(Reading time: 9 - 18 minutes)

வேகத்தில்,

“நான் அழக்கூடாது.  தைரியமா இருக்கனும்”

நிஷ்டாவின் முன்னுச்சி முடியை ஒதுக்கியவர் அவளை படுக்க வைத்து,

“என் செல்லம், சரியா சொல்லிட்டாங்க.  நாளைக்கு வரைக்கும் இது ஞாபகம் இருக்குமானு பார்க்கலாமா?” என்று கேட்டு தானொரு முன்னாள் ஆசிரியர் என்பதை நிரூபித்தார் பாட்டி.

பாட்டியின் கேள்வியில், “அதெல்லாம் ஞாபகம் இருக்கும் பாட்டி” என்று சிணுங்கினாள் சிறுமி.

“அதை நாளைக்கு பார்க்கலாம்.  இப்போ சமத்தா படுத்து துங்குவிங்களாம்”

ந்த மாலைப் பொழுதின் இனிமையை அழித்துவிட்ட இடியின் செயலுக்காக வானம் வருந்தியது போலும், அதை மழையின் மூலம் வெளிபடுத்திக் கொண்டிருந்தது.  பலமான மழைக் காரின் முன்புறக் கண்ணாடியை அடித்து, அவர்களை நனைக்க முடியா ஏமாற்றத்தில் தரையை தொட்டது. 

அடர்ந்த மழையின் காரணத்தால் சங்கருக்கு பாதை தெளிவில்லாதிருக்க, சற்று முன்னர் நடந்த சம்பவங்களில் எதிர்காலமும் குழம்பியிருந்தது. 

ஏனோ சுமித்ராவை இழந்துவிட்டதாகவே தோன்றியது அவனுக்கு.  எவ்வளவு முயன்றாலும் அவ்வெண்ணத்தை தவிர்க்க முடியாதவாறு அவனை சூழ்ந்திருந்த சான்றுகள் வேறு அவனை தவிப்பில் தள்ளியது.  அதிலொன்றாக அவன் இடபுறம் அமர்ந்து மழையை வெறித்திருக்கும் சுமித்ராவின் பார்வையும், மௌனத்தை சுமந்திருந்த இதழ்களும். 

இவனுடனான தனிப்பொழுதுகளை பெரும்பாலும் அவளின் காதல் பார்வைகளும் பேச்சும்தான் நிரைத்திருக்கும்.  இன்றானால் அவளின் நடவடிக்கை முற்றிலும் மாறியிருந்தது.  தன்னிடம் சொல்லிக்கொள்ளாமல் மெரினா சென்றது முதல், இந்நொடி வரை புதிய சுமித்ராவை கண்டிருந்தான் சங்கர். 

ஏதோ பல காலம் வாழ்ந்து விட்டதாக ஒரு பிரமை சுமித்ராவிற்கு.  திக்கெட்டும் பரவியிருந்த புகழுக்குரிய நகரத்து நாயகனை, இதற்கு முன் நேரில் கூட பார்த்திராத ஒருவன், இன்று தன்னுடைய வாழ்கையையே மீட்டு கொடுத்துவிட்டதை நம்ப முடியவில்லை. 

மரணத்தின் விளிம்பை தொட்டிருந்த காதலன் தன்னருகில் இருப்பதற்கு மாருதன் தானே காரணம்.  முதலே அவனில் அளவிட முடியா பிரியம்.  இப்போதோ இவளின் அடி ஆழத்தில் பரவி நிறைந்துவிட்டிருந்தான் வேகன்.  அனிச்சையாக தன்னவனை பார்த்து கொண்டாள்.

அவளையும் சாலையையும் மாற்றி மாற்றி கவனித்திருந்தவனுக்கோ, சுமித்ராவின் பார்வை பெரும் நிம்மதியளித்தது.  அவளிடம் கேட்டிட ஆயிரம் கேள்விகள் அவனிடத்தில்.  அவளுடனான நீண்ட வாழ்க்கை பாதையில் எத்தனையோ தருணங்கள் கிடைக்கும் கேட்டிட.  தொலைந்திருந்த நம்பிக்கை மீளும் சுகம். 

வருவான் வேகன்...

Episode # 03

Next episode will be published as soon as the writer shares her next episode.

Go to Misaraga Sangini story main page

{kunena_discuss:1224}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.