(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - எனதுயிரே - 11 - மஹா

enathuyire

றுநாள் காலை ராமை தேடி அவனின் அறையை நோக்கி சென்றாள் சீதா. அவளை வழி மறித்த ராமின் மாமா வசந்தன்,

"நில்லு... எங்க போற?", என்றார் கறார் குரலில்.

அவரின் அதட்டலில் கண்கள் குளமாக நின்றவள், "ராம பாக்கலாம்னு", என்றாள் மெதுவாக.

"அதுக்காக அவன் ரூம்குள்ளயே போவியா?. அவன் வெளில வந்ததுக்கு அப்புறம் பாத்த போதாதா?. வயசு பொண்ணு இப்படியா ஒரு வயசு பையன் ரூம்க்கு போறது?. உங்க வீட்ல வெளில தங்கறதுக்குலாம் உன்ன எதும் கேக்க மாட்டாங்களா?. எதோ ராம் கூட படிக்கற பையங்கிற முறைல இந்த கஷ்ட நேரத்துல வந்து உதவி செஞ்சேன்னு பாத்த? நீ ரொம்ப உரிமை எடுத்துக்குற?. இன்னும் கொஞ்ச நாள்ல அவனுக்கும் என் பொண்ணு தீபாவுக்கும் கல்யாணம் ஆக போகுது. அதுனால என் மாப்பிள்ளைய விட்டு தள்ளியே இரு." என்று அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே,

"ஹலோ அங்கிள்...  சீதாவுக்கு எனக்கும் ஏற்கனவே எங்க வீட்ல கல்யாணம் பிக்ஸ் பன்னிட்டாங்க. நாங்க எவ்ளோ பெரிய பணக்காரங்க தெரியுமா? எங்க தகுதிக்கு இந்த ராம்ல ஒண்ணுமே இல்ல. அதனால தேவ இல்லாம சீதாவ அந்த ராம் ஓட சேத்து வச்சி பேசாதீங்க. " என்று கோவத்தில் கத்தினான் க்ரிஷ்.

"டேய் க்ரிஷ்... ஏன்டா இப்டி கத்துற?. இதுக்கு தான் உன்ன நா இங்க கூட்டிட்டு வரமாட்டேன்னு சொன்னேன். மாமா, சீதா ரொம்ப நல்ல பொண்ணு நீங்க எதோ தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க", ரகு. ராகுவின் பின்னால் ராமும் வர அனைத்தையும் கேட்டவனுக்கு கோவம் தலைக்கேறியது.

அதற்குள் சத்தம் கேட்டு அங்கு தீபா, தீபாவின் அன்னை இந்திரா அங்கு கூடிவிட்டனர்.

"டேய் ரகு... யாரு? நா தப்பா புரிஞ்சிகிட்டேனா?. உங்களுக்கு தான் இவள பத்தி தெரில. நேத்து நைட் ராம கட்டிபிடிச்சிட்டு இருந்தா இன்னைக்கு ஒருத்தன் வந்து அவள கட்டிக்க போறவன்னு சொல்றான். வேற ஒருத்தன் கூட கல்யாணம் முடிவான ஒருத்தி இன்னோருத்தன கட்டிபிடிச்சிட்டு நிக்குறா இவ நல்லவளா?...", என்று வசந்தன் கூறும் போதே

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"மாமா...", என்று உறுமினான் ராம்.

அவர் பேசிய வார்த்தையில் கூசி போனவள் கூனி குறுகி தனது இரு காதையும் மூடிக்கொண்டு மண்டி இட்டு அழ ஆரம்பித்திருந்தாள் சீதா. அவளின் அருகே சென்றவன் அவளின் கை பற்றி, "எழுந்திரு", என்றான் ராம்.

"எப்படி மாமா இவ்ளோ கேவலமா உங்களால இன்னொரு பொண்ண பத்தி பேச முடியுது?. நீங்களும் ஒரு பொண்ணு வச்சி இருக்கீங்க மறந்துடாதீங்க?"

