Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - கலாபக் காதலா - 14 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - கலாபக் காதலா - 14 - சசிரேகா

kalaba Kathala

வியாழக்கிழமை

காலை மணி 9

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா

பொன்னையே நிகர்த்த மேனி

மின்னையே நிகர்த்த சாயல்

பின்னையே நித்ய கன்னியே

கண்ணம்மா

மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீசநீ

கண் பாராயோ வந்து சேராயோ

கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்

மேவுமே இங்கு யாவுமே

கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா

என முராரி பாடிய பாடல் ராதாவின் காதில் இதமாக கேட்டது. காற்றும் பலமாக அவளைத் தீண்டியது.

பாடலின் வரிகள் அவள் மனதுள் மகிழ்ச்சியை உண்டாக்கி கண்கள் மூடி தூக்க கலக்கத்திலும் தன்னையும் மீறி இதழ் விரிய புன்னகைத்தவள்

”முராரி” என அழைக்க

”காலை வணக்கம் கண்ணம்மா” என பதில் வரவே திடுக்கிட்டு கண்கள் திறந்தவள் அரக்க பரக்க எழுந்து அமர்ந்தாள். அவள் கட்டிலில் படுத்திருக்க ஊஞ்சலில் அமர்ந்தபடி ஆடிக் கொண்டே அவளைப் பார்த்து சிரித்தான் முராரி, தாராவோ ஏற்கனவே எழுந்து குளித்து முடித்து தேவியுடன் காபி குடித்துக் கொண்டிருந்தாள். அந்த அறையில் முராரி, தேவி, தாரா அனைவரும் சிரிப்புடன் அமர்ந்திருக்க ராதா மட்டும் பேயைக் கண்ட பிள்ளை போல பயத்தில் உறைந்து இருந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "காணாய் கண்ணே..." - காதல் & சரித்திரம் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

”ராதா எப்படி என் பாட்டு சரியா பாடிட்டேனா, காலையில 5 மணியில இருந்து இந்த பாட்டை மனப்பாடம் பண்ணி உன் அக்கா தாராகிட்ட பாட்டு போல எப்படி பாடறதுன்னு கேட்டு அவளும் எனக்கு கத்துக்கொடுத்தா எப்படி அசத்திட்டேனா” என முராரி கேட்கவே அதற்கு பதில் சொல்லாமல் அவர்கள் மூவரையும் அச்சத்துடன் பார்க்க தேவியோ

”அய்யோ பாவம் ராதா, தூக்கத்தில இருக்காளா இல்லை பயத்தில இருக்காளா ஏன் இப்படி அவளோட முகம் வெளுத்துப் போச்சி” என தாராவிடம் கேட்க தாராவோ

”ராதா என்னாச்சி ஏன் பயப்படற, நாங்கதான் பேய் கிடையாது” என சொல்ல ராதாவோ சற்று கண்கள் மூடி மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவள் மெல்ல கண்திறந்து தாராவை பார்த்துச் சிரித்தாள்.

”என்ன அக்கா சீக்கிரமா எழுந்திட்டீங்க போல” என சொல்ல

”நீதான் லேட்டா எழுந்திருச்சிருக்க, இப்ப மணி 9 நைட்டெல்லாம் தூங்கலையா நீ” என கேட்க அவளோ மெல்ல எதையோ யோசித்தாள். இறுதியாக முராரியிடம் பேசிவிட்டு தன் அறையில் ஊஞ்சலில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தது மட்டும் நினைவுக்கு வரவே அவள் சந்தேகத்துடன் முராரியை பார்க்க அவனோ சிரித்தபடியே கண்அடித்து நான்தான் என்பது போல் சைகை செய்ய அவள் முறைத்தபடியே கட்டிலை விட்டு எழுந்து அவன் முன்  கோபமாக நின்றாள்

”ஓ ஏன் இந்த கோபம், நண்பன் மேல கோபப்படக்கூடாது தோழி ராதா” என அவன் ஏற்றி இறக்கி அன்பாகச் சொல்ல அவளோ குழம்பிப் போனாள். அவனின் பேச்சைக் கேட்ட தேவியும் தாராவும் கலகலவென சிரிக்க அவர்களை திரும்பிப் பார்த்த ராதா கோபத்தில்

”ஏன் சிரிக்கிறீங்க”

என கத்த தாராவோ

”உன் நட்பு வேணும்னு தவமா தவமிருந்தாரு முராரி, இப்ப என்னடான்னா உன்னை கலாய்க்கறாரே அதான் சிரிச்சேன்”

“அக்கா” என அவள் நொந்துக் கொண்டே கத்த

”சரி சரி இதப்பாரு சீக்கிரமா போய் ரெடியாகு, நாம வெளிய போலாம்”

“நான் எங்கயும் வரலை”

“அப்ப நல்லதா போச்சி தாரா, நீங்க தேவியோட கிளம்புங்க நான் ராதாகூட நட்பா பேசிக்கிட்டு இருக்கேன், அவளுக்கு போர் அடிக்காம நான் பார்த்துக்கறேன்” என முராரி சொல்லவும் ராதா அவனை முறைத்துவிட்டு

”நீங்க என்கூட நட்பா பேசுவீங்களா முடியுமா உங்களால” என கேட்க

”கொஞ்சம் கஷ்டம்தான் ஆனா முயற்சி செய்றேனே ராதா, தப்பு பண்ணா நண்பனை மன்னிச்சிடு அடிக்கலாம் தப்பில்லை” என அவன் சந்தோஷமாகச் சொல்ல அவளோ

”அக்கா நானும் உங்களோட வரேன்” என சொல்ல அதைக் கேட்ட முராரியோ

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - கலாபக் காதலா - 14 - சசிரேகாராஜேந்திரன் 2019-04-13 09:17
radhavukku love vandhathu ok but aval veetil ok sollvangala doubt radha murari lovenala 2 familykum problem conform :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கலாபக் காதலா - 14 - சசிரேகாvijayalakshmi 2019-04-12 19:07
nice update :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கலாபக் காதலா - 14 - சசிரேகாராணி 2019-04-12 11:22
சூப்பர் முன்பு முராரி மனசுல ராதா இருந்தாள் இப்ப ராதா மனசுல முராரி வந்தாச்சி இனி கதை கலக்கலா இருக்கப் போகுது குட்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கலாபக் காதலா - 14 - சசிரேகாmadhumathi9 2019-04-11 18:44
Haha radhaa kaadhalikkaaarambithu vittaal endru thaaan ninaikkiren appadithaane? (y) egarly waiting to read more. :thnkx: 4 this epi. :GL: sasi. :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top