(Reading time: 11 - 21 minutes)

“ம்ச்ச். அந்தக் கும்பலுக்கு எல்லாம் நான் பயப்படலை சார். அவங்க இன்ட்டேன்ஷன் தெரிஞ்ச பின்னாடி நான் ஜாக்கிரதையா இருக்கணும் என்ற எண்ணம் தான்”

“தென், உன்னோட டென்ஷனுக்கு என்ன காரணம்?

“அதுவா ப்ரொபசர் சார் பேசினது தான் கொஞ்சம் கஷ்டமா இருந்துது அவர் இவ்ளோ எல்லாம் டென்ஷன் ஆக மாட்டார். எனக்கு ஐஞ்சு பேர பாடி கார்ட்டா போட்டு இருக்கார்னாப் பார்த்துக்கோங்க. அவரோட பில்ட் அப் எல்லாம் பார்த்தா என் இன்டெர்னல் மார்க்ஸ் எல்லாம் ஹோகயா ஹோகயான்னு டாடா காட்டிடுமோன்னு லைட்டா ஜெர்க் ஆகுது”

அவளின் மாடுலேஷனில் சிரித்தவன் ,

“ஓகே. காலையில் சரி ஆகிடுவார். “ என்று மட்டும் கூறினான்.

அப்போது மீண்டும் அந்த இசைக் கருவியின் ஒலிக் கேட்டது. அதன் சத்தத்தில் ப்ரித்வி, கிருத்திகா இருவருக்கும் ஏதோ சொல்லத் தெரியாத உணர்வு ஏற்பட்டது. இருவரும் சத்தம் வந்த திசையைப் பார்த்தனர். சத்தம் நிற்கும் மட்டும் அவர்கள் இருவருக்கும் சுற்றுப் புறம் தெரியவில்லை.

கிருத்திகா “அது என்ன சத்தம் இளவரசே?” என்று கேட்க, ப்ரித்வியும் தன்னை அறியாமல்  “அது நாகபாணியின் முழக்கம் தேவி” என்றுக் கூறினான்.

அவர்கள் பேசிக் கொண்டது அவர்களுக்கேத் தெரியவில்லை. சத்தம் நிற்கவும், ப்ரித்வி பாக்கெட்டில் உள்ள போன் ஒலிக்க, அதில் சுற்றுப் புறம் உணர்ந்தவன், கிருத்திகாவைப் பார்த்தான். அவள் இன்னும் சத்தம் வந்த புறமே திரும்பி இருக்க,

“கிருத்திகா , போய்ப் படுங்க” என்றான்.

அவன் குரலில் திரும்பியவள்விட்டுச் , “சரி “ என்றுத் தலையாட்டிச் சென்றாள். பின் மீண்டும் அவளை நிறுத்தி,

“நைட் தனியாக எக்காரணம் கொண்டும் ரூம் விட்டு வெளியே வர வேண்டாம். உங்களுக்கு அடுத்த ரூமில் தான் நான் இருப்பேன். எதுவும் பிரச்சினைனா என்னைக் கூப்பிடுங்க” என்றுக் கூறவும், அதற்கும் சரி என்று தலையாட்டியவள் கனவில் நடப்பது போல் நடந்தாள். அறைக்குள் வந்து படுத்தவளுக்குள், அந்த இசைக் கருவியின் சத்தமே காதில் ஒலித்துக் கொண்டு இருந்தது. வெகு நேரம் கழித்துத் தூங்க ஆரம்பித்தவள் கனவில் அன்றைக்குக் காலைக் கனவின் தொடர்ச்சி மீண்டும் ஆரம்பித்தது.

ற்புதாறான்யா மலை மேல் வீரர்கள் படைத்தளம் அமைக்கலாம் என்ற ப்ரிதிவிராஜின் கோரிக்கை ஏற்று , ராணாவும் தன் வீரர்களோடு அங்கே சென்றார்.

வீரர்கள் இளைப்பாறும் நேரத்தில் கிரண் தேவி தனியாகச் செல்வதைப் பார்த்துப் ப்ரித்விராஜ்ஜும் அவளைப் பின் தொடர்ந்தான். அவள் அருகில் செல்ல முயலும் போது எங்கிருந்தோ பறந்து வந்த அம்பு அருகில் இருந்த மரத்தில் பட்டுக் கீழே விழுந்தது.

அம்பு விழுந்த சத்தத்தில் திரும்பிய கிரண்தேவி அப்படியே அசையாமல் நின்றாள்.

ஏனெனில் அப்போதுதான் ப்ரித்விராஜை அவள் கவசங்கள் இல்லாமல் பார்த்தாள். ப்ரித்விராஜை பார்த்த சந்தர்ப்பங்கள் அனைத்துமே போர் பயிற்சி நேரங்களிலும், அது சம்பந்தமான வேலைகளிலுமே என்பதால், முன் பக்க முகம் மட்டுமேத் தெரியும்படி இருக்கும். உடல் முழுக்க இரும்புக் கவசங்கள் அணிந்து இருப்பான்.

தற்போது சற்று இளைப்பாற எண்ணிக் கவசங்களை எல்லாம் களைந்து விட்டு, வீரர்களைக் கால் தட்டாமல் இருக்கும் படி இருகால்களுக்கு இடையில் கொடுத்துக் கட்டிய ஆடையும், மேலே விலை மதிப்புள்ள அங்கவஸ்திரமும் மட்டுமே அணிந்து இருந்தான். ராஜபுத்திரர்களின் அடையாளமான தலைப் பாகை அணிந்து இருக்க, இடையினில் நீண்ட வாள் தொங்கிக் கொண்டு இருந்தது.

நீளமான கைகளில் இருந்த உறுதி, கால்களில் பாதரட்சை இல்லாததால் சிவந்த அந்தப் பாதங்களும் கண்டு கிரண் தேவியின் மனம் லயித்து நின்றது. பரந்து விரிந்த மார்பை அங்கவஸ்திரம் மறைத்து இருந்த போதும், நீண்டு தொங்கிய கைகளில் இருந்தக் காயங்கள் ப்ரித்விராஜின் வீரத்தைப் பறை  சாற்றின.

ப்ரித்விராஜின் தோற்றத்தில் மயங்கி நின்று இருந்த கிரண் தேவி ,

“தேவி , தங்கள் மேல் கத்திப் படவில்லையே?” என்றுக் கேட்டவுடன், தன் எண்ணங்களில் இருந்து வெளி வந்தாள்.

“இல்லை இளவரசே” என்றவள், அந்தக் கத்தி விழுந்த இடத்தைத் தேடிச் சென்றுப் பார்த்தாள்.    பிகானர் இளவரசரும் அவளோடு சென்றான்.

உள்ளங்கை அளவு உயரமான அந்தக் கத்தியின் கைப்பிடி இரும்பால் அல்லாமல் தங்கத்தால் இருக்கவும், இருவரும் கத்தி எறிந்தது யார் என்றுக் கண்டுப் பிடித்து விட்டனர்.

கிரண் தேவி சிந்தனையோடு

“இளவரசே , தாங்கள் கூறியது போல் முஹலாயர்களின் நடமாட்டம் இருக்கிறதாகக் காண்கிறதே” என்று கேட்டாள்.

“ஆம். இளவரசி. என்னுடைய யூகம் சரியே “ என்றவன் , சிந்தித்துக் கொண்டு இருக்கும்போதே , முதல் நாள் இரவில் இவன் உருவாக்கியப் படை வீரர்களில் ஒருவன் இன்னொருவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தான்.

அருகில் வந்த படைவீரன் தன் கண்களைக் கூட உயர்த்தாமல்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.