(Reading time: 9 - 17 minutes)

Receptionஇல் இருந்த அந்த பெண் மதிய உணவிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். அங்கு இருந்த இன்னொருவரிடம், “நிலா மேடம் வந்த அவங்களுக்கு ஒரு visitor வந்தாங்க, இதுதான் அவர் card. கால் செய்யனுமாம். கொடுத்துவிடுஎன்று cardஐ கொடுத்துவிட்டு அவர் அங்கிருந்து சென்றார்,

சற்று நேரத்தில் நிலா தன் தோழி ஏதோ கூறியதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே officeகுல் நுழைந்தாள். அவள் reception area வந்ததும்நிலா மேடம்என்றார் அங்கிருந்த பெண்மணி.

“yes சொல்லுங்கஎன்று நிலா கேட்க, அந்த பெண்மணிஉங்களைப் பார்க்க visitor ஒருத்தர் வந்தார். Name ரகு. இந்தாங்க அவர் card” என்று கொடுத்தார்.

ரகு என்ற பேரைக் கேட்டவுடம் நிலா ஆவலானாள். உடனே அந்த cardஐ வாங்கி, வந்தவன் அவன் தான் என்று confirm செய்து கொண்டாள். “எங்க அவர்என்று தேடுவது போல் பார்த்துக் கொண்டே கேட்க, “அவர் கிளம்பிட்டார் போல மேம். உங்கள call பண்ண சொன்னார்என்று கூறிய அந்த பெண்மணி தன் வேளையைப் பார்க்கத் துவங்கினார்.

அருகில் இருந்த நிலாவின் தோழி “உங்க வீட்டில் உனக்குப் பார்த்திருக்கிற பையன் பேரும் ரகு தானேஎன்றாள்.

ஆமாம்என்று கூறிக் கொண்டே தன் கை பேசியை எடுத்து, கையில் இருந்த cardஇல் இருந்த ரகுவின் நம்பருக்கு கால் செய்தாள் நிலா.

ரகுவின் போன் பிஸி என்று வந்தது. மீண்டும் முயற்சி செய்தாள் அதே பதில் தான்.

அதற்குள் நிலாவுடன் வேளை பார்க்கும் மற்ற இரு தோழிகள் அங்கே வர “ஏய் நிலா வந்துட்டியா. இன்னைக்கு நான் lunch எடுத்துட்டு வரல. அதனால எதிரில் இருக்கும் கடைக்கு போலாம lunch சாப்பிடஎன்றாள்

நிலாவும் “சரி டி போலாம். நான் போய் fresh up பண்ணிட்டு, lunch bag எடுத்துட்டு வந்துடுறேன்என்று கூறிவிட்டு, போகும் போது மீண்டும் ஒரு முறை ரகு போனுக்கு try செய்தாள், மீண்டும் அதே பதில் தான்.

அடுத்த 15 நிமிடத்தில் நிலாவும் 4 தோழிகளும் எதிரில் இருந்த ஓட்டலில் இருந்தனர். ஓட்டல் சற்று காலியாகதான் இருந்தது. ஒரு ஓரத்தில் காதல் ஜோடி இருவர் அமர்ந்து பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டு சாப்பிட்டு கொண்டு இருந்தனர். இவர்கள் அமர்ந்திருந்த tableக்கு எதிரில் இருந்த tableஇல் இருந்த ஒருவன் menu cardகுல் தலையை விட்டு கொண்டு order கொடுத்துக் கொண்டிருந்தான்.

இவர்கள் ஐவரும் அமர்ந்து தான் வழக்கமாகச் சாப்பிடுவதை order செய்தனர்.

நிலாவும் தான் கொண்டு வந்த bag open செய்து, lunch boxஐ ஓபன் செய்தாள். அவளுக்கு உணவின் மீது கவனமே சொல்ல வில்லை.

வந்தது அவனாகத்தான் இருப்பானா, எதற்காக வந்திருப்பான். ச்சச பார்த்திருந்தா பிடிக்கலனு சொல்லிருக்கலாமே நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டோமேஎன்று மனதில் ஆயிரம் எண்ணங்கள் நீலாவிற்கு. அவள் அருகில் அமர்ந்திருந்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூட கவனிக்க வில்லை.

ஏய் நிலா என்ன டி ஆச்சி, இங்க நாங்க இவ்வளவு பேசிக்கிட்டு இருக்கோம். நீ என்ன அமைதியா இருக்கஎன்றாள் ஒருத்தி. அவளது பேச்சு நிலாவை சுய நினைவிற்குக் கொண்டு வந்தது.

நிலா வாய் திறந்து பதில் கூறுவதற்குல் “அது ஒன்னும் இல்ல டி. நாங்க client location போயிட்டு வரதுக்குல்ல, இங்க மேடமோட உட்பி வந்துட்டு போயிருக்காரு. பார்த்து ரொமேன்ஸ் பண்ண முடியலயேனு மேடம் ஒரே அப்சட்என்று கிண்டலாக பதில் கூறினாள் ஒருத்தி.

என்று மற்ற அனைவரும் ராகமாகப் பாடி நீலாவை கிண்டல் செய்தனர்.

கம்முனு இருடிஎன்று பதில் அளித்தவளை கையில் மெல்லமாக தட்டி விட்டுரொமேன்ஸும் இல்ல ஒன்னும் இல்ல. நானே அந்த பையன நேரில் பார்த்து இந்த கல்யாணத்தில் எனக்கு இஷ்டம் இல்லனு சொல்லனுனு இருந்தேன். அதற்குள் அவனே வந்திருக்கானா, நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டனேனு feelingல இருக்கேன்என்றாள் நிலா.

என்ன டி சொல்ற. ஏன் உனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்ல. பையன் அழகா இல்லையாஎன்றாள் ஒருத்தி.

அவன் போடோவை கூட நான் பார்க்கலஎன்று பதில் கூறினாள் நிலா.

“character எதுவும் சரி இல்லையாஎன்றாள் இன்னொருத்தி.

அதற்கு இல்லை என்று தலையாட்டினால் நிலா.

வேற என்னதான் பிரச்சனைஎன்றாள் மற்றொரு தோழி.

நீங்க கேட்ட எல்ல கேள்விக்கு என்னோட பதில், எனக்கு இந்த கல்யாணம் தான் பிடிக்கல. அந்த பையன் சிகப்பா, கருப்பா, அழக, இல்லையா, character எப்படி நு எனக்கு எதுவும் தெரியாது. அந்த பையன் போட்டோவ கூட நான் பார்க்களைஎன்று நிறுத்தினாள் நிலா.

அவளைச் சுற்றி இருந்த நால்வருக்கும் ஆச்சரியம். “என்ன டி சொல்ற. அந்த பையன பாக்கமலே ஏன் பிடிக்கலனு சொல்றாஎன்றாள் ஒருத்தி.

நா எங்க அந்த பையன பிடிக்கலனு சொன்னேன்என்றால் நிலா.

என்ன டி நிலா இப்படி குழப்புரஎன்றால் இன்னொரு தோழி.

நான் அந்த பையன வெறுகல டி. எனக்கு இந்த arrange marriage அதுதான் பிடிக்கல. ஒருத்தனைப் பற்றி நல்ல தெரிஞ்சிக்கிட்டு, அவனையே உருகி உருகி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கனும். அதுதான் எனக்கும் வேணும்என்றாள் நிலா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.