Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 05 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 05 - சசிரேகா

En ithayam kavarntha thamaraiye

ட்டன் சத்திரம்

சாவித்ரியின் குரலைக் கேட்டதும் குலை நடுங்கி நின்றான் வீரபாண்டியன். ஃபோன் கட்டானது கூட  தெரியாமல் இன்னும் காதிலேயே வைத்துக் கொண்டு இருந்தவன் முன்னாடி சிரித்த முகத்துடன் கையில் பால் டம்ளருடன் வந்து நின்றாள் தாமரை. அவளையே வெறிக்க வெறிக்க பார்த்தான் அவளோ வெட்கத்துடன்

இந்தாங்கஎன அவனிடம் டம்ளர் நீட்ட அவனோ அவளது முகத்தில் இருந்த மகிழ்ச்சியைக்கண்டு பெருமூச்சு விட்டவன் ஃபோனை எடுத்து பார்த்தான்.

அது கட்டாகியிருக்கவும் அமைதியாக போனை பாக்கெட்டில் வைத்துவிட்டு தாமரையின் கையில் இருந்த பாலை வாங்கினான்

பாலாஎன வெறுப்பாக கேட்க அவளும்

ஆமாம் பாதாம், பிஸ்தா எல்லாம் தட்டிப் போட்டு கொண்டு வந்திருக்கேன்என அவள் சிரித்த முகத்துடன் சொல்ல அவனோ

பாதாம் பிஸ்தாவா எதுக்கு

உங்க உடம்பு தேறனும்ல

உடம்பு தேறிஎன்றான் சந்தேகமாக அவளோ

சீய் போங்கஎன வெட்கப்பட்டு உள் அறைக்கு ஓட அவனோ வியப்பாகவும் குழப்பமாகவும் பார்த்தான்

எதுக்கு சீய்ங்கறாஎன நினைத்துக் கொண்டே பால் முழுவதும் குடித்து முடித்தவுடன் சண்முகம் வந்தார்

என்னப்பா பாண்டியா பால் குடிச்சிட்டியா சரி வா சாப்பிடலாம்

அது அப்புறம், உங்க கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும் வாங்க இப்படிஎன அவரின் கையை பிடித்து இழுக்க அவரோ

என்னப்பாஎன பதட்டமாக கேட்க அவனும் ஃபோனில் தன் அண்ணன் சொன்ன விசயம் தன் தாயின் கோபம் அனைத்தையும் சொல்லி முடித்து சோபாவில் சோர்வாக அமர சண்முகமும் என்ன செய்வது என புரியாமல் அவரும் சோர்வாக அவன் பக்கத்தில் அமர்ந்தார்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த தாமரையோ சோபாவில் சோகமாக அமர்ந்திருந்த தன் தந்தையையும் தன் கணவரையும் கண்டு வியந்தபடியே

அப்பா அப்பாஎன அழைக்க ஒரே சரியாக இருவரும் அவளைப் பார்த்து

என்னஎன கேட்கவும்

என்னாச்சி உங்க ரெண்டு பேருக்கும்என கேட்க அவர்களோ இல்லை என்பது போல் தலையை மட்டும் ஆட்டினார்கள்

சாப்பிட வாங்கஎன அழைக்க அவர்களும் ஆம் என்பது போல் தலையை ஆட்டவும் அவர்களை சந்தேகமாக பார்த்துக் கொண்டே கிச்சனுக்கு சென்றாள் தாமரை.

சில நிமிடங்களில் முதலில் இயல்புக்கு வந்த வீரபாண்டியனோ பக்கத்தில் சோகமாக அமர்ந்திருந்த சண்முகத்தைக் கண்டு அதிர்ந்தான்.

