Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 10 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 10 - சசிரேகா

Unnaiye thodarven naane

ட்டி

காலையில் 6 மணிக்கு எழுந்த மாதவி போட்டிக்கு பெயர் கொடுத்தவர்களை மட்டும் தேடிப் பிடித்து எழுப்பி ரெடியாகச் சொன்னாள்.

மாசியையும் எழுப்பி விட்டாள். அவனும் எழுந்து சரவணனை காணச் சென்றான். வண்டியில் படுத்திருந்தவனை கண்டு வண்டியை உலுக்கி கத்தி எழுப்பினான்

அண்ணா எழுண்ணாஎன கத்த வண்டி குலுங்கியதில் தூக்கம் கலைந்த சரவணனும் மெதுவாக எழுந்து அமர்ந்தான்.

என்னடா

கதவை திறண்ணாஎன கத்த அவனும் கதவை திறந்துவிட்டான்

அண்ணா டைம் ஆச்சாம், அண்ணி போட்டிக்கு ரெடியாகச் சொன்னாங்கஎன சொல்ல அவனும் சரியென்றான்.

நீ குளிச்சிட்டியாஎன தூக்க கலக்கத்தில் கேட்க அதற்கு மாசியோ

இன்னும் இல்லைண்ணா, உள்ள வாண்ணா, ரூம் இருக்கு குளிச்சிடலாம்என சொல்ல அவனும் இறங்கினான்.

ஏகப்பட்ட வேட்டிகளைப் பிரித்து வைத்த காரணத்தால் அதை எல்லாம் மாசியே எடுத்துக் கொண்டு லக்கேஜ்களுடன் முன்னாடி செல்ல சரவணன் மெதுவாக பின்னாடி நடந்து வந்தான்.

எதிரே மாதவி வர அவளை கண்டும் காணாமல் சரவணன் நடந்து செல்லவே மாதவிக்கு கஷ்டமாகிப் போனது.

ரூமிற்குள் சென்ற மாசியோ சரவணனிடம்

அண்ணா நீங்க குளிக்கறீங்களா, நான் குளிக்கட்டுமா

நீ முதல்ல குளிஎன சரவணன் சொல்ல மாசி குளிக்கச் சென்றான்.

10 நிமிடம் கழித்து பாத்ரூம் விட்டு வெளியே வந்தவன்

அண்ணா நீங்க போய் குளிச்சிட்டு வாங்க, போட்டி நடக்கற இடத்திலயே டீ, காபி, டிபன், லன்ச் எல்லாம் ஃப்ரீயா தர்றாங்களாம் அண்ணி சொன்னாங்க

சரி நான் குளிக்கிறேன் நீ கிளம்பு

சரிண்ணா அப்புறம் போட்டியில கலந்துக்காதவங்க ஊட்டியை சுத்திப் பார்க்கறாங்களாம், அதனால அவங்க பஸ்ல போறாங்களாம். போட்டியில கலந்துக்கிட்டவங்களுக்கு நம்ம வண்டியைக் கேட்டாங்க

யாரு

உன் மாமனார்

சரின்னு சொல்லி சாவியை கொடுத்துடு

நான்தான் டிரைவர்

சரி நல்லது ஆமா எத்தனை பேர் நம்ம வண்டியில வராங்க

நான் நீ அண்ணி, அண்ணியோட 2 ப்ரெண்ட்ஸ் அப்புறம் அண்ணியோட அம்மா அப்படியே அவங்களோட வந்த 3 பேர் அவ்ளோதான்என இயல்பாகச் சொன்ன மாசியை குழப்பமாக பார்த்த சரவணனோ

