேகலா தெய்வம், இவங்கட்ட வந்து பேசி என்ன பிரச்சனைன்னு கேட்கவும், மணிமேகலையும் சுதமதியும் நடந்ததை சொல்லி, எப்படி வீட்டுக்கு போறதுன்னு தெரியலை.  இளவரசன் பக்கத்துல எங்க வேணாலும் காத்திருந்து மணிமேகலையை அவனோட கூப்பிட்டு போய்டுவானோனு பயமாயிருக்குனு தெய்வத்துட்ட சொன்னாங்க”

“கொஞ்ச நேரம் யோசிச்ச மணிமேகலா தெய்வம் அவங்களை சக்கரவாளக் கோட்டம்னு ஒரு சுடுகாடு பக்கத்துல இருக்குனு சொல்லி அது வழியா போனா தப்பிச்சிடலாம்னு யோசனை சொன்னது.  இதை கேட்டவங்களுக்கு ஒரே சந்தோஷமா போச்சு.  அதோட மணிமேகலா தெய்வம், அந்த சக்கரவாளக் கோட்டத்தோட சிறப்புகளையும் பெருமையையும் பெரிய கதையா சொல்ல ஆரம்பிடுச்சிடுச்சு.  ரொம்ப நேரம் கழிச்சும் கதை போயிட்டே இருக்கவும் இராத்தியாகிடுச்சு.  அதை கேட்டுட்டிருந்த ரெண்டு பேரும் அப்படியே தூங்கிட்டாங்க”

சற்று முன்பிருந்த ஏமாற்றத்தை மறந்து கிளுக்கி சிரித்த நிஷ்டா, “நான் தூங்கிடுவேனே அப்படி தூங்கிட்டாங்களா பாட்டி?” பச்சரிசி பற்கள் தெரிய கேட்டவளை, அள்ளி அணைத்த கல்யாணி,

“ஆமாண்டா கண்ணா! பெரிய கதை, இராத்திரியாகியும் முடியாம நீண்டுக்கிட்டே போச்சா.. அதான் ரெண்டு பேரும் தூங்கிட்டாங்க. அப்போ மணிமேகலா தெய்வம், மணிமேகலையை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.