பெண்ணை பெற்றவருக்கு இவ்விஷயம் பேரிடியாக இருக்கும் என உணர்ந்தவன் மெதுவாக அவரிடம்

மாமா மாமாஎன மெதுவாக அவரது தோளை உலுக்கி அழைக்க அவரும் மலங்க மலங்க அவனை பார்த்து

என்னப்பா இப்படியெல்லாம் பிரச்சனை நடக்குதே, நான் பார்த்த மாப்பிள்ளை உன் முறைபொண்ணு கூடவா ஓடிப் போகனும், இப்ப எப்படி என் பொண்ணை உன் வீட்ல ஏத்துக்குவாங்கஎன்றார் கவலையாக, விட்டால் அழுது விடும் நிலைக்கு அவர் குரல் தழுதழுக்க பேச அதைக்கேட்ட வீரபாண்டியனோ

எல்லாம் யோசிச்ச பின்னாடிதானே நான் தாமரையை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் மாமா, நீங்க பயப்படாதீங்க கண்டிப்பா நான் தாமரையை விட்டுட மாட்டேன், அவங்களை நான் பத்திரமா பார்த்துக்கறேன் அவங்களுக்கு எந்த குறையும் வராதுஎன உறுதியாகச் சொல்ல அதைக்கேட்டு அவர் மனம் சற்று ஆறுதலானாலும்

ஆனாலும் உங்கம்மாஎன இழுக்க

நான் சரி கட்டறேன் முடிஞ்சவரைக்கும் பேசிப் பார்க்கறேன், புரிய வைக்கறேன், அப்படியும் சமாதானம் ஆகலைன்னா வேற வழிதான் யோசிக்கனும்என சொல்ல அவரோ

பாண்டியா நீ ஊருக்கு போகாத பாண்டியா, இங்கயே இரு, இந்த வீட்ல தங்க பிடிக்கலைன்னா வேணாம் பக்கத்துல வீடு எடுத்து தங்கிக்க, தனி குடித்தனம் நடத்துங்க, உன் வியாபாரத்தை இங்கயே வேணா வைச்சி நடத்துப்பாஎன அவர் பதட்டமாக பேச சாதாரணமாக இருந்திருந்தால் இதைக்கேட்டு கோபித்து இருப்பான் ஆனால் இது அவரின் மகளின் எதிர்காலத்திற்காக பேசவும் பரிதாபமேப் பட்டான்

மாமா நான் பார்த்துக்கறேன், தாமரைக்கு என் வீட்லதான் உரிமை அதிகம், தனிக்குடித்தனம் வைச்சா சரியா வராது எனக்கு நம்பிக்கையிருக்கு, நான் போய் அம்மாகிட்ட பேசறேன், அவங்க சரின்னு சொல்லிட்டா போதும் மத்தவங்க ஒரு கேள்வி கேட்காம எங்களை ஏத்துக்குவாங்க

ஆனா, அவங்கதான் கோபமா இருக்காங்களே, நான் வேணா கூட வரட்டுமாப்பா நான் பேசறேனே

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 05 - சசிரேகாsasi 2019-06-14 11:28
Quoting தீபக்:
Sis today's episode is fantastic with family sentiments :clap: . Vera Pandian express loves towards thamarai is super (y) . Over all episode is super. Eagerly waiting for next part :GL: .

நன்றி தீபக் :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 05 - சசிரேகாதீபக் 2019-06-13 18:30
Sis today's episode is fantastic with family sentiments :clap: . Vera Pandian express loves towards thamarai is super (y) . Over all episode is super. Eagerly waiting for next part :GL: .
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 05 - சசிரேகாmadhumathi9 2019-06-13 17:51
:clap: nice epi sasi.veerapandianukkum anbu vanthuvittathu. Magizhchi.adutha epiyil pandiyan ammavin kobam.thanthai, annan,anni,kuzhanthai ivargalin paasam ena kalavaiyaaga irukkumena thonuthu.eagarly waiting 4next epi. :thnkx: & :GL: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 05 - சசிரேகாsasi 2019-06-14 11:29
Quoting madhumathi9:
:clap: nice epi sasi.veerapandianukkum anbu vanthuvittathu. Magizhchi.adutha epiyil pandiyan ammavin kobam.thanthai, annan,anni,kuzhanthai ivargalin paasam ena kalavaiyaaga irukkumena thonuthu.eagarly waiting 4next epi. :thnkx: & :GL: (y)

நன்றி மதுமதி
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top