(Reading time: 9 - 18 minutes)

மட்டும் தூக்கிட்டு வான் வழியா பறந்து போயி மணிபல்லவ தீவுனு ஒரு தீவுல விட்டுட்டு மறஞ்சிடுச்சு”  

‘அய்யோ பாவம்! மணிமேகலை யாருமில்லாம தனியா மாட்டிக்கிட்டாளே.  இளவரசனால மணிமேகலைக்கு ரொம்ப கஷ்டம்.  மணிமேகலா தெய்வம் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போகாம எங்கேயோ தூக்கிட்டு போயிடுச்சே’

நிஷ்டாவின் பிஞ்சு நெஞ்சம், ஏதோ ஒவ்வாமையில் வாடியது.

“மணிமேகலா தெய்வம், ஏன் பாட்டி அப்படி செய்தது? மணிமேகலைக்கு வீட்டுக்கு வர வழி தெரியுமா? அவளோட அம்மா தேட மாட்டாங்களா, பாட்டி? எனக்கு மணிமேகலா தெய்வத்தையும் இளவரசனையும் பிடிக்கலை” கோபமும், அழுகையில் பிதுங்கிய இதழ்களுமாய் சிறியவள் கேட்டிட

“என்னடி தங்கம்? பாட்டிகிட்ட வா வா” அதற்குள் நிஷ்டாவின் கண்களில் வழிந்து விட்ட நீரை துடைத்துவிட்டு, அவளை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டார் கல்யாணி.

“இது கதைடா தங்கம்.  எப்போவோ நடந்து முடிஞ்சது.  இப்போ நீ அழறதால எதுவும் மாறிடாது” 

“போ...பா...ட்டி! மணி....மே...க...லை பா...வ...ம்” கேவலோடு தெளிவில்லாது அவள் சொன்னதை யூகித்து கொண்டார் கல்யாணி.

மகன் சொன்னது போல் குழந்தைக்கு இந்த காப்பியத்தை சொல்லியிருக்க கூடாதோ?!

தமிழும் அதன் பெருமையும் பேத்திக்கு பழக்கிவிடும் நோக்கத்தில் குற்றமில்லை என்பதில் உறுதியாய் இருப்பினும் சிறு நெருடல் எழத்தான் செய்தது.

“சொல்றதை கேளு தங்கம்.  அழாதேடா” தலையையும் முதுகையும் வருடி சிறுமியின் அழுகையை குறைக்க முயற்சிக்க... அவளோ பாட்டியின் சமாதான வார்த்தைகளை ஏற்காது இன்னும் உரக்க அழுதாள்.

“மணிமேகலை தைரியமான பொண்ணு.  ஒரு பிரச்சனைனு வந்ததும் இப்படி அழலை.  என்ன செய்தா அந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்னு யோசிச்சா.  அதையே செயல்படுத்தி பிரச்சனையிலிருந்து தப்பிச்சா.  நீயும் மணிமேகலையை போல தைரியமா இருக்கனும்.  அதை விட்டுட்டு அழுதுக்கிட்டு இருந்தா எதுவும் மாறாது.  கடவுள் மனுசங்களுக்கு அளவில்லா அறிவை கொடுத்திருக்காங்க அதை பயன்படுத்தனும்” அழுத்தமாக கல்யாணி சொல்லிட...

கொஞ்சலால் செய்ய முடியாதது, மிஞ்சலில் செயல் பட்டது.

மணிமேகலை தப்பித்துவிட்டாளா?!

அழுகையை அடக்கி மிரட்சியோடு, “நிஜமாவா பாட்டி?”

தன்னை சமாதானம் செய்ய தான் சொல்கிறாரோ பாட்டி? அவநம்பிக்கையோடு ஏறிட்டாள் நிஷ்டா.

“நிஜமாவே மணிமேகலை, மணிபல்லவத் தீவிலிருந்து புகாருக்கு திரும்பி போனா.  அதுவும் சும்மா நடந்தெல்லாம் போகலை.  எப்படி போனா தெரியுமா?”

“எப்படி போனா?” இப்போது நிஷ்டாவிடம் அழுகை மறைந்து ஆர்வம் எட்டிப்பார்த்தது.

“அதை தெரிஞ்சுக்கனும்னா, நான் இப்போ சொல்ல போறதை கவனமா கேட்கனும்” சமயம் பார்த்து பேத்திக்கு பாடம் சொன்னார் பாட்டி.

“ஹும்” சம்மதமாக சிறியவள் தலையை மேலும் கீழும் அசைத்தாள்.

“நீ தைரியமான பொண்ணா இருக்கனும் நிஷி.  நீ வளர்ந்து பெரியவளான பின்னாடி என்ன பிரச்சனை வேணாலும் வரலாம்.  அந்த நேரத்துல இப்போ அழுத மாதிரி அழக்கூடாது.  அறிவை பயன்படுத்தனும்.  யோசிச்சு பிரச்சனைக்கான காரணத்தை கண்டுபிடிக்கனும்.  எப்போதுமே பிரச்சனைக்கான காரணத்துலதா அந்த பிரச்சனைக்கான தீர்வும் இருக்கும்.  அதை புரிஞ்சு செயல்படனும்.  என்ன சொல்றது புரியுதா?”

ஐந்து வயது குழந்தைக்கு என்ன புரியுமென்று மகன் சொன்னதை போல் நல்லதை சொல்லாது, பழக்காது வளர்த்தினால் அது நிஷ்டாவின் வாழ்வையல்லவா பாதிக்கும்.  இன்றையை சமுதாய நாகரீக மாற்றத்திலும் இளைய தலைமுறையின் வேகத்திலும் மூத்த தலைமுறையின் அன்பு வார்த்தைகள் கூட அவர்களின் செவியை சேர்வதில்லை.  இதில் நல்லவையும் கண்டிப்பும் சாத்தியமா? அதுவும் இருபது வருடத்திற்கு பிறகான சமுதாய நிலை என்னவோ? இன்றிலிருந்தே சிறிது சிறிதாக நல்லதை புகுத்தினால் மட்டுமே அவளுடைய எதிர்காலம் ஜொலிக்கும்.

தாயில்லாப் பிள்ளைக்கு, பாட்டியாக செல்லம் கொஞ்சுவதோடு மட்டுமல்லாது தாயாக கண்டிப்பையும் கையிலெடுத்தார் கல்யாணி.

‘நான் தைரியமான பொண்ணு.  எதுக்கும் அழக்கூடாது’ என்று மனதிலேற்றிக் கொண்டவள் பாட்டியிடம்,

“புரியுது பாட்டி! நான் அழமாட்டே.  நீங்க கதையை சொல்லுங்க” என்று சிரிப்போடு மணிமேகலை காப்பியத்திற்கு திரும்பிவிட்டாள்.

“உனக்கு என்ன புரிஞ்சதுனு நாளைக்கு இந்த பாட்டிட்ட சொல்லுவியாம்.  அப்போதா மணிமேகலை எப்படி புகார் நகரத்துக்கு திரும்பினானு பாட்டி சொல்வேனாம்”

“நான் இப்போவே சொல்வேனே பாட்டி” மணிமேகலை தப்பித்த வழியை தெரிந்துகொள்ளும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.