(Reading time: 14 - 28 minutes)

“வெளியே வாங்க!” புரியாமல் இறங்கினான். அவன் அமர்ந்திருந்த ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள் அவள்.

“என்ன பண்ற?”

“எவ்வளவு தைரியம் இருந்தா, பாதியிலே வந்தவன் சொல்லுவீங்க? நான் உங்களை அப்படியா நினைத்தேன்? நான் அப்படி நினைத்தேன்னு உங்களுக்குத் தெரியுமா? தெரியாம எப்படி நீங்க சொல்லுவீங்க?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“இப்போ என்னப் பண்ண போற அதுக்காக?”

“இஷ்டத்துக்குப் பேசுனீங்க தானே! வீடு வரைக்கும் நடந்து வாங்க!” என்று காரை ஓட்டி விரைந்துவிட்டாள்.

“ஏ…அம்மூ!அம்மூ! நில்லும்மா!” அவனுக்கு இது நிச்சயம் தேவை தான்! அமைதியாக வந்திருக்கலாம். எனினும், அவளது இந்த செய்கை அவனை இரசிக்கவே தூண்டியது. புன்னகைத்துக் கொண்டான்.

“இவளுக்கு கார் ஓட்ட சொல்லிக் கொடுத்தது தப்பாப் போச்சு!” நகைத்துக் கொண்டான்.

“சார் ஆட்டோ?” ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அவன் கவனத்தை ஈர்த்தார்.

“மேப்பிள் ஸ்ட்ரீட்!” என்று ஏறிக் கொண்டான். சரியாக 15 நிமிடங்கள் பிடித்தன. நடந்து வந்திருந்தால் ஒரு மணி நேரம் ஆகி இருக்கலாம். அடித்துப் பிடித்து அவன் வருகையில், சமையலறையில் ஏதோ பணியாக இருந்தாள் சிவன்யா. இவன் வந்ததை கவனிக்கவே இல்லை.

“அவசரப்பட்டு தனியா விட்டுட்டு வந்துட்டோமோ? உண்மையிலே நடந்து தான் வராரா? வரட்டும்..! எத்தனைமுறை சொன்னாலும் திருந்த மாட்டார்ல,நடக்கட்டும்! பாதியிலே வந்தவராம்! நானும் அப்படி தானே! எனக்காக அவர் செய்யலை?உண்மையிலே என்னை யாரோவா தான் நினைக்கிறார் போல, அதான் இப்படி எல்லாம் பேசுறார்!” கண்கள் கலங்கிவிட்டன அவளுக்கு! என்றுமே இல்லாத முகவாட்டம், கண்ணின் ஈரப்பதம் அவனை கொன்று வாட்டியது. ஏதும் பேசாமல், அவன் சென்று பின்னால் இருந்து அவளை அணைத்துக் கொள்ள, ஒரு நொடி பதறிவிட்டாள் சிவன்யா. அவன் நடவடிக்கை அவளிடம் பெருந்தாக்கத்தை உண்டாக்கி இருந்தது. எனினும் ஏதும் பேசாமல் நின்றாள்.

“ஸாரிம்மா!” இருவருக்குள்ளும் இருந்த அன்பானது கரையை உடைத்துக் கொண்டு வெளியே வந்தது. மெல்ல அவளை நோக்கித் திரும்பியவள், அவன் கண்களை உற்றுப் பார்த்தாள். ஏதும் பேசவில்லை, சற்றே எக்கி, அவன் கன்னம் பற்றி, தன் காதலை மறைக்காமல் அவனது இதழ்களிடம் கூறினாள். எதிர்நோக்கா திருப்புமுனை! அவனது தயக்கங்கள் குற்றவுணர்வு அனைத்தையும் தவிடுப் பொடியாக்கியது அந்தத் திருப்புமுனை. காலம் கண்களை மூடிக் கொண்டது நாணத்தால்!! இருவரும் சுயத்தை உணர சில மணித்துளிகள் எடுத்துக் கொண்டன.

“நீங்க பாதியில வந்தவர் இல்லை. இனியாவது புரிந்துக்கோங்க!” அவன் விழிகளை நோக்க துணிவில்லாதவளாய் நிலம் நோக்கி கூறினாள்.

“என்னை மன்னித்துவிடுங்க! நான் உங்களை அப்படி இறக்கிவிட்டு வந்திருக்க கூடாது!”

“நான் அநாதை இல்லை!” புன்னகைத்தான் அவன். அந்தப்புன்னகை அவள் கேள்வி அனைத்திற்கும் விடை கூறியது.

“எங்க அம்மா தான் உன்னை அனுப்பி வைத்திருக்காங்க, எனக்காக!” அவளிடமும் புன்னகை!

“நீங்க எப்போதும் அநாதை இல்லை!” அவன் விழிகளின் கண்ணீரைத் துடைத்துவிட்டாள் அவள். காதலின் சாம்ராஜ்ஜியம் தனது அதிகாரத்தை இருவருக்குள்ளும் மிக ஆழமாய் நிலை நிறுத்தியது.

Episode 15

Episode 17

தொடரும்!

{kunena_discuss:1149}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.