(Reading time: 14 - 27 minutes)

" அவளா இதை உன்கிட்ட சொன்னாளா?"

அவர் கேட்க அமைதியானான்.

"இதப் பாரு ஆதி. ஒரே பையன்னு உங்கம்மா உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்திட்டாள். அதனால்தான் இன்னும் உனக்குப் பொறுப்பு வரலை. நீ அங்கே வேலை செய்யத்தான் போயிருக்கே. உனக்குப் பிடிக்கலைன்னா அதை வேலையில் காட்டுவியா? அந்தப் பொண்ணுக்குத் திறமையில்லைன்னு சொல்லு. நான் வேலையை விட்டு அனுப்பறேன். அதை விட்டுட்டு இப்படி தேவையில்லாமல் விரோதத்தை வளர்த்துக்கிட்டு இருக்காதே."

"அவ திறமைசாலியா இல்லைன்னா நீங்க அவளை வேலையை விட்டு அனுப்பிடுவீங்களா?"

"அவளுக்குத் திறமை இருக்குன்னுதான் வேலைக்கே சேர்த்திருக்கேன்.  ஒரு நல்ல தொழிலாளியை உன் சிறுபிள்ளைத்தனத்தால் நான் இழக்க விரும்பலை. உனக்கு அவளோட சேர்ந்து வேலை செய்ய பிடிக்கலைன்னா வேற இடத்தில் பொறுப்பேத்துக்கோ."

...
This story is now available on Chillzee KiMo.
...

சிரிப்புடனே வந்தாள்.

அந்த சிரிப்பு அவனைத் தோற்கடித்ததன் அடையாளமாக அவனுக்குத் தோன்றியது.

அதனாலேயே அவளை எப்படியாவது விரட்ட வேண்டும் என்று நினைத்தான். அது முடியவில்லை.

அவள் வேலையில் ஏதாவது தவறு செய்யட்டும். அதன் பிறகு இருக்கு அவளுக்கு என்று அவளைக் கண்காணிக்க ஆரம்பித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.