Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - சுஷ்ருதா – 11 - சித்ரா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - சுஷ்ருதா – 11 - சித்ரா

sushrutha

கையில் குழந்தையுடன்  அவசரமாக உள்ளே நுழைத்தவளின் முகம் லேசாக மலர்ந்திருந்ததோ  என்று நினைத்தான் ஆனந்தன் !

எப்பவும் போல் அவன் மனதில் குற்ற உணர்ச்சி எழுந்தது .

இவளுக்கு என்ன தலையெழுத்து ,சின்ன சின்ன சந்தோசங்கள் கூட இன்றி  இங்கே கிடந்தது உழல வேண்டும் என்று ,

ஆலோசிக்காமல் அவசரமாக முடிவு எடுத்தது  இவர்களாக இருக்க ,அதனால் விளைந்த கஷ்டத்தையும் இவர்களே தான் அனுபவிக்க வேண்டும் அல்லவா ,இதில் இனி தான் வாழ்வு தொடங்க வேண்டிய அவளின் எதிர்காலத்தையும்  பலி  இடுகிறோமோ  என்று  வரிசையாக  மனதில் எண்ணங்கள் வழக்கம் போல அணிவகுக்க ..

முயன்று அதை ஒதுக்கி குழந்தையை வாங்கி கொண்டான் .

 ''சீமா ''என்றாள்  உள்ளே நகர்ந்தபடி 

''தூங்கறா ..நான் ஏதாவது  செய்யணுமா ''என்றான்  கூட நடந்தபடி 

''ஒன்னும் இல்ல ,இப்போ  முதல குட்டிக்கு மம்மம் ..அப்புறம் தான் அடுத்தது ,பார்க்ல  ,டாக்டர் சசியை பார்த்தேன் ,அவங்க அக்கா குழந்தையை கூட்டிட்டு வந்திருந்தாங்க ,இங்க பக்கத்துல தான் வீடாம் ,பேசிட்டு இருந்தோம் ,அதுக்குள்ள குட்டிக்கு பசி போல ,அவர் சாவியை சாப்பிட பார்துது ''என்றவாறே  சமயலறையில் நுழைந்து பதமாய் கேழ்வரகு கஞ்சி  காய்த்து ,சூடு ஆத்தி  ,

குழந்தையை இவன் வாகாக அதற்கென வாங்கிய குட்டி சேரில் உட்கார வைக்க 

''லேட்  ஆகிடுச்சாடி தங்கம் ''என்று கொஞ்சியபடி அதற்கு துளி துளியாய் ஊட்ட ஆரம்பித்தாள் .

இப்போது இரண்டு வாரமாய் தான் இந்த கஞ்சி  சாப்பிட ஆரம்பித்திருந்தது குழந்தை ,அதனால் ஆவலாக தன குருவி வாயை திறந்து வாங்கிக்கொண்டது .

தள்ளி  நின்று பார்க்க இது ஒரு அழகான குடும்ப காட்சியாக தான் தெரிந்தது 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஆனால் அவனுக்கு தான் தெரியும் ,இதன் பின் உள்ள வலியும் வேதனையும் 

எப்படி மோசமான நிலை இருந்தபோதும் ,தான் கண்டிப்பாக அதை தனியாக சமாளிப்பேன் என்று உறுதியாக இவள் உதவியை மறுத்திருக்க வேண்டுமோ என்று நூறாவது தடவையாக நினைத்தான் .

அன்று அவன் இருந்த நிலையில் ,இவள் உதவி கரம் நீட்டியபோது  சிந்திக்க முடியவில்லை ,மூழ்கி கொண்டிருந்தவனுக்கு கொஞ்சமே கொஞ்சம் மூச்சு காற்று கிடைத்தது போல் இருந்தது ,அதனால் யோசிக்காமல் அதை பற்றிக்கொண்டான் 

ஆனால்  இப்போது ,இது நல்லதா ,கெட்டதா ...ஏற்கனவே சிக்கலாகி இருந்த அவன் வாழ்க்கையில் ,இவள் பாதையை இணைத்து அதையும் சிக்கலாக்கி  விட்டோமோ என்று உறுத்தியது .

