(Reading time: 10 - 19 minutes)

“இல்ல டா ரகு உன்ன பயப்படுத்துவதற்காக சொல்லல. எங்களுக்கும் வயசு ஆகுது இல்ல. நாங்க கொஞ்சம் activeஆ இருக்கும் போதே உன் திருமண வேளைகளை செய்யத்தான் ஆசை படுகிறோம்.” என்றார் பானுமதி.

ரகு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

சிறிது அமைதிக்குப் பின்னர் “சரி ரகு நான் கிளம்புறேன். நீ யோசிச்சு உன் மனசுக்கு என்ன தோனுதோ செய் பா. இனி நாங்க உன் கல்யாண பேச்சை எடுக்க மாட்டோம்” என்று கூறிவிட்டு ரகுவின் பதிளுக்குக் காத்திருக்காமல் சென்றார்.

தன் தாயின் கவலையை அவனால் உணர முடிந்தது. தான் பார்த்து கொண்டிருந்த வேளையை அப்படியே நிறுத்திவிட்டு கட்டிலில் சாய்ந்தான்.

மனம் முழுக்க யோசனை. அவனுக்கு அவன் வாழ்க்கை பற்றிய கனவுகள் ஒரு புறம், அவன் பெற்றோர்களின் ஆசை ஒரு புறம்.

அவன் நினைப்பது போல் ஒரு பெண்ணை இன்னும் அவன் சந்திக்க வில்லை. அதனால் காதலில் இன்னும் விழவில்லை. அதைக் காரணம் காட்டி இத்தனை ஆண்டுகள் தன் பெற்றோரிடம் அவகாசமும் வாங்கிவிட்டான். ஆனால் அவர்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. எல்லாம் யோசித்து அப்படியே உறங்கி போனான்.

அடுத்து ஒரு வாரத்திற்கு அவனுக்குள் அதே குழப்பம் தான். அவன் தாய் கூறியது போல அவனிடம் யாரும் திருமணத்தைப் பற்றிப் பேசவில்லை. தனக்குள்ளே குழம்பியவன் ஒரு முடிவாகப் பெற்றோரின் ஆசைக்குச் சம்மதம் சொன்னான்.

அவனின் முடிவில் அவன் பெற்றோருக்கு மிகுந்த சந்தோஷம்.

நிலா ரகு இருவரும் அரேஞ் மேரேஜ்க்கு ஓகே சொல்லிவிட்டனர். இருவரின் பெற்றோரும் வரன் பார்க்கும் படலத்தைத் தொடங்கி இருந்தனர். தெரிந்தவர்கள் செந்தங்கள் என அனைவரிடமும் போட்டோக்கள் ஜாதகங்கள் கை மாறின. அதன் விளைவாக இருவருக்கும் வரன்கள் வரத் தொடங்கின.

வந்த அத்தனை வரன்களிலும் ஏதோ ஒன்று பொருந்த வில்லை. ஜதக பொருத்தம் அமையவில்லை, அது அமைந்த இடத்தில் வேறு எதிர் பார்ப்புகள் அமையவில்லை. இப்படியாக இருவர் இல்லத்திலும் சென்றுக கொண்டிருந்தது.

நிலா கேட்டுக் கொண்டது போல இந்த வரன் பார்க்கும் படலத்தில் அவளை தொந்தரவு செய்யவில்லை சங்கரும் சிவகாமியும்.

ரகு வீட்டிலும் அதேதான். நம் மேல் உள்ள நம்பிக்கையில் மகன் சம்மதம் சொல்லியிருக்கிறான். அவனுக்குத் தகுந்தாற் போல் பெண்ணை பார்த்து அவன் முன் நிறுத்த வேண்டும். அது வரையில் அவனைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று strict ஆக கூறிவிட்டார் பானுமதி. அவர் பேச்சுக்கு appeal ஏதும் சொல்லாமல் நாகராஜனும் ஒத்துக் கொண்டார்.

2 வாரங்கள் இப்படியாக சொல்ல, கடைசியாக நிலாவின் ஜாதகம் ஒரு உறவினர் மூலன் மீண்டும் ரகுவின் வீட்டிற்கு வந்தது. அதைப் பார்த்த பானுமதிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

வெளியே சென்றிருந்த தன் கணவர் வீட்டிற்குள் நுழைவதுக்குள் “என்னங்க, இப்போது தான் சசி மாமா வந்துட்டு போனார்” என்று கூறும் போதே அவர் முகத்தில் இருந்த பிரகாசம் நாகராஜனுக்கு விஷயத்தைச் சொல்லாமல் சொல்லியது.

“என்னவாம்” என்று மட்டும் கேட்டார் நாகராஜன்.

“இந்தாங்க” என்று தன் கையில் வைத்திருந்த கவரை அவரிடம் கொடுத்த பானுமதி “பிரித்து பாருங்க நீங்களும் சந்தோஷபடுவீங்க” என்றார்.

அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து அந்த கவரை பிரித்துப் பார்த்தார். அதில் நிலாவின் போட்டோ மற்றும் ஜாதகம் இருந்தது. “எம்மா இந்த பொண்ணு தானே ஒரு வருடத்திற்கு முன்னரே நாம ஜாதகம் எல்லாம் பார்த்து ஓகே நு நெனேச்சோம்” என்று தெரிந்ததை உறுதி படுத்திக் கொள்ளக் கேட்டார் நாகராஜன்.

“ஆமாங்க அதே பொண்ணுதான். போன முறையே இந்த இடம் தட்டிப் போனது கவலையா இருந்துச்சி. தெய்வ சங்கல்பமா மீண்டும் அதே வரன் வந்திருக்கு. இந்த தடவை இந்த சம்பந்தத்தை மிஸ் பண்ணிட கூடாதுங்க” என்றார் பானுமதி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மஹாவின் "எனதுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“நான் தான் அப்போவே சொன்னேன் இல்ல மா, நம்ம பையனுக்கு இந்த பொண்ணுதானு எழுதி வைத்திருந்தா அத யாராலையும் மாத்த முடியாது. 1 வருடம் ஆனாலும் மீண்டும் அதே வரன் வந்திருக்கு” என்றார் நாகராஜன்.

“உண்மைதாங்க” என்று அதை ஆமோதித்தார் பானுமதி.

போட்டோவின் பின்னால் போன் நம்பருடன் சங்கரின் பெயர்  தந்தை என்று குறிப்பிட பட்டிருந்தது. அந்த நம்பருக்கு உடனே கால் செய்தார் நாகராஜன்.

போன் ஒலிப்பதைக் கேட்டு சங்கர் எடுத்துப் பார்க்க அதில் தெரிந்த நம்பர் புதிய நம்பராக இருந்தது. யாராக இருக்கும் என்று மனதில் யோசித்துக் கொண்டே கால்ஐ அடண்ட் செய்தவர் “ஹாலோ, சொல்லுங்க” என்றார்.

“வணக்கம் என் பேரு நாகராஜன். என் பையனுக்கு வரன் பார்த்துட்டு இருக்கோம். எங்க நெருங்கிய உறவினர் ஒருவர் முலமா உங்க பெண்ணோட ஜாதகம் மற்றும் போட்டோ பார்த்தோம். அது விஷயமா பேசனும். பேசலாமா” என்றார் நாகராஜன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.