(Reading time: 12 - 24 minutes)

“பேசின வரைக்கும் நல்ல தான் பேசினாங்க. நல்ல மனுசங்க மாதிரிதான் தெரியுது. பிள்ளைக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல நு சொன்னாங்க. பெற்றோருக்குத் தெரிந்து எந்த பிள்ளையும் தவறு செய்வதில்லை. ஆனால் அவர்கள் சொன்னது உண்மைனா இந்த காலத்தில் அப்படி ஒரு வரன் அமைவது கஷ்டம்தானு சொல்லுவேன்.” என்றார் சங்கர்.

“அது சரிங்க, ஆனால் அந்த பையன் கல்யாணம் வேண்டானு சொன்னாத சொன்னிங்களே. அவங்க வீட்டில் கட்டாயப் படுத்தி கல்யாணம் செய்யச் சம்மதிக்க வைத்தால் நாளை பிரச்சனை நம்ம பொண்ணுக்குதானே. அதான்” என்று இழுத்தார் சிவகாமி.

“என்ன சிவகாமி பேசுற. இங்க என்ன பாலிய திருமணமா செய்ய பேசிட்டு இருக்கோம். அவங்க பையன் என்ன சின்ன குழந்தையா. அவங்க வற்புறுத்தி கல்யாணம் செய்து வைக்க. இந்த காலத்து பசங்க நிறையக் கனவுகள் எதிர் கால லட்சியங்கள் நு நிறைய யோசிக்கிறாங்க அவ்வளவுதான்.” என்று சிறிது இடைவேளைவிட்டு நிறுத்தினார்.

“இவ்வளவு ஏன் நம்ம பொண்ணு இல்ல. அவளும் அரேஞ் மேரேஜ் நா வேண்டவே வேண்டாம் நு சொல்லிக்கிட்டு இருந்த. நாம எடுத்து சொன்னோன இப்போ புரிஞ்சிக்கலயா. அது மாதிரிதான்” என்றார் சங்கர்.

“நீங்க நம்ம பொண்ணுனு சொன்னோன தான் ஞாபகம் வருது. இந்த விஷயத்தை எப்படி நம்ம பொண்ணுக்கிட்ட சொல்றது முதல” என்று முகத்தைப் பதற்றமாக வைத்துக் கொண்டு கேட்டார் சிவகாமி.

“ம்ம்ம் இப்ப கேட்டியே இந்த கேள்வி நியாயமான கேள்வி. இதற்குப் பதில் நீ தேடிப் பார்த்துக் கொண்டே இரு எனக்குக் கொஞ்சம் வெளியே வேளை இருக்கு நான் வந்துடுறேன்” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு எழுந்தார் சங்கர்.

“என்னங்க என்ன அந்த ராட்ஷட்சி கிட்ட மாட்டி விட்டுட்டு நீங்க எஸ்கேப் ஆக பார்க்கிறீங்களா” என்றார் சிவகாமி.

“ச்சச எஸ்கேப்லாம் ஒன்னும் இல்லமா எனக்கு உண்மையிலே வேளை இருக்கு நான் போயிட்டு வந்துடுறேன். ஈவினிங் நிலாகிட்ட நாம பேசலாம்” என்றார் சங்கர்.

“என்னமோ சொல்றீங்க. அன்னைக்கு ஏதோ கல்யாணத்துக்கு மாப்பிளை பாருங்கனு சொல்லிட்டா உங்க பொண்ணு. இன்னுமும் அதே ஞானத்தில்தான் இருக்காலா இல்ல பழய குருடி கதவ தெரடி நு ஆரமிக்க போறாலானு தெரியல” என்று புலம்பினார் சிவகாமி.

சிவகாமியின் புலம்பல் சங்கர் காதிலும் விழுந்தது. எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டு வெளியே சென்றார் சங்கர்.

அன்று மாலை வீட்டில் நுழைந்த நிலாவிற்கு வரவேற்பு பலமாக இருந்தது. அந்த வரவேற்பிலே தெரிந்து கொண்டால் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று. ஆனாலும் எதுவும் வெளிக் காட்டி கொல்லாமல் தன் வேளைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவ்வப்போது சிவகாமி ஏதோ சங்கரிடம் செய்கை செய்வதையும், அதற்கு அவர் கண்களாலேயே ஏதோ பதில் செல்வது என நடந்து கொண்டிருந்தது. நடப்பது அனைத்தையும் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தாள் நிலா.

இரவு 9 மணி அளவில் சிவகாமி, டிபனை டேபிளில் எடுத்து வைத்து விட்டு சங்கரையும் நிலாவை அழைக்க இருவரும் வந்து அமர்ந்தனர்.

“நிலா, வேளை எல்லாம் எப்படி மா போகுது” சாப்பிடும் போது பேச்சை தொடங்கினார் சங்கர்.

“நல்லா போகுது பா, கம்மிங் மந்த்ல புது ஃபாரஜக்ட் நிறைய வருது பா. சோ தனியா ப்ராஜக்ட் லிட் பண்ணற மாதிரி வரும் நு சொல்லிருக்காங்க. ஹோபிங் ஃபார் த பெஸ்ட் பா” என்று உற்சாகமாகப் பதில் அளித்தாள் நிலா.

“சூப்பர் மா ஆள் த பெஸ்ட். ஐ நோ யு டிஸர்வ் ட் அண்ட் யு டூ வெல் இன் ட்” என்று அவளுக்கு வாழ்த்துக்களைக் கூறினார் சங்கர்.

“தேங்க்ஸ் பா.” என்று அதற்கு நன்றி கூறினாள் நிலா.

நிலா நல்ல மூடில் தான் இருக்கிறாள் என்று சங்கருக்கு புரிந்தது.

“நிலா, உன் கிட்ட இன்னொரு விஷயம் பத்தி பேசனும்” என்றார் சங்கர்.

“சொல்லுங்க பா. என்ன விஷயம்” என்றாள் நிலா.

அவளுக்கு மனதில் ஒரு ஓரத்தில் தெரியும் எதைப் பற்றிப் தன் தந்தை பேசப் போகிறார் என்று. வேறு எந்த விஷத்திற்கும் அவர் தந்தை தயங்கி அவளிடம் பேசியது இல்லை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு பேசுபவர் தன் தந்தை என்று நிலாவிற்குத் தெரியும்.

“போன வருடம் நாங்க உன் கிட்டக் கல்யாணம் பற்றி பேசும் போது, ஒரு நல்ல வரன் வந்திருக்கு, பையன் பேரு ரகு, என்று சொன்னோம் ஞாபகம் இருக்கா” என்றார் சங்கர்.

ஏதோ நல்ல இடம் வந்திருக்குனு தான் பேச்சைத் துடங்கினார்கள் ஆனால் அன்று அவள் இருந்த மன நிலையில் அந்த பையன் பேரை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. அதற்கான அவசியமும் அவளுக்கு இல்லை.

“ஸாரி பா பேர் நியாபகம் இல்ல. பட் சொல்லுங்க” என்று உள்ளதை உள்ளவாறு கூறினாள் நிலா.

இன்று காலையில் நாகராஜன் கால் செய்ததில் இருந்து அதற்கு அப்பறம் நடந்த விஷயம் அனைத்தையும் நிலாவிடம் கூறினார். அவள் கேட்ட விஷயம் அவளுக்கும் சற்று ஆச்சரியமாக தான் இருந்தது. இருந்தாளும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.