(Reading time: 12 - 24 minutes)

சிவகாமிக்கு அதைக் கேட்டு மிகுந்த சந்தோஷம். கடவுளுக்கு மனதிற்குள் நன்றி கூறினார் சிவகாமி.

சங்கர் உடனே நாகராஜனுக்குக் கால் செய்தார். சங்கர் நம்பரை பதிவு செய்து வைத்திருந்ததால் அதைப் பார்த்து கால்ஐ உடனே அடண்ட் செய்தார் நாகராஜன்.

சங்கர்: சார் நான் சங்கர் பேசுறேன். வெண்ணிலாவுடைய அப்பா. ஞாபகம் இருக்க.

நாகராஜன்: சொல்லுங்க சார் நல்ல ஞாபகம் இருக்கு. பையனோட போட்டோவ பார்த்திங்கள?

சங்கர்: பார்த்தோம் சார். எனக்கும் என் மனைவிக்கும் ரெம்ப பிடித்திருக்கு. அது மட்டும் இல்ல உங்க கிட்ட இன்னொரு விஷயமும் சொல்லனும் (இக் வைத்து முடித்தார்)

நாகராஜன்: சொல்லுங்க சார் என்ன விஷயம்.

சங்கர்: எங்க பொண்ணுக்கு போன வருடம் வரன் பார்க்க ஆரம்பித்தோம். அப்போவே எங்க சொந்தகாரங்க மூலம் உங்க பையனோட ஜாதகம் எங்களுக்கு கிடச்சது. அப்போவே பெருத்தம் எல்லாம் பார்த்து எங்களுக்கு பிடிச்சிருந்தது. ஆனா எங்க பொண்ணுதான் அப்போ கல்யாணம் வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும் நு சொல்லிட்டா. அதனாலதான் அப்போவே நாங்க உங்களை தெடர்பு கொள்ளல. இந்த சம்பந்தம் கை விட்டு போயிடுச்சேனு அப்போவே எங்களுக்கு ஒரு சின்ன வருத்தம் இருந்தது. ஆனால் கடவுள் செயலாள மீண்டும் நீங்க எங்கள தொடர்பு கொல்லுவீங்கனு நாங்க நினைத்துக் கூட பார்க்கவில்லை.

அதைக் கேட்டு நாகராஜனுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. தான் வீட்டில் மட்டுமல்ல எல்லா வீட்டிலும் இதுதான் நிலை என்ற சிறு நிம்மதியும் கூட.

நாகராஜன்: நீங்க சொல்றத கேட்கும் போது அப்படியே எங்க வீட்டில் நடந்தது போலவே தான் இருக்கு. உண்மைய சொல்லனுன எங்க இடத்திலும் உங்க பெண்ணோட ஜாதகம் போன வருடம் வந்தது. எங்க பையனும் அப்போ கல்யாணம் வேண்டாம் நு சொன்னதாலதான் அதை நாங்க தொடர்ந்து பேசாமல் கை விட்டுட்டோம்.

சங்கர்: நீங்க சொல்றது எனக்கு ஆச்சரியமா இருக்கு சார்.

இவ்வாறாக இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்தனர்.

“எனக்கு என்னமோ நிலாதான் நம்ம பையனுக்கு சரியான ஜோடிநு தோனுது” என்று தன் அருகில் அமர்ந்திருந்த தன் மனைவி பானுமதியிடம் கூறினார் நாகராஜன்.

“எப்படிங்க சொல்றீங்க” என்றார் பானுமதி.

தான் போனில் சங்கருடன் உரையாடியதை பானுமதியிடம் கூறினார். “அந்த பொண்ணும் நம்ம பையன் மாதிரிதானு தோனுது மா. அதனால தான் சொன்னேன். நம்ம பையனுக்கு பொருத்தமான ஜோடி நிலாதானு” என்று பதில் அளித்தார் நாகராஜன்.

அதைக் கேட்கும் போது பானுமதிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நிலா போட்டோவை முதல் முறை பார்த்த போதே அவருக்கு அது தோன்றியது. “நீங்க சொல்றத கேட்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. அப்ப ஒரு நல்ல நாள் பார்த்து பெண் பார்க்க போலாம்ங்க” என்றார் பானுமதி.

“என்ன பானுமதி, விட்டா இப்போவே போய் நிலாவ வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவ போல. அவர் அவங்க வீட்டில் கலந்து பேசிட்டு சொல்றனு சொல்லிருக்காரு. கொஞ்சம் பொறுமையா இரு. அது மட்டும் இல்லாமல் இது நாம மட்டும் முடிவு செய்ற விஷயம் இல்லயே. நம்ம பையன சமாலிக்கிறதுதான் இதில் பெரிய சவாலே” என்றார் நாகராஜன்.

“நீங்க சொல்றதும் சரிதாங்க. ரகுவ தான் எப்படி சம்மதிக்க வைக்க போறோம் நு தெரியல. ஏதோ ஒரு எண்ணத்தில் பெண் பாருங்கனு சொல்லிட்டான். ஆனா வேதாளம் இன்னும் அதே மரத்தில்தான் இருக்கா இல்ல வேற மரம் மாறிடுச்சானு தெரியல” என்று புளம்பினார் பானுமதி.

அதைக் கேட்டு நாகராஜனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

“சிரிக்காதீங்க. அவனை சமாளிக்க வழி ஒண்ணு சொல்லுங்க” என்றார் பானுமதி.

“முதல அவங்க வீட்டில் இருந்து ஒரு நல்ல செய்தி வரட்டும் பானுமதி. நான் ரகு கிட்ட பேசுறேன்” என்றார் நாகராஜன்.

பானுமதிக்கும் அதுதான் சரி என்று பட்டது. அவரும் சரி என்று கூறிவிட்டுச் சமையலைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.

அதே சமயம் வெண்ணிலா வீட்டில்.

தான் போனில் நாகராஜனுடன் பேசியதை எல்லாம் சிவகாமியிடம் பகிர்ந்து கொண்டார் சங்கர்.

“என்னங்க சொல்றீங்க. நீங்க சொல்றத பார்த்தால் எல்லாம் நம் வீட்டில் நடந்தது போல் இருக்குங்க.” என்றார் சிவகாமி.

“ஆமா சிவகாமி அப்படிதான் இருந்தது எனக்கும். இத்தனைக்கும் இந்த வார்த்தையை நாகராஜன் சார் சொல்லியே சொல்லிட்டாரு” என்றார் சங்கர்.

“உங்களுக்கு என்னங்க தோனுது. இந்த சம்பந்தம் நல்ல இடம் நு தோனுதா” என்றார் சிவகாமி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.