(Reading time: 11 - 22 minutes)

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த நஸீமோ அதிசயப் பொருளைப் பார்ப்பது போல் அவளைப் பார்த்து நின்றான்.என்னமாதிரியான மங்கையிவள்.இந்தச் சிறு வயதில் இத்தனை அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறாளே!ஒவ்வொரு நாளும் புதிதாய் தெரிகிறாளே!நான் செய்யவது அனைத்தும் தெரியும் என்கிறாள்.தெரிந்தே தான் வந்து இப்படிப்பட்ட அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்கிறாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவனின் சிந்தனையை கலைக்கும் வண்ணம் அவளே வாய் திறந்தாள்.”நிச்சயம் நான் கூறுவதில் எந்தவித பொய்மையும் இல்லை.இருப்பினும் யாருக்கும் இவற்றையெல்லாம் நம்புவது கடினமே.இருக்கட்டும் எனக்கான உதவியை செய்வதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் விட்டு விடுங்கள்.என் தந்தையின் ஆன்மா நிச்சயம் எனை மன்னித்து விடும்.”

அவள்போக்கில் அனைத்தையும் உரைத்துவிட்டு தன்னிடத்தில் சென்றுஅமர்ந்து கொண்டாள்.நஸீமோ ஒன்றும் கூறாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.நேராய் சமீராவிடம் சென்றவன் ஒன்றும் கூறாமல் அமைதியாய் அவரருகில் அமர்ந்தான்.

அவன் முகத்தின் கலக்கத்தை உணர்ந்தவராய் பணிப் பெண்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு பணித்தார்.அனைவரும் சென்றவுடன் அவன் தோள் தொட்டவர் அவனை உணர்விற்கு கொண்டு வந்தார்.

“என்னவாயிற்று நஸீம்..இப்போதெல்லாம் அடிக்கடி உன் முகம் இப்படி உணர்ச்சியில் சிக்கிக் கொள்கிறது.”

“பாட்டி அவர்களே தாங்கள் கூறுவது மிகப் பெரிய உண்மை.நான் எத்தனையோ சிற்றரசுகளைக் கைப்பற்றி இருக்கிறேன்.நம் ஷாகின் ஷாவிற்கு உதவுவதற்காக எத்தனையோ பேரரசுகளையும் தோற்கடித்து இருக்கிறேன்.எந்த ஒரு யுத்தத்திலும் முழுமையாய் நேர்மையை கையாண்டதில்லை.

ஆனால் எந்த ஒரு சூழலிலும் ஒரு பெண்ணைக் கூட கைதியாக்கியதும் இல்லை.தவறான கண்ணோடத்தில் பார்த்ததும் இல்லை.முதன்முறையாய் இத்துனை கடுமையாய் நடந்துகொள்வது இந்த தென்னகத்தின் சிவ..கங்காவிடம்தான்.

பெண் என்பவள் அடக்கத்தின் மறு உருவாய் இருக்க வேண்டும் என்றே நினைத்திருப்பவன் நான்.அப்படியிருக்க என் முன் போர்க்களம் கண்டது மட்டுமின்றி துளியும் பயமின்றி இருந்த அவளைக் கண்டு ஆத்திரம் கொண்டேன்.

என்னால் அவளின் துணிவை ஏற்க முடியவில்லை.ஆனால் இப்போது அவள் கூறும் விடயங்களை எல்லாம் கேட்க கேட்க என்னால் ஒருநிலையில் இருக்க முடியவில்லை.”,என்றவன் அவள் கூறிய அனைத்தையும் சமீராவிடம் கூறினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மஹாவின் "எனதுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“நஸீம் இந்துக்களில் அதீத பக்தி உடையவர்களில் சிலருக்கு இது போன்ற அபூர்வ சக்திகள் இருக்குமென நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.நம் அண்டைய தேசத்து ரஜபுத்திரர்களில் சிலர் இது போன்ற அதிசயங்களை கடந்து வந்திருக்கிறார்கள்.

அவர்களின் கடவுளின் ஆணைப்படி பல கோயில்களும் புண்ணிய ஷேத்திரங்களும் கூட உருவாகியிருக்கின்றன.எனவே அவள் கூறுவது சத்தியமாய் இருக்க வாய்ப்புகள் அதிகமே.அது மட்டுமல்லாது நீ அவளின் கோரிக்கையை நிறைவேற்றுவதனால் அவள் நிச்சயம் உனக்கெதிராய் எதையும் செய்ய மாட்டாள்.

பெற்றவருக்கான இறுதி கடமைகளை செய்யவிடாமல் தடுப்பது நமக்கும் மிகப் பெரிய பாவத்தை சேர்க்கும்.போ நஸீம் அவளுக்குத் தேவையானதை செய்து கொடு.மற்றதை பற்றி பின்னர் யோசித்துக் கொள்ளலாம்.”

“ம்ம் சரி தாதி அப்படியே செய்கிறேன்.யாரங்கே பாதாளச் சிறையின் புதிய கைதிக்குத் தேவையானதை செய்து கொடுங்கள்.அதேநேரம் அதீத கவனம் இருக்கட்டும்.”,என்று எச்சரித்து அனுப்பியவன் அப்படியே தன் பாட்டியின் மடி சாய்ந்து கொண்டான்.

“இத்துனை சோர்வாய் உனைக் கண்டதில்லை நஸீம்.வீணாக மனதை வருத்திக் கொள்ளாமல் சற்று கண்ணயர்ந்து இளைப்பாறு.அல்லாஹ் உனக்கு நன்மையை மட்டுமே அருள்வார்.உறங்கு நஸீம்.”,என்றவரின் வார்த்தையில் தெளிந்தவனாய் கண்ணயர்ந்தான் இஷான் நஸீம். 

தொடரும்...

Episode 05

Episode 07

Go to Sivagangavathi story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.