டேய் வண்டியில இடம் பத்துமாஎன்றான் சந்தேகமாக

அண்ணியை நீங்க உங்க மடியில உட்கார வைச்சிக்குங்க, நம்ம வண்டிதான் பெரிசா இருக்கே, முன்னாடி 3 பேர் கூட உட்காரலாம், பொண்ணுங்க எல்லாம் ஒல்லியாதானே இருக்காங்க பிரச்சனையில்லை, பின்னாடி 3 பேர்  அதுக்கு பின்னாடி 3 பேர் உட்காரலாம் ஒண்ணும் பிரச்சனையில்லைண்ணாஎன்றான் சிரித்துக் கொண்டே

சரிடா நீ அந்த வேலையை பார்த்துக்க, நான் குளிச்சிட்டு ரெடியாகி வரேன்என சரவணன் சொல்லவும் மாசியும் அறையை விட்டு வெளியேறிச் சென்றான் திருமாலைத் தேடி.

சரவணனோ தூக்க கலக்கத்துடன் குளிக்க சென்று 10 நிமிடத்தில் குளித்து முடித்து வெளியே வந்தவன் கண்ணாடி முன் நின்றான்.

ஏதோ வித்தியாசம் தெரியவே என்ன ஏது என பார்க்கலானான். உடம்பு அனலாக கொதிக்கவே நிற்க முடியாமல் தடுமாறினான். நேராக கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்.

மாதவியோ அனைவருக்கும் பல இன்ஸ்ட்ரக்ஷன்களை கொடுத்துக் கொண்டே அனைவரையும் பஸ்சில் அனுப்பி வைத்தாள்.

வெளியே மாசியோ தன் வண்டியில் அனைவரையும் ஏற்றிவிட்டு சரவணனுக்காக காத்திருந்தான். அவனிடம் வந்த மாதவி

என்னாச்சி அண்ணா யாரை தேடறீங்கஎன கேட்க

அண்ணா வரலையேம்மா

வண்டியிலயும் இடம் இல்லை போல இருக்கே

மடியில உட்கார்ந்தா சரியாயிடும்என சொல்ல சொப்னா உடனே

நான் ரெடிஎன கத்த மாசி அவளை பார்த்து முறைத்தான். பின்பு மாதவியிடம்

தங்கச்சி இது வேலைக்காகது பஸ்ஸூம் கிளம்பிடுச்சி, நீ போய் அண்ணனை என்னன்னு பார்த்துட்டு கூட்டிட்டு வா, நான் இவங்களை கூட்டிட்டு போட்டி நடக்கற இடத்துக்கு போயிடறேன். ஆமா முதல் போட்டி எப்ப ஆரம்பிக்குது

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 10 - சசிரேகாAdharvJo 2019-05-27 19:08
Ouch facepalm Inga vandhu pause pottutingale ji!! Confirm indha madhavi-ku indha padathai parthum onnum perusa FB pattri theriyavaradhu :yes: pina enavam Saravanan avalo solliyum illa ninga Swapna kaga vandhinganu sollurangale :o Anyway Saravanan got clarification abt Madhavi's family!!
aha aha masi oda kavithai :D irundhalum Saravanan masi-oda love spoil seithu irukka kudadhu steam
oru hr la fever ottitingale ji :P cool and interesting update ma'am :clap: :clap: waiting to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 10 - சசிரேகாராணி 2019-05-27 09:36
அருமையான பதிவு ஓவியத்திற்கு பின் இருக்கும் உண்மையை மாதவி அறிவாளோ நல்ல ஒரு திருப்பம் இனி மாதவியிடம் இருந்து என்ன பதில் வருமோ
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 10 - சசிரேகாmadhumathi9 2019-05-27 08:06
:dance: heymaadhavi manathil ullathu saravananukku therinthu vittathu.nice epi.eagarly waiting 4 next epi. :Q: maadhavikku antha ooviyaththai paarththu eadhaavathu niyaabagam varuma. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 10 - சசிரேகாதீபக் 2019-05-27 07:34
Sis today's episode is awesome. :clap: . Eagerly waiting for next episode :GL: .what is going to happen after seeing the drawing?.. :Q:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top