(Reading time: 10 - 19 minutes)

பானுமதி அவர் அருகில் அமர்ந்து அவர்கள் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“நல்லதுங்க தாராலமா பேசலாம்” என்று பதில் அளித்தார் சங்கர்.

“என் பையன் பேரு ரகுராஜன். செந்தமா மாடலிங் ஸ்டுடியோ வச்சிருக்கான். பெரிய பெரிய திரைப்படங்களுக்கு, விளம்பரங்களுக்கு எல்லாம் போட்டோ கிராப்பி பண்ணிருக்கான். வயது 26 ஆகுது” என்று நிறுத்தினார் நாகராஜன்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவர் கூறிய பெயரும் தொழிலையும் வைத்து ஓரளவு தன்னிடம் வந்த ரகுவின் வரனோடு பொருத்திவிட்டார் சங்கர். இருந்தாலும் அவசரப் படாமல் முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு முடிவு செய்து கொள்ளலாம் என்று ஏற்கனவே தெரிந்தார் போலக் காட்டிக் கொள்ளாமல் பேசினார் சங்கர்.

“என் பொண்ணு பேரு வெண்ணிலா. நாங்க சொல்லமா நிலா நு தான் கூப்பிடுவோம். பி.இ. ஆர்கிடெக் முடிச்சிட்டு ஒரு கண்ஸ்டிரெக்சென் கம்பெனில கண்சல்டண்ட்டா வேளை பார்க்கிறா. என் பெண்ணுக்கும் 26 வயதுதான் ஆகுது. ஒரே வயசு உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே” என்றார் சங்கர்.

“ஒரே வயசில் என்ன சார் இருக்கு. இப்போளாம் வயசு அதிகமா இருக்கிற பொண்ணுங்களையே கல்யாணம் பண்ணிக்கிறாங்க. அது மட்டும் இல்லாமல், நாங்க ஜாதகம் பார்த்த இடத்தில் இவங்க இரண்டு பேருக்கும் எல்ல பொருத்தமும் பொருந்தி இருக்கு. அப்படி அமையரது ரொம்ப அரிது நு சொன்னாங்க” என்றார் நாகராஜன்.

சங்கருக்கும் அவர் ஜாதகம் பார்த்த அவர் குடும்ப ஜோதிடர் அப்படிப் கூறியது நினைவிற்கு வந்தது.

“ரொம்ப சந்தோஷம் சார் நீங்க சொல்றத கேட்கும் போது. இந்த நம்பர் என்னோட வாட்ஸாப் நம்பர் தான். இந்த நம்பர்க்கு பையனின் விவரம், ஜாதகம் மற்றும் போட்டோ அனுப்பி வைத்தீங்கனா நாங்களும் எங்க சைடு பார்த்துட்டு சொல்வோம். என்ன சொல்றீங்க” என்றார் சங்கர்.

அவர் மனதில் நினைத்திருக்கும் அதே பையன் தானா என்று உறுதி செய்துவிட்டு மற்றதைப் பேசலாம் என்பது சங்கரின் என்னம்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“நல்லது சார் அப்படியே செய்யலாம். நான் எல்லா விவரத்தையும் அனுப்பி விடுறேன்” என்று சொல்லி போனை துண்டித்தார் நாகராஜன்.

பானுமதி அமைதியாக இருந்தாலும் அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்ற ஆர்வம்.

“நம்ம பையன் விவரம் போட்டோவோட அனுப்ப சொல்லிறுக்காங்க மா. நல்ல மாதிரியாதான் பேசுறாறு. நல்ல குடும்பமாதான் தெரியுது” என்றார் நாகராஜன்.

“ரொம்ப சந்தோஷங்க. எப்படியாவது இந்த சம்பந்தம் அமைதிட்டா நம்ம பிள்ளையோட வாழ்க்கை நல்லா இருக்கும்” என்றார் பானுமதி.

தன் போனில் தன் மகனின் விவரங்களையெல்லாம் சேகரித்துக் கொண்டே “ஆமாம் பானு, எனக்கு அப்படிதான் தோனுது. நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்” என்று கூறினார் நாகராஜன்.

தொடரும்

Episode # 04

Episode # 06

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.