இப்படி அவன் வாழ்க்கை  தாறு மாறாக போகும் என்று அவன் கண்டானா 

எல்லாரையும் போல ,மிக சந்தோசமாக தான் இருந்தது அவர்கள் மண  வாழ்க்கையின் ஆரம்ப கட்டம் .

பெரியவர்கள்  சேர்த்து கொள்ளவில்லை என்ற போதும் ,அது நிரந்தரம் இல்லை ,கொஞ்ச நாளில் எல்லாம் சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கை இருவருக்குமே இருந்தது .

அதோடு சீதாவும் அடிக்கடி வந்து பார்த்து சென்றாள் ,அவள் மூலம் அந்த உறவுகள் பற்றிய செய்தி காதில் விழுந்ததே போதுமானதாக இருந்தது .

கிட்டத்தட்ட அதே போல் இவன் பக்கத்தில் இருந்து இவன் பெரியம்மா பார்க்க வந்தபோது ,இருவருக்குமே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது உண்மை .

அவர் அம்மாவின் அக்கா ,என்றபோதும் அம்மாவிற்கு இவன் பிறந்து ஐந்து வருடங்கள் ஆகும் வரை அவருக்கு குழந்தை  இல்லை ,அதனால் இவனை மூத்த மகனாக தான் பாவித்தார் .

தனக்கு மகள்  பிறந்தபின்னும் இவனை  மூத்த மகனாக தான் கருதி அன்பை பொழிந்தார் ,அவர் நெஞ்சிலே அப்படி ஒரு வஞ்சம் எப்படி வந்து புகுந்தது .

பெரியப்பா இறந்த பின் தன்  மகளுடன்  சென்னை அவுட்டரில் வசித்தார் .

அவ்வப்போது அம்மாவோடு வந்து தங்குவது வழக்கம் ,அப்போதெல்லாம் பெரியம்மா தான் சமைப்பார் ,அவனுக்கு அவர் கை  பக்குவம் ரொம்பவே இஷ்டம் ,அதில் அம்மாவுக்கே கூட லேசான எரிச்சல் உண்டு .

அப்படி இன்னொரு அம்மாவாக இருந்த பெரியம்மாவை நம்பி அவன் எடுத்த முடிவு தான் பெரும் வினையாக போனது .

கல்யாணம் அவசர கதியில் நடந்ததால் ,குழந்தை பெற்று கொள்வதை  கொஞ்சம் ஒத்தி  வைப்பது என்று இருவரும் சேர்ந்தே மனசார முடிவு எடுத்திருந்தனர் .

இன்னும் சொல்ல போனால் அவள் அக்கா கல்யாணம் ஆகும்வரை என்று அவர்கள் தீர்மானித்திருக்க 

இறைவன் வேறு கணக்கு வைத்திருந்தான் போல ..

அவள்  கருத்தரித்த போது  பெரியம்மா  மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் ,அல்லது அடைந்தது போல காட்டிக்கொண்டார் .

அவளுக்கு சிறு சிறு உணவு பண்டம் ,வாங்கி வருவது ,சமைத்து எடுத்து வருவது என்று பிரியமாக நடந்துகொண்டார் 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Chitra

Like Chitra Kailash's stories? Now you can read Chitra Kailash's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
  • Sushrutha (Updated fortnightly on Friday Morning)
Add comment

Comments  
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 11 - சித்ராmadhumathi9 2019-04-14 13:39
facepalm sila pergalin ennangal appadi.enna seivathu.nice epi.waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 11 - சித்ராAdharvJo 2019-04-12 16:11
3:) sick lady :angry: what happened to Sima? Pity Anandh and Sita. Interesting epi ma'am. Look forward to read next update. Dr busy ya irukaro ;-)

thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 11 - சித்ராsaaru 2019-04-12 08:17
Nice update chithu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 11 - சித்ராSrivi 2019-04-12 06:54
Nice update sis.. konjam niraya pages kudunga sis.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top