(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 10 - குருராஜன்

Enakena yerkanave piranthavan ivano

அனைவருக்கும் வணக்கம்! 'எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ' கதாசிரியர் குருராஜனுக்கு இந்த மாதம் இறுதியில் திருமணம் நடக்க இருக்கிறது 👫👫👫👫. அவருக்கு Chillzee டீம் மற்றும் வாசகர்கள் சார்பில் எங்களின் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்! 💥💥💥💥

கு ஆர்த்தியின் callஐ கட் செய்து விட்டு சற்று நேரம் தன் மனதுகுல்ஆர்த்தி சொன்ன யோசனை கூட நல்லா தான் இருக்கு. சீக்கிரம் அத நடத்திட வேண்டியதுதான். ஆனா அந்த பொண்ண எங்க, எப்படிப் பார்க்கிறது. அந்த பொண்ணு நம்பர் கூட நம்ம கிட்ட இல்ல. என்ன பண்றதுஎன்று யோசித்தான்.

டக் என்று போன் எடுத்து தன் தந்தைக்குக் கால் செய்தான். “அப்பா, எனக்கு அந்த பொண்ணு போன் நம்பர் வேணும்என்று கேட்டான்.

ரகு எந்த விவரமும் கூறாமல் பேச்சை துவங்கியதில், அவன் என்ன கேட்கிறான் என்று நாகராஜனுக்கு புரியவில்லை. “எந்த பொண்ணுடா என்ன போன் நம்பர்என்றார் நாகராஜன்.

அதான் பா அந்த பொண்ணு. நிலாஎன்று அதற்கு மேல் எதுவும் கூறாமல் நிறுத்தினான் ரகு.

அப்படி வாட என் மகனேஎன்று ரகு எதற்காகக் கேட்கிறான் என்பது தெரியாமல் மனதுக்குல் மகிழ்ந்து கொண்டார்.

ரகு எனகிட்ட நிலா நம்பர் இல்லையே பா. அவங்க அப்பா கிட்ட வேணுனா நீ கேட்கிறனு சொல்லி வாங்கி தரவாஎன்றார் நாகராஜன்.

இவரு வேற நாம எதுக்கு கேக்குறோம் நு தெரியாம பேசிக்கிட்டுஎன்று மனதில் நினைத்துக் கொண்டுஅதெல்லாம் ஒன்னுன் வேணாம் பா. அந்த பொண்ணு எங்க வேளை செய்றாங்க தெரியுமாஎன்றான் ரகு.

அது என்ன டா அந்த பொண்ணு, உரிமையோட வெண்ணிலானு சொல்லுடாஎன்றார் நாகராஜன்.

நம்ம நிலைமை தெரியாம இவரு வேற இன்னைக்கு இப்படி படுத்துறாரே என்று மனதில் நினைத்து கொண்டுஅப்பா, தெரிந்தா சொல்லுங்க பா. இல்லான பரவா இல்லை விடுங்கஎன்றான் ரகு.

இரு டா கோச்சிக்காதஎன்று நிலா வேளை செய்து இடத்தையும், company பேரையும் சொன்னார் நாகராஜன்.

அவருக்கு நன்றி கூறிவிட்டு callஐ கட் செய்துவிட்டு, தன் கை கடிகாரத்தை பார்த்தான் ரகு. 11 மணிதான் ஆகிறது. இன்னைகே போய் பார்த்துப் பேசிவிட வேண்டிதான் என்று முடிவு செய்து கிளம்பினான் ரகு.

அடுத்த 1 மணி நேரத்தில் நிலா வேளை பார்க்கும் அலுவலகம் முன்னால் நின்றான் ரகு.

அந்த அலுவலகத்தை கண்டு பிடிப்பதில் ரகுவிற்கு பெரிதாக எந்த சிரமமும் ஏற்படவில்லை. போகும் வழியில் என்ன பேசப் போகிறோம் என்று தன் மனதில் நிறையத் தடவை ஓட்டி பார்த்துக் கொண்டான் ரகு.

அலுவலகத்தின் உள்ளே சென்று, receptionஇல் முதலில் சரியான அலுவலகத்திற்கு தானே வந்திருக்கிறோம் என்று உறுதி செய்து கொண்டுமிஸ் நிலா, sorry வெண்ணிலாவை பார்க்கனும்என்றான்.

Receptionஇல் இருந்த பெண்நீங்க யாருநு தெரிஞ்சிக்கலாமா. என்ன விசயமா வெண்ணிலா மேடமை பார்க்கனும்என்றார்.

என் பேர் ரகுராஜன். நான் நிலாவிற்குஎன்று சற்று நிறுத்தியவன் என்ன சொல்வது என்று தெரியாமல், “நான் நிலாவிற்கு தெரிந்தவன். அவங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.” என்றான் ரகு.

அந்த பெண்ணுக்கு இவன் கூறியதில் நம்பிக்கை வந்ததாக அவனுக்கு தெரியவில்லை.

நீங்க வேணும்னா, நிலா கிட்ட ரகு வந்திருக்காருனு சொல்லுங்க. She knows me” என்று கூறினான் ரகு.

அந்த பொண்ணும் தன்னிடம் இருந்த telecomஇல் கால் செய்து யாரிடமே பேசிவிட்டு “sorry sir, நிலா மேடம் officeல இல்ல. இன்னைக்கு அவங்க client location போயிருக்காங்கஎன்றார்.

ரகுவிற்கு ஏமாற்றம். “எப்ப வருவாங்க நுஎன்று இழுத்தான் ரகு.

இல்ல சார், அது எங்களுக்கு தெரியாதுஎன்றார் அவர்.

சற்று நேரம் யோசித்துவிட்டு “if you don’t mind, நிலா number கிடைக்குமா. நான் அவங்களை contact பண்ணிக்கிறேன்என்றான் ரகு. எப்படியும் கிடைக்காது என்று அவனுக்குத் தெரியும், இருந்தாலும் ஒரு கல் எரிந்து பார்த்தான்.

அந்த பெண் ரகுவுவை தீவிரவாதியைப் பார்ப்பது போல் பார்த்து “இல்ல சார், அது எல்லாம் நாங்க share பண்ண கூடாதுஎன்றாள் ரகு நினைத்தது போலவே.

“its ok. புரியிது. Sorry for asking” என்று கூறி திரும்பினான். உடனே ஏதோ யோசனை வந்தவனாய் தன் walletஐ திறந்து, தனது visiting cardஐ எடுத்துமேடம் இது என்னுடைய card, மிஸ் நிலா வந்தாகனா எனக்குக் கால் பண்ண சொல்லுங்க. பிளிஸ்என்றான்.

அந்த பெண்ணும் அவன் cardஐ வாங்கி வைத்துக் கொண்டு சரி என்று அவன் கூறியதற்கு தலையாட்டினாள்.

ரகு அங்கிருந்து கிளம்பும் போது அவன் கை பேசி ஒலித்தது. அதை எடுத்துசொல்லு விவேக்என்று பேசினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.