"என்ன ராம் அவளுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு உன் மாமனையே எதிர்த்து பேசறியா?", வசந்தன்.  

"நா எதித்து பேசல உண்மைய சொல்றேன் மாமா. நேத்து அவ என்ன கட்டிபிடிச்சிட்டு நிக்கல நா தான் அவள கட்டிப்பிடிச்சேன். அது உங்களுக்கும் தெரியும். இருந்தும் அவ மேல பழி போட்டு இங்க இருந்து அனுப்பிடலாம்னு பாக்குறீங்க. உங்க பெண்ணுக்காக இன்னொரு பொண்ண கேவல படுத்த உங்களுக்கு எப்படி மாமா மனசு வந்துச்சு?. இப்போ சொல்றேன் மாமா, நானும் சீதாவும் விரும்புறோம். எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்த அது அவ கூட தான். வேற எந்த கனவும் காணாதீங்க. அவளுக்கு என் கிட்ட எல்லா உரிமையும் இருக்கு. இன்னொரு முறை அவள அப்டி பேசாதீங்க." என்றான் தீர்க்கமாக. 

அந்த சமயம் மாடியில் இருந்து வந்த லதாவும் கயலும் ஒன்றும் புரியாமல் நிற்க, பின் சீதா அழுது கொண்டிருப்பதையும் ராம் அவளின் கையை பிடித்து கொண்டிருப்பதையும் பார்த்த லதாவுக்கு தான் நேற்று இரவு பார்த்ததை தன தம்பியும் பார்த்திருக்கக்கூடும் என்று புரிந்துகொண்டார். லதாவை பார்த்ததுமே கோவமாக பொரிந்து தள்ள ஆரம்பித்தார் வசந்தன்.

"என்ன கா உன் பைய சொன்னத கேட்டியா?. இதுலாம் உனக்கும் தெரிஞ்சி தான் நடக்குதா?. அவ பணக்கார வீட்டு பொண்ணுன்னு அவ பக்கம் எல்லாரும் போய்ட்டிங்களா?."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"டேய் வசந்த் பாத்து பேசு. பணத்துக்கு பின்னாடி போற ஆளுங்க நாங்க இல்லை. சின்ன பசங்க ஒருத்தர் ஒருத்தர் விரும்புறாங்க. அவங்க விருப்பம் தான் முக்கியம். அவங்க விருப்பத்துக்கு எதிரா கல்யாணம் பன்னிவெச்ச அவங்க மட்டும் இல்ல உன் பொண்ணு வாழ்க்கையும் தான் கெட்டு போகும்."

"ஓஹோ... புரிஞ்சிடுச்சு கா.உங்க திட்டம் ல எனக்கு நல்ல புரிஞ்சி போச்சு. நாலு வருஷம் இவன என் சொந்த புள்ளய நெனைச்சு என் வீட்ல தங்க வச்சேன். நன்றி கெட்டவன். அதுக்குலாம் நல்ல பரிசு கொடுத்துட்டான்."

"உன் சொந்த புள்ளையா நெனைச்சி இருந்தா நீ இப்டி அவனை பத்தி தப்பா பேசமாட்டா", லதா.

"இன்னும் எதுக்கு இங்க நிக்குறீங்க வாங்க போலாம் . இவன விட நல்ல வசதியான அழகான பையன பாத்து உனக்கு நா கல்யாணம் பண்ணி வைக்குறேன்" என்று தன் மகள் மற்றும் மனைவியை அழைத்து கொண்டு வெளியேறினார்.

அங்கு நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த க்ரிஷிற்கு ஒன்றுமே புரியவில்லை சிறிது நேரத்திற்கு. ராம் சீதாவின் கையை பற்றி இருப்பதை பார்த்தவன் அவன் அருகே சென்று,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.