(Reading time: 11 - 21 minutes)

என் பொண்ணு பக்கத்தில் இருந்தா கூட அவளை தூர இருந்து கூட பார்த்து மனசை தேத்திக்கிட்டு இருந்திருப்பேன். ஆனா எங்கேயோ கடல் தாண்டி போன என்னோட பொண்ணை பார்க்க முடியாம தவிச்ச நான், அவளுக்கு அந்த லண்டன் வாழ்க்கை சந்தோஷத்தை கொடுக்கணும்னு தான் கடவுள்க்கிட்ட வேண்டிப்பேன்.

போக போக என் பொண்ணுக்கு என்னை ஞாபகம் இருக்குமாங்கிறதே எனக்கு சந்தேகம் தான், எப்படியோ என்னை மறந்தாலும் அவ நல்ல வாழ்க்கை வாழணும் அப்படித்தான் நான் எனக்குள்ள சொல்லிப்பேன்.

அன்னைக்கு ஆனந்தி எனக்கு போன் செஞ்சு சுடர் பத்தி சொன்ன போது கூட சுடரும் பக்கத்தில் இருப்பான்னு நான் நினைச்சு பார்க்கல.. அந்த நேரம் உன்னையும் பிள்ளைங்களையும் மனசில் வச்சு தான் அப்படி பேசினேன்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அடுத்து வெண்மதி இறந்துட்டா சுடரை இங்க அனுப்புறதா ஆனந்தி சொன்னதும், நான் சரின்னு சொன்னா அதை நீயும் உன்னோட குடும்பமும் எப்படி எடுத்துப்பீங்களோன்னு தோனுச்சு, கூட சுடர் இங்க பொருந்தி இருப்பாளான்னும் தயக்கம், அதுவரை ஆனந்தி அவளுக்காக நம்மக்கிட்ட பேசியும் சுடர் அப்பான்னு என்கிட்ட பேசவேயில்லையேன்னு மனம் ஏங்கிக்கிட்டே இருந்துச்சு.. நான் நினைச்சது போல அவ என்னை மறந்துட்டா போலன்னு முடிவு பண்ணிட்டேன். அதான் அவ இங்க வர வேணாம்னு சொன்னேன்.

அடுத்து பிடிவாதமா அவளை நீ வரவச்சப்போ நேர்ல என்னைப் பார்த்தாலாவது அப்பான்னு கூப்பிட்டு என்கிட்ட வருவான்னு நினைச்சேன். ஆனா இங்க வந்தும் என்கிட்ட பேசாம இருந்தப்போ ஏதோ ஆனந்தி சொன்னதுக்காக மட்டுமே அவ இங்க வந்திருக்கான்னு நான் நம்பினேன். அந்த கோபம் தான் நான் அப்பப்போ சிடுசிடுன்னு இருப்பேன். அதிலும் உன்கிட்டயும் பிள்ளைங்கக்கிட்டேயும் ஏன் உன்னோட குடும்பத்தாரோடு கூட அவ பேசறதை பார்க்கும் போது, நான் என்ன தப்பு செஞ்சேன். ஏன் என்னோட பொண்ணுக்கு என்னை பிடிக்கலன்னு என்னோட மனசு கேள்விக் கேட்கும்,

ஆனா அதுக்கு பதில் இப்போ தானே தெரியுது.. அவ மனசை என்னோட வார்த்தைகள் தான் சுக்கு நூறா உடைச்சிருக்கு… எவ்வளவு அவளை நான் வேதனைப் படுத்தியிருக்கேன்

உனக்கு தெரியுமா எழில், சுடர் மகியை காதலிக்கிறதா சொன்னப்போ என் மனசுக்குள்ள ஒரு சின்ன ஆசை வந்துப் போச்சு, அவ மட்டும் மகியை கல்யாணம் செய்துக்கிட்டு இங்கேயே இருந்தா, அடிக்கடி என்னோட பொண்ணை பார்க்கலாமே, அந்த நேரம் அவ அருளுக்கு செஞ்சது கூட ரொம்ப பெருசா தெரியல.. ஆனா அப்போ உங்கம்மா வெண்மதியோட சுடரை சம்பந்தப்படுத்தி பேசினப்போ, வேண்டாம் இப்படி நினைக்கிறவங்க வீட்டுக்கு என்னோட பொண்ணு மருமகளா போக வேண்டாம் அப்படி தான் நினைச்சேன்.

அவ இங்க இருந்து அருள், மகி கல்யாணத்தை பார்த்தா வேதனைப்படுவான்னு தான் அவளை லண்டனுக்கு அனுப்ப சொல்லி உன்கிட்ட பேசினேன்.

ஆனா எத்தனை கஷ்டத்தை என் பொண்ணு தாங்கியிருக்கா.. அவளை உனக்கு அப்பா நான் இருக்கேன்.. இனி நீ வேதனை பட வேண்டாம்னு அன்பா அரவணைச்சிருந்தா என் பொண்ணு இங்க நிம்மதியா இருந்திருப்பா.. ஆனா இங்கேயும் அவளை அதிக நேரம் ஒரு அறைக்குள்ளேயே வாசம் செய்றது போல வச்சிட்டேனே.. எனக்கு மன்னிப்பே கிடையாது எழில், எனக்கு தண்டனை கிடைச்சாகணும், பெரிய தண்டனையா கிடைச்சாகணும் எழில்..” என்று அதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தவர், திடிரென நெஞ்சுவலி வரவும்,

நெஞ்சைப் பிடித்தப்படியே, “எனக்கு சுடர்க்கிட்ட பேசணும் எழில், சுடர்க்கிட்ட பேசணும்..” என்றப்படியே மயங்கி சரிந்தார்.

உறவு வளரும்...

Episode # 53

Episode # 55

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.