(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - சிவகங்காவதி - 06 - ஸ்ரீ

sivaGangavathy

தொண்டிப் பத்து

தொண்டி என்பது ஒரு கடற்கரை நகரம். இந்நகரம் பெண்ணின் அழகுக்கு உவமையாகும் வகையிலும் நகரின் நிகழ்வுகளைக் கூறும் வகையிலும் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி தொண்டிப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

திரைஇமிழ் இன்னிசை அளைஇ அயலது 

முழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறும் இசைக்கும் 

தொண்டி அன்ன பணைத்தோள் 

ஒண்தொடி அரிவைஎன் நெஞ்சு கொண்டோளே - (171)

(மறுகு = தெரு)

என்ற பாடலில், இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன், தலைவியின் அழகை, தொண்டி நகரத்தால் உவமிக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.

டுத்த நாளின் அதிகாலைப் பொழுதும் முந்தைய நாளைப் போன்றே ஆரம்பமானது சிவகங்காவதிக்கு.ஆனால் சற்றே வித்தியாசமான மனநிலையில்.

உதட்டோரப் புன்னகையும் மனம் மொத்தமும் திருவாசகமுமாய் தனக்களித்த அத்தனை வேலைப் பளுவையும் இலகுவாய் செய்து கொண்டிருந்தாள்.சூரியன் உச்சிகாலை வேளையைத் தொடும் நேரத்தை நெருங்கிய போதும் அயர்வு என்ற ஒன்று அவளிடத்தில் இல்லவே இல்லை.

அதற்கும் மேலாக அவளுக்கான அன்றைய உணவு தரம்குறைந்த அடிமட்ட சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படுவது.சாதாரணமாக யாராலும் அதை இரண்டு பருக்கைகளுக்கு மேல் வாயில் வைக்க இயலாது.அப்படியிருக்க அதையும் எவ்வித முகச் சுழிப்பும் இன்றி உண்டு முடித்திருந்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அன்று காலை முதல் நடந்த அனைத்தையும் காவலாளி நஸீமிடம் அப்படியே ஒப்புவித்தான்.நஸீமே ஒரு நொடி குழம்பித்தான் போனான்.

“எப்படி இது சாத்தியம்!நாம் போர்களத்தில் கண்ட சிவகங்காவதியால் இத்துனை பொறுமையாய் இருக்க இயலுமா?அந்த வாள் வீச்சின் வேகமும் நிமிர்ந்த நேர் நடையும் கொண்ட ஒருத்தியால் நிச்சயம் இவ்வாறு இருக்க இயலாது.தனக்குத் தெரியாமல் ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாளோ ?தன் தந்தை தன்னை காப்பதற்கு வருவார் என்று நம்பியிருக்கிறாளா?

எது எப்படி இருப்பினும் அவளின் நிம்மதியும் புன்னகையும் நிலைக்க கூடாது ஒரு முறையினும் என் முன் அவள் மண்டியிட்டே ஆக வேண்டும்”,என்று என்னென்னவோ எண்ணியவனாய் தன் சிந்தனையில் இருக்க அங்கு சிவகங்காவதியின் எண்ணமோ வேறாய் இருந்தது.

உண்ட உணவு ஒருபுறம் வயிற்றை பிரட்டிக் கொண்டிருக்க மனமோ ஈசனை முழுமையாய் தஞ்சம் அடைந்திருந்தது.

“ஈசனே அத்தனை இன்னல்களையும் தாங்கிக் கொள்கிறேன் அவை அனைத்தும் உன்னாலே எனக்கு வழங்கப்படுவதால் மட்டுமே!அனைத்தையும் கடந்து நிச்சயம் நல்வழி காட்டிடுவாய் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அதுமட்டுல்லாது இன்று இருக்கும் இந்த தெளிவு எனக்கு எப்போதுமே இருக்க வேண்டும்.அப்போது தான் இங்கிருந்து தப்புவதற்கான வழியையும் கண்டுகொள்ள இயலும்.குழம்பிய குட்டையாய் மனம் இருப்பின் அதிலிருந்து மீன் பிடிப்பது எதிரிகளுக்கு சுலபம்.அப்படி ஒரு வாய்ப்பை எதிரிகளுக்கு எக்காரணம் கொண்டும் நிச்சயம் கொடுக்கக் கூடாது “,என்று தீர்க்கமாய் முடிவெடுத்தவள் அதை செயல்படுத்தவும் தொடங்கியிருந்தாள்.

அதே நேரத்தில் இங்கு பாளையக்காரர் சேதிராயன் நிலைமையோ மிகவும் கவலைக்கிடமாய் இருந்தது.தன்னால் முடிந்தமட்டில் மற்ற அனைத்துப் பாளையக்காரர்களிடமும் உதவிகோரி செய்தி அனுப்பினார்.ஆனால் அவர் மீதும் சிவகங்காவதியின் மீதும் இருந்த வன்மமும்,முகலாயர்களின் மீதிருந்த பயமும் அவர்களை இப்பிரச்சனையிலிருந்து சற்றுத் தள்ளி நிறுத்திவிட்டது.

மகளைப் பிரிந்த துயரத்தில் கங்கம்மா படுத்த படுக்கையாகி விட சேதிராயனோ நடைபிணமாய் வாழ்ந்து கொண்டிருந்தார்.மணிமேகலையோ தேற்ற ஆளின்றி யாரைத் தேற்றுவது யாரைப் பாதுகாப்பது என ஒன்றும் புரியாமல் விக்கித்து நின்றாள்.

இப்படியான சூழலில் ஒரு நாள் சிவகங்காவதியைப் பற்றிய பேச்சுகள் சேதிராயனுக்கும் மணிமேகலைக்கும் நடந்து கொண்டிருந்த சமயம்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

குருராஜனின் "எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“என் மகள் எத்துனைப் பெரிய தைரியசாலியாய் இருப்பினும் அவள் சிக்கியிருப்பதோ அந்த அரக்கர்களிடம் ஆயிற்றே!தனி ஒரு பெண்ணாய் அத்தனை ஆடவர்களை எப்படி எதிர்கொள்வாள்!!அவளின் மானத்திற்கு ஏதேனும்???”

“அரசே!!!!!ஏன் அப்படி அபச்சொல் பேசுகிறீர்கள்.என் தங்கை சாதாரணப் பெண்ணல்ல சிவகங்காவதி. அத்தனை எளிதில் அவளை யாராலும் நெருங்க முடியாது அது எத்துனைப் பெரிய பலசாலியாய் இருந்தாலும் சரி.

அதையும் மீறி எதுவும் தவறாக நடப்பின் கற்புக்கரசியான அவளை அந்த ஈசனே தன்னிடத்தில் எடுத்துக் கொள்வார்.மீண்டும் ஒரு முறை இப்படிப் பேசி என்மனதை வதைக்காதீர்கள் அரசே!”

“உண்மை!!உண்மை!!நீ கூறுவது எத்துனை உண்மை இதை நான் எவ்வாறு மறந்தேன்.என் மகள் கற்பிற்கு இலக்கணம் அவள் மீது எந்த ஒரு ஆடவனின் நுனிவிரல் கூட பட்டிருக்காது.

அப்படியென்றால்..அப்படியென்றால்..இந்தச் சணம் என் மகள் அந்த ஈசனின் திருவடியைப் பற்றி பல நாட்கள் கடந்திருக்கும் இல்லையா!!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.