சரியாக அந்த நேரத்தில் துரியோதனன் அவர்கள் இருவரையும் கண்டான்... அந்த நிலையில் துரியோதனனை காணவும் அவன் தவறாக எடுத்துக் கொள்வானோ என்று இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்...
தர்மசங்கடமாக அவர்கள் விழித்து கொண்டிருக்கும் அந்த சூழ்நிலையை மட்டும் பார்த்தால் எந்த கணவனுக்கும் அது தவறாகவே தோன்றியிருக்கும்... ஆனால் துரியோதனன் தன் நண்பன் மேலும் தன் மனைவி மேலும் கொண்டிருந்த நம்பிக்கையால் அந்த சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு
“எடுக்கவா?? கோக்கவா?? “ என்று ஒரே வரியில் அவர்கள் மீது இருந்த நம்பிக்கையை வெளிபடுத்துவான்...
துரியோதனன் கெட்டவனாக இருந்தாலும் அவனுடைய நல்ல குணங்களில் ஒன்றாக கூறப்படுவது அவனின் இந்த நம்பிக்கை...
என்று தன் அன்னையின் விளக்கத்தை நினைவு கூர்ந்தவள், அதுவரை உணர்ச்சி வசப்பட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
் குதித்து கொண்டாள்...
அதற்குள் ஆதிக்கு மொபைலில் அழைப்பு வர, தன் காபி கப்பை எடுத்து கொண்டு மறுபக்கம் சென்றான்...
இப்பொழுது நந்தினியின் முன்னே ட்ரேயை நீட்டிய பவித்ரா நந்தினியின் கண்களை நேருக்கு நேராக பார்த்தாள்.. அவள் கண்ணிலும் எந்த ஒரு தவறு செய்தத்திற்கான பயமோ குற்றமோ இல